By 22 September 2006

ஈஎன்டிஎல்எப்பின் நரித்தனமான தில்லுமுல்லும் திருகுதாளமும்…

ENDLF.Flag.bmpஇலங்கைத் தமிழர்களின் வாழ்வில் இந்தியா அமைதிப்படையின் துணையுடன் என்றால் மறக்கமுடியாத கறைபடிந்த ஆட்சியமைத்து படுகொலைகளையும் கற்பழிப்புக்களையும் அரங்கேற்றி தமிழர்களை கொள்ளையடித்துக் கொண்டு மறுகரைக்கு ஓடிய E.N.D.L.F அமைப்பின் தலைவன் பரந்தன் ராஐன் மீண்டும் நம்நாட்டில் தனது கொள்(கை)ளைகளை அறங்கேற்றும் நோக்கத்துடன் புலிகளில் இருந்து பிரிந்து கிழக்கு மக்களுக்காய் குரல்கொடுத்த கருணாஅம்மானை இரகசியமாக சந்தித்து ஒரு இரவில் கூட்டணி அமைத்து, கருணாஅம்மானின் உதவியுடன் தனது அராஐககுழுவினரை மீண்டும் குடியமர்த்த முயற்சி செய்தார்.

இதில் ஓரளவு வெற்றி பெற்ற பரந்தன்ராஐன் குழுவினர் இலங்கையில் தமக்கு அல்லாத செல்வாக்கை இருப்பதாகக் காட்டிக் கொள்ள இலண்டனில் இருந்து ஒலிபரப்பாகும் தமது பினாமியான ரிபிசி வானொலி மூலம் கருணாஅம்மானின் மாவீர நிகழ்வுகளை ஒலிபரப்பி கருணாஅம்மானின் வாயினாலேயே தமது கூட்டமைப்பைப் பற்றிய அறிக்கைகளை வெளியிட்டு மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற முயன்றனர்.

கருணாஅம்மானால் புலிகளுக்கு எதிரான தாக்குதல்கள் கிழக்கு இலங்கையில் முன்எடுக்கப்பட்ட பொழுது ENDLFம் இணைந்து அந்தத்தாக்குதல்களை நடத்தியதாக ரிபிசி வானொலிமூலமாக பிச்சாரம் செய்து புலி எதிர்ப்பாளர்களை தம்முடன் இணைக்க முயற்சிகளை செய்தனர்.

அதேநேரத்தில் ‘கருணாகுழுவினரும் இன்னொரு புலிகள், இவர்களும் அராஐகவாதிகள் தான்” என்று இரகசிய பிரச்சாரத்தை மேற்கொண்டு தமது செல்வாக்குகளை பெருக்க முயற்சி செய்து தமது கூட்டணிக்குள்ளேயே குண்டுவைத்தனர். (இவர்கள் பங்கேற்ற மற்றைய இயக்ங்களுக்கு உள்ளே இவர்கள் தமது சுயநலனுக்காக பல குண்டுகளை வைத்தனர்)

இவர்களினது இந்த முழுமுயற்சியும் கருணாஅம்மானை சுற்றி நிற்கக்காரணம். கருணாஅணியினர் அரசியல்தெளிவு அற்றவர்கள், இராணுவ பலமும் குறைவாகவே இருக்கும் குறுகிய காலத்தில் கருணாஅணியினரின் நடடிவடிக்கைகளை முடக்கிவிட்டு அவர்களையும் E.N.D.L.F என்ற கட்சிக்குள் அடக்கி மீண்டும் ஒரு அராஐக நிலையை அன்னியதேசத்தின் உதவியுடன் நிறுவி கொட்டமடிக்கலாம் என்ற தவறான எண்ணமே….

ஆனால் நடந்ததோ வேறு.. தற்பொழுது கருணாஅணியினருக்கு கிழக்கில் மட்டுமல்ல வடக்கிலும் செல்வாக்குப் பெருகி அவர்களையும் ஒரு சக்தியாகவே மக்கள் அங்கீகரித்து உள்ள நிலையில் ENDLFக்காக இந்தியாவில் இருந்து சென்ற சிலரைத் தவிர ஒரு இலங்கைத் தமிழ்மகன் கூட சேரவில்லை என்பது இவர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது.

இவர்கள் ஒன்றை புரிந்து கொள்ளவில்லை ‘பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டு விடுவதில்லை” இவர்கள் தமது கொள்(கை)ளைகளை நிறைவேற்றிவிட்டு அன்னிய இராணுவத்துடன் நாட்டைவிட்டே ஓடியபொழுது இவர்களின் முகாம்களை பார்வையிட்ட மக்கள் இவர்களின் முகாம்களில் இருந்த பிரீதி பெட்டிகளையும் ஆபாசவீடியோ கசெட்களையும் தமக்கு எடுத்துச் செல்ல முடியாத (அப்படியான பெரும் கொள்ளை) விலையுயர்ந்த பொருட்களையும் பார்த்து மிரண்டுபோன கதை சோழர்காலத்திலோ அல்லது சங்கிலியன் மன்னன் காலத்திலோ நடந்தது அல்ல இது குறுகிய காலத்தில்தான் நடந்தது. இவற்றை கொள்ளை அடித்வர்கள் மறக்களாம் ஆனால் மக்கள் ஒருபொழுதும் மறக்கவே மாட்டார்கள்.

