ஆண்களுக்கு முடி கொட்டுவது ஏன்?! (மருத்துவம்)

Read Time:12 Minute, 30 Second

பெண்களுக்கு முடிகொட்டுவதற்கான பிரத்யேக காரணங்கள் அதற்கான தீர்வுகளைப் பார்த்தோம். ஆண்களுக்கும் இந்த தலையாய பிரச்னை இருக்கிறது. ஆனால், காரணம் வேறு.ஆண்களுக்கு ஏற்படும் வழுக்கையையும், முடி கொட்டுதலையும் இளவழுக்கை அல்லது வழுக்கை ஏற்படுதல் என்கிறோம். இந்தியாவில் 30-50 வயது வரையில் உள்ள ஆண்களில் 50% சதவிகிதம் வரை இந்தப் பிரச்னையால் பாதிக்கப்படுவதாக ஒரு ஆய்வு சொல்கிறது. அது மட்டுமின்றி வயது கூடக்கூட இந்தப் பிரச்னையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது.

ஆரம்பத்திலேயே முடிகளில் வளரும் நிலைகள் பற்றி பார்த்தோம். அதில் வளரும் பருவம் Anagen என்றும் அது 2 முதல் 6 அல்லது 7 வருடம் வரை இருக்கும் என்றும் பார்த்தோம். Catagen என்ற இடைப்பட்ட பருவத்தில் முடி வளர்ச்சியில் பின்னடைவு (Regress) இருக்கும். பொதுவாக ஒன்றிரண்டு வாரம் வரை இது இருக்கும். அதன்பின், Telogen ஓய்வெடுக்கும் பருவம் 5-6 வாரங்கள் முதல் 100 நாட்கள் வரையிலும் இருக்கும். இந்த பருவத்தில் முடி Terminal வகையிலிருந்து விட்டமும் நிறமும் குறைந்த மெல்லிய Vellus முடியாக மாறும். அப்படி மாறிய தலைமுடி பின்பு கொட்டிவிடும்.

இந்த இளவழுக்கையில் Anagen Phase வருடங்கள் குறைந்துபோய், Telogen Phase நாட்கள் அதிகமாகிவிடும். முடியின் நீளத்தை நிர்ணயிப்பது Anagen Phase-தான். இந்த அனெஜன் Phase குறையக் குறைய முடியின் நீளமும் குறைந்துபோவதுடன், ஒவ்வொரு வளர்ச்சி பருவம் நடக்க, நடக்க அது மெதுவாக Vellus முடியாக மாறி விடுவதால் வழுக்கை உண்டாகிறது.வழுக்கை ஏன் உருவாகிறது?ஆண்களுக்கான ஹார்மோனில் மிகவும் வீரியமிக்கது Dihydro Testosterone. இந்த ஹார்மோன் அளவும், அது செல்களில் உட்காரும் Receptor -களின் அளவும் வழுக்கையால் பாதிக்கப்படுபவர்களின் முன்னந்தலையில் அதிகமாக உள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

இந்த ஹார்மோன் முடிகளின் வேர்களில் இயங்கும்போது முடிகளின் வளர்ச்சி பருவங்களை மாற்றி அமைத்து வழுக்கையை ஏற்படுத்தி விடுகின்றன. இந்த ஹார்மோன்கள் மட்டுமில்லாமல் வேறு சில ஹார்மோன்களும் முடிகளை இயக்கும் Gene-களை பாதித்து விடுவதால் வழுக்கை ஏற்படுகிறது. இதுமட்டுமல்லாமல், தலைமுடிகளின் வேரில் ஏற்படும் அழற்சியும் (Inflammation) மற்றும் சில சுற்றுச்சூழலில் உண்டாகும் மாற்றங்களும் ஆண்களுக்கு வழுக்கை ஏற்பட காரணமாகிறது.

