எய்ட்ஸுக்கு மருந்து கண்டுபிடிப்பு!!(மருத்துவம்)

Read Time:2 Minute, 57 Second

உயிர்க்கொல்லியான எய்ட்ஸ் நோய்க்கு இஸ்ரேலைச் சேர்ந்த ஜியோன் நிறுவனம் மருந்து கண்டுபிடித்துள்ளதாக அறிவித்திருக்கிறது.

எச்.ஐ.வி. வைரஸ் எய்ட்ஸ் பாதிப்புக்கு காரணமாக உள்ளது. இந்த வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவும் தன்மையுடையது. மனித உடலுக்குள் எச்.ஐ.வி. வைரஸ் வந்ததும் இனப்பெருக்கம் செய்து உடல் முழுவதையும் ஆக்கிரமித்துக் கொள்கிறது. இந்த வைரஸ் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை சிறிது சிறிதாக அழித்து விடுகிறது.

எய்ட்ஸால் உலகளவில் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் இறக்கின்றனர். இந்நிலையில் இந்நோயை குணப்படுத்தும் புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்த பயோடெக் நிறுவனமான ஜியோன் மெடிக்கல் நிறுவனம், கம்மோரா என்ற பெயரில் இந்த மருந்தை தயாரித்துள்ளது.

இந்த மருந்தின் மூலம் தொடர்ந்து 4 வாரம் சிகிச்சை எடுத்துக் கொண்டால் எச்.ஐ.வி. மற்றும் எய்ட்சை 99% அழித்து விடலாம் என்று ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது. முதன் முறையாக மனிதர்களிடம் வெற்றிகரமாக இந்த மருந்து பரிசோதிக்கப்பட்டுள்ளது. எச்.ஐ.வி. வைரஸ் மூலம் பெறப்பட்ட பெப்டைட்ஸ் என்ற புரதங்கள் மூலமாக இந்த மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது.

நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தி அவை செயல்படாத வகையில் இந்த மருந்து கட்டுப்படுத்துகிறது. இது எச்.ஐ.வி. உயிரணுக்களை கொல்லும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. எய்ட்ஸ் வைரசால் பாதிக்கப்பட்ட மனித செல்களில் புகுந்து அதன் டி.என்.ஏ.வை உடைக்கிறது.

இதனால் அந்த செல் வளர முடியாமல் வாழ்நாளை இழக்கும். வெறும் 4 வாரத்தில் பாதிக்கப்பட்ட அத்தனை செல்களையும் உயிரிழக்க செய்யும். கம்மோரா எச்.ஐ.வி. நோய்த் தொற்று பரவுவதை 99 சதவிகிதம் தடுப்பதாக ஜியோன் ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காற்றில் பறந்த ஹன்சிகாவின் மேலாடை பொது இடத்தில் நடந்த அசிங்கம்!!(வீடியோ)
Next post அயன் பட சூர்யாவை மிஞ்சிய பெண்கள் செய்ததை பாருங்க!!(வீடியோ)