ரஜினி ஆலோசனையின் பேரில் கழிப்பறைிகள்!!

Read Time:1 Minute, 54 Second

கிருஷ்ணகிரி மாவட்டம் ஆனந்தூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சரியான கழிப்பறை வசதி இல்லை. இது தொடர்பாக பள்ளி சார்பில் கழிப்பறை கட்டித்தருமாறு நடிகர் ரஜினி காந்த்துக்கு கோரிக்கை விடப்பட்டது.

இதைத்தொடர்ந்து ரஜினிகாந்த் ஆலோசனையின் பேரில் கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றமும், சிங்கப்பூர் ரஜினி மக்கள் மன்றமும் இணைந்து ரூ. 1 லட்சம் செலவில் கழிப்பறை கட்டிக்கொடுத்தனர். இதற்காக சென்னையில் உள்ள ரஜினி மக்கள் மன்ற தலைமை அலுவலகத்துக்கு நன்றி தெரிவித்து பள்ளி தலைமை ஆசிரியர் கடிதம் அனுப்பி உள்ளார்.

நெடுநாட்களாக சரியான கழிவறை வசதி இல்லாமல் அவதிப்பட்டுக்கொண்டு இருந்த எங்கள் பள்ளிக்கு நாங்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க சிங்கப்பூர் ரஜினி மக்கள் மன்றமும், கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றமும் இணைந்து சுமார் 1 லட்சம் மதிப்பீட்டில் நவீன கழிவறையை இலவசமாக கட்டிக்கொடுத்து உள்ளனர்.

இதற்காக எமது பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் ரஜினி காந்த்துக்கும், சிங்கப்பூர் மற்றும் கிருஷ்ணகிரி ரஜினி மக்கள் மன்றத்துக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post Boriska செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்தாக கூறும் இளைஞன்! (வீடியோ)
Next post ஜெயலலிதா வாழ்க்கை படம் – சசிகலா வேடத்தில் சாய் பல்லவி !! (சினிமா செய்தி)