மேலும் Propionibacterium Species, Staphylococcal Species, Malassezia Species மற்றும் Demodex போன்ற கிருமிகளில் இருந்தும் வெளியேறும் நச்சுப் பொருட்கள் முடிகளின் வேரில் அழற்சியை ஏற்படுத்தலாம். அதுபோல முடிகளின் வேரில் உள்ள செல்கள், மட்டமான காஸ்மெட்டிக் பொருட்களின் உபயோகத்தினால் உண்டாகும் வேதியியல் அழற்சி, தலைமுடியில் உபயோகப்படுத்தப்படும் ஜெல்கள், தலையில் படியும் மாசுகள், வெயிலினால் சேதங்களை உண்டாக்கும் Radical Oxygen Species மற்றும் Nitric Oxide ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு, முடிகளின் வளர்ச்சி பருவங்களில் மாற்றம் உண்டாகியும் வழுக்கை ஏற்படலாம் என்றும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

குடும்பத்தில் யாருக்கேனும் வழுக்கை இருந்தால், அவரைத் தொடர்ந்து ஒருவருக்கு வழுக்கை உண்டாகும் என்ற கருத்து இருந்தது. ஆனால், சுற்றுப்புறச்சூழல் மற்றும் நாம் உபயோகப்படுத்தும் பொருட்களும் வழுக்கைக்கான காரணத்தை தூண்டி விடலாம்’ என முக்கியமான கருத்தை ஆராய்ச்சி முடிவுகள் நமக்குத் தெரிவிக்கின்றன. மரபியல் காரணங்களால் உண்டாகக்கூடிய Predisposition to baldness தவிர, நம்முடைய தவறான செய்கைகளும் இந்த gene mutation-களை ஏற்படுத்தி விடலாம் என்றால், இயற்கை நமக்கு கொடுத்திருக்கும் கூந்தலை எந்த அளவிற்கு, மதிப்புடனும், மரியாதையுடனும் கையாள வேண்டும்.

Health is a crown which can be seen by unhealthy People என்ற பழமொழி உள்ளது. ஆகையால், கிடைப்பதையெல்லாம் கூந்தலில் தடவுவதையும், சாப்பிடுவதையும் தவிர்த்துவிட்டு ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை எப்பொழுதுமே கடைப்பிடிக்க வேண்டும். இந்த இன்டர்நெட் உலகில் தவறான வாட்ஸ் அப் தகவல்கள் மற்றும் வீடியோக்கள் பதிவுகளால் நாம் எல்லோரும் எப்பொழுதும் தொடர்ந்து தாக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறோம். அதை எதையுமே உடனே நம்பிவிடாமல், கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்று உணர்ந்து நடக்க வேண்டும். ‘எங்கேயோ இருக்கும் காடுகளில் உள்ள மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட எண்ணெய்’ போன்ற விளம்பரங்களைக் கண்டு ஏமாறாதீர்கள்.

இதற்கான வைத்தியம் என்ன?

முதலில் எவ்வளவு நாட்களாக முடி கொட்டுகிறது என்பதை கண்டறிய வேண்டும். முன் வாரங்களில் சொல்லியிருந்ததுபோல் Telogen Effluvium- ஆல் முடி கொட்டுகிறதா? என்பதையும் கண்டறிய வேண்டும். Telogen Effluvium என்பது உளவியல் தொடர்பாக ஏற்படும் முடி இழப்பு. இத்துடன் வேறு ஏதேனும் நோய்களுக்கு மாத்திரைகள் உட்கொள்கிறார்களா என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், சில வகை மாத்திரைகள்கூட முடி உதிர்வை ஏற்படுத்தலாம். ஆரோக்கியமான உணவு பழக்கம் அவசியம். சிலர் உணவுக்கட்டுப்பாட்டில் இருப்பவர்களாக இருப்பார்கள்.

