By 9 December 2018 0 Comments

நடிகர் சங்க கட்டிடத்திற்கு ஜெயலலிதா பெயர்? (சினிமா செய்தி)

ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் நடிகர் விஷால் அஞ்சலி செலுத்தினார்.

ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் விஷால் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜெயலலிதாவுக்கு யாரும் மாற்று கிடையாது. ஜெயலலிதாவின் நினைவிடம் சிறப்பாக கட்டப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவது நல்ல விஷயம். இரும்பு பெண்மணி ஜெயலலிதாவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. நடிகர் சங்க கட்டிடத்திற்கு ஜெயலலிதா பெயரை சூட்டுவது குறித்து சங்க நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.



Post a Comment

Protected by WP Anti Spam