By 1 December 2018 0 Comments

கர்ப்பிணி பெண்கள் கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகள்!!( மகளிர் பக்கம் )

தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் அவர்களின் பூரணத்துவத்தை அடைவது என்றால் மிகையில்லை. பொதுவாக திருமணம் முடியும் வரை பெண்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளோடும், வாழ்க்கை பற்றிய கனவுகளோடும் இருந்தாலும் திருமணத்திற்குப் பின் ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பதே அவர்களின் மறுபிறவி என்கிறோம்.

ஆகவே தான் தாய்மையை, மனித இனத்தின் ஆதாரமான குழந்தைகளை வயிற்றில் சுமந்து பெற்றெடுக்கும் அன்னையரை அனைவரும் போற்றிப் புகழ்கிறோம். குழந்தையை வயிற்றில் கருவாக சுமந்த முதல் மாதத்தில் இருந்து புதிய உயிரை பெற்றெடுப்பது வரை எவ்வித சிக்கலும் இன்றி கர்ப்பிணிப் பெண்கள் சிறப்பான உணவு முறைகளையும், எளியவகையிலான உடற்பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். அதேநேரத்தில் மருத்துவர்களின் ஆலோசனைகளையும் தவறாமல் உரிய முறையில் கடைபிடித்தல் அவசியம்.

கர்ப்பிணிப் பெண்களுக்கான சில குறிப்பிடத்தக்க டிப்ஸ் இதோ…

* கர்ப்பம் என்பதை மருத்துவரிடம் உறுதிப்படுத்திய பின்னர், ஒவ்வொரு மாதமும் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்.

* அன்றாடம் குறைந்த அளவு உணவுகளை சிலமணி நேர இடைவெளி விட்டு அடிக்கடி சாப்பிடவும். 4 மணி நேரத்திற்கு அதிகமான இடைவெளி இருத்தல் கூடாது.

* ஒவ்வொரு முறை படுக்கையிலிருந்து எழும்போதும் கவனமாக பொறுமையுடன் எழுந்திருத்தல் வேண்டும்.

* தூங்கும்போதும் கூட உங்களுடன் பிஸ்கட் பாக்கெட்களை வைத்திருக்கவும். தூங்கி எழுந்தவுடன் சாப்பிடுவதற்கு ஏதுவாகும்.

* கர்ப்பமாக இருக்கும் போது முதுகுவலி ஏற்பட்டால், உடனடியாக வெந்நீர் பேக் கொண்டு வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுங்கள். உங்களின் முதுகுத்தண்டானது சுவரில் ஒட்டியிருக்கும்படி நின்றுகொண்டு சிறிதுநேரத்திற்கு அதே நிலையிலேயே இருங்கள். இதனால் முதுகுவலி நீங்கலாம்.
படுத்திருக்கும் போது உங்களின் கால்கள் உயர்வாக இருக்குமாறு தலையணைகளை வைத்துக் கொண்டு தூங்கலாம்.

* ஒரே நேரத்தில் அதிக அளவிலான சாப்பாட்டை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கவும்.

* நீங்கள் ஓய்வு வேண்டும் என்று நினைக்கும் போதெல்லாம் போதிய அளவு ஓய்வை எடுத்துக் கொள்ளுங்கள்.

* சற்றே எண்ணெய் குறைவான ஸ்நாக்ஸ் வகைகளை பயணத்தின் போது எடுத்துச் செல்லுங்கள். ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை கேரட், ஆப்பிள் அல்லது சாண்ட்விச் போன்றவற்றில் ஏதாவதொன்றை சாப்பிடவும்.

* சாப்பிடும் உணவை நுகர்ந்தபின் சாப்பிடுவதை தவிர்க்கவும். அது உங்களுக்கு உணவின் மீது அதிருப்தியை ஏற்படுத்தலாம்.

* தேவைப்பட்டால் முழங்கால்களுக்கு இடையே தலையணை ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். இப்படிச் செய்வதால் உங்களின் இடுப்பு மற்றும் முழங்கால்களில் ஏற்படும் அழற்சி சற்றே மட்டுப்படும்.

* தேவைப்பட்டால் எலுமிச்சம் பழம் ஒன்றை கையில் வைத்துக் கொண்டு நுகர்ந்து கொள்ளவும். இது வாந்தியைத் தவிர்க்க ஏதுவாகும்.

* இடுப்பை இறுக்காதவகையிலான தொழதொழப்பான (லூஸ்) ஆடைகளை அணிந்து கொள்ளப்பழகுங்கள்.

* மாலைக்குப் பின்னர் திரவ உணவு வகைகளை அதிகமாக எடுப்பதைத் தவிர்க்கவும். பகலில் அல்ல. அதேபோல் இரவில் காபி அருந்துவதையும் தவிர்த்தல் நலம்.

* பால் அல்லது மூலிகை கலந்த தேநீர் அருந்தவும்.

* முடிந்தால் சாப்பிட்டபின் சூயிங்கம் அல்லது மிட்டாய் போன்றவற்றை சிறிதுநேரம் மெல்லுங்கள்.

* பயணத்தின் போது நீண்டநேரம் உட்கார்ந்திருப்பதைத் தவிருங்கள். குறைந்தது ஒருமணி நேரத்திற்கு ஒருமுறையோ அல்லது இரண்டு மணி நேரத்திற்கு ஓருமுறையோ நடந்து உலவுங்கள். பெரும்பாலும் பயணத்தின் போது அவ்வப்போது கழிவறைக்குச் சென்று சிறுநீர் கழிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

* நிறைமாதத்தில் குழந்தைபிறப்பதற்கான வலி ஏற்படும் போது, முடிந்தால் சற்றே நடக்கலாம். இதன்மூலம் குழந்தை பிறப்பது சற்றே எளிதாகும்.

* கர்ப்ப வலி இருக்கும் போது சாப்பிடுதல் அல்லது திரவங்களைக் குடிப்பதால் குழந்தை பிறப்பது விரைந்து பலனைத் தரும்.

இதுபோன்ற தகவல்கள் என்பது பொதுவானவையே. இவற்றையெல்லாம் விட உரிய மருத்துவர்கள் மற்றும் வீட்டில் உள்ள தாதியர் அல்லது அனுபவம் மிக்கவர்களின் அறிவுரைப்படி செயல்படுங்கள். வளமான குழந்தையைப் பெற்று மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.Post a Comment

Protected by WP Anti Spam