இதில் முக்கியமாக இன்னொன்றைக் குறிப்பிட வேண்டும் இலங்கையில் நடைபெற்ற அராஐங்களுக்காக ரஐPவ்காந்தியைக் கொண்டதாக கூறும் புலிகள், ரஐPவ்காந்தி இந்திய அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பியவர் மாத்திரமே, ஆனால் இந்தியப்படையுடன் மோதலை ஆரம்பித்த புலிகளும் அதைப் பயன்படுத்தி தமது கொள்(கை)ளைக்காக தரகுவேலை பார்த்து இந்தியப்படையை தவறான பாதைக்கு தமது சுயநலத்திற்காக பயன்படுத்திய ENDLFம்மே உண்மையான கொலைகாரர்களும் தண்டிக்கப்பட வேண்டியவர்களும் ஆவர்.

இவற்றை மறந்த ENDLF இனர் தமது வளாச்சிக்கு தடையாக இருப்பது கருணாஅம்மான் அணியினரே என நினைத்து முதலில் கருணாஅம்மான் தரப்பினரின் ஈபிடிபியுடனான உறவை முறியடித்து EPRLF, PLOTE மற்றும் தளத்திலேயே இல்லாத EROS, ஐனநாயக ரெலோ ஆகிய இயக்கங்களின் உதவிகளை இரகசியமாக நாடினார்கள். இதில் EPRLFம், PLOTEம் விலகினார்கள் வெளிநாட்டில் மட்டும் அமைப்புக்களை நடத்தும் சில உதிரிகளுடன் சேர முயற்சி செய்தார்கள்.

அவர்களுக்கு இன்னும் ஒரு குறுக்குமூலையும் உதித்தது, மக்களுக்காக ஐனநாயக ரீதியாக போராடிய தமிழர் விடுதலைக் கூட்டணியை புலிகளிடம் அடகு வைக்காமல் தன்னம்பிக்கையுடன் போராடி வெற்றிபெற்ற தலைவர் ஆனந்தசங்கரி அவர்களைப் பயன்படுத்தி வெளிநாட்டில் தமது செல்வாக்கை உயர்த்த நினைத்தவர்கள் அவரை வெளிநாட்டுக்கு வரவழைத்து அவருக்கு மெய்ப்பாதுகாவலர் என்ற பெயரில் ENDLF அராஐகவாதியை நியமித்து வெளிநாடுகளில் இரகசிய கூட்டத்தை பூட்டிய அறைகளுக்குள் நடத்தினார்கள். அவருக்கு தாம் பக்கபலமாக இருக்கின்றார்கள் என்று சொல்லி அவரை நம்பவைத்து அவரது ஆதரவுகளை தமக்கு சார்பான சில உதிரிகளையும் இணைத்து செயல்பட முயற்சி செய்தனர்.

Nari.jpgஇருபது பேருக்கு ஒரு இயக்கம் அதற்கு ஒரு தலைவன் என்றால் தமிழர்களின் நிலைஎன்ன? நாட்டுக்கு ஓரிருவருடன் இயக்கம்(?) நடாத்திய ஈஎன்டிஎல்எப் வெளிநாடுகளில் ஆனந்தசங்கரி ஐயாவிற்கு கூடிய கூட்டத்தைக் கண்டதும் இவ்வளவு காலமும் தம்மை முதுகில் தூக்கிச் சென்ற கருணாஅம்மானை கைகழுவி விட்டு வெளியேறுவதாக அறிக்கையை வெளியிட்டு கருணாஅம்மானின் முதுகில் குத்தியுள்ளனர்.

இன்று ஆனந்தசஙங்கரி ஐயாவின் அகிம்சை போராட்டம் சகிப்புத்தன்மை நிதானம் போராட்டக்குணம் என்பவற்றின் பின்னால் தமது கறைபடிற்த கரத்தை மறைத்துவிட்டு மக்கள் புரட்சியாளர்களாக தம்மை வெளிக்காட்ட நினைக்கும் ஈஎன்டிஎல்எப் இனராகிய இவர்கள் தமதுவாழ் நாளிலோ அல்லது தமது காலத்திலோ இலங்கை தமிழ்மக்களுக்காக எந்தவொரு துரும்பையும் எடுத்துப் போடாமல் தமது உடல் உளபசிகளைத் தீர்த்துக் கொண்டவர்களே. இவர்களை ஆனந்தசங்கரி ஐயாவும் நம்பினால் இவர்கள் அவரை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிவார்கள் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை (நாய்வாலை நிமிர்த்தவே முடியாது)

இவர்கள் புலிகளுடனோ மற்றும் எவருடனோ (TULF, EPRLF, PLOTE, EPDP) கூட்டுச் சேர்ந்தாலும் அவர்களையும் தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள்.

— கரிகாலன், மட்டுநகர். -22.09.2006 —-

Thanks…WWW.ILAKKU.COM

(இதனை இலக்கு இணையத்தளத்தின் நிர்வாகம் கேட்டுக் கொண்டதற்கிணங்க எம்மால் பிரசுரிக்கப்படுகிறது. இதுகுறித்த விமர்சனங்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் விளக்கங்கள் எமக்குத் தரப்பட்டால் அதனையும் நாம் பிரசுரிப்போம். [email protected])Comments are closed.