மேற்கு வங்காளத்தில் கடல் கொந்தளிப்பு: படகு கவிழ்ந்து 70 பேர் பலி?

Read Time:1 Minute, 27 Second

indea-flag.gifமேற்கு வங்காள மாநிலம் நயாசார் தீவு அருகே வங் கக் கடலில் நேற்று கடல் கொந்தளிப்பு அதிகமாக இருந்தது. காற்றும் பலமாக வீசியது. அப்போது மாலை 5.30 மணிக்கு குல்பி இடத்தில் இருந்து மேற்கு வங் காளத்தின் கிழக்கு மிட்னா பூர் மாவட்டத்தில் உள்ள நந்தி கிராம் நோக்கி ஒரு படகு சென்று கொண்டு இருந்தது. அதில் 77 பயணிகள் இருந்தனர்.

அந்த படகு கடல் கொந் தளிப்பில் சிக்கிக் கொண்டு தள்ளாடியது. காற்றும் பலமாக வீசியதால் படகு கவிழ்ந்தது அதில் இருந்த பயணிகள் கடலில் தத்தளித்தனர்.

அவர்களில் 7 பேர் மட்டும் நீந்தி கரை சேர்ந்தனர். படகு கவிழ்ந்தது பற்றி கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் இருட்டி விட்டது. மேலும் கடல் கொந்தளிப்பும் காற் றும் பலமாக வீசியதால் மீட்பு பணியால் சிரமம் ஏற்பட்டது.

தத்தளித்த 70 பயணிகளும் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இன்று காலையில் மீண்டும் கடற்படையினர் படகுகளில் சென்று தேடுகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தாய்லாந்தில் ராணுவ ஆட்சி மந்திரிகள் 2 பேர் கைது: பிரதமரை பிடிக்க தீவிரம்
Next post ஈராக்கில் 2 மாதத்தில் 6,600 பேர் படுகொலை – ஐ.நா.!