Crash Diet மேற்கொள்கிறார்களா என்பதை பார்க்க வேண்டும். புகை பிடிக்கும் பழக்கம் ரத்தக்குழாய்களை பாதிப்பதுபோல முடியின் Micro- circulation-ஐயும் பாதிக்கலாம். தலையில் பொடுகு அதிகம் இருந்தால் அதற்கான வைத்தியமும் அவசியம். வெயிலிலேயே சுற்றிக் கொண்டிருப்பவர்களுக்கு புற உதா கதிர்களினால் தலைமுடியின் வேர்கள் சேதமடையலாம். இப்படி பல காரணங்கள் உள்ளன. இவற்றைப் பற்றியெல்லாம் அறிந்து கொண்டு, பின்னர் சிகிச்சையை ஆரம்பிப்போம்.

வழுக்கை வைத்தியத்தின் ஆணி வேர் Minoxidil லோஷன். இந்த லோஷனை தடவியவுடன் உடம்பில் Minoxidil Sulphate -ஆக மாறி, செல்களில் உள்ள பொட்டாசியம் சேனல்களைத் திறப்பதன் மூலம், ரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி வளர்ச்சியைத் தூண்டும். இது தவிர செல்களில் சில வளர்ச்சி காரணிகளின் (Growth Factors) அளவையும் அதிகப்படுத்துகிறது. முதலில் சில வாரங்களுக்கு முடி கொட்ட ஆரம்பித்து, முடியை வளரும் பருவத்திற்கு மாறச் செய்யும். அதனால் முதல் சில வாரங்களுக்கு இதை உபயோகிக்கும்போது முடி அதிகம் கொட்டலாம்.

அதைக்கண்டு பயப்படாமல், தொடர்ந்து உபயோகிக்க வேண்டும். ஆறு மாதம் வரை தொடர்ந்து உபயோகித்தால்தான் அதன் பலன் தெரியும். சிலருக்கு ஆறு மாதம் உபயோகித்தாலும் பலன் கிடைக்காது. இந்த மருந்து அவர்களது உடலில் Minoxidil-லில் இருந்து Minoxidil Sulphate -ஆக மாறாமல் இருந்தாலும் பலன் இருக்காது அல்லது பல நாட்களாக வழுக்கை இருந்தாலும், முடியின் வேர்கள் அழுத்தமாகி, Fibrose ஆகிவிடும். அவர்களுக்கு மருந்து தடவியும் பயன் இருக்காது. அதனால், இளவழுக்கை ஆரம்பித்தவுடனேயே சிகிச்சையை தொடங்கிவிட வேண்டும்.

பக்க விளைவுகள்

Hypertrichosis அதிகப்படியான முடி முளைக்கும் பிரச்னையை ஏற்படுத்தும். எனவே, தேவையில்லாத இடங்களில் மருந்து படாமல் கவனமாகத் தடவ வேண்டும். Irritant அல்லது Allergic Contact Dermatitis- இந்த மருந்துடன் இருக்கும் Propylene Glycol அலர்ஜி ஏற்படலாம்.டெஸ்டோஸ்ட்ரோனை (Testosterone) வீரியமுள்ள டைஹைட்ரேடெஸ்டோஸ்ட்ரோனாக (Dihydrotestosterone) மாற்ற 5- Alpha reductase என்ற என்சைம் வேண்டும். இதில், I மற்றும் II என இரண்டு வகை உள்ளது. இந்த இரண்டில் Type II 5 Alpha reductase முடியின் வேரில் வேலை செய்து, Dihydrotestosterone-ஐ உருவாக்கும்.

இதை தடுக்கும் TypeII 5- alpha reductase inhibitor தான் இந்த Finasteride மாத்திரை. இந்த மாத்திரை வழுக்கை தலை மோசமாவதை தடுக்க உதவுகிறது. ஆகையால், வழுக்கைத்தலை சிகிச்சையில் முக்கியமான மாத்திரையாகும். இந்த இரண்டை தவிர, இரும்புச்சத்து மாத்திரைகள், செம்பருத்தி, Retinoid-கள், Lanatoprost, Aminexil, கிரீன் டீ, Ketoconazole, Zinc pyrithione, Caffeine, வைட்டமின் மாத்திரைகள் போன்றவையும், இந்த சிகிச்சையில் கொஞ்சம் உதவுகின்றன.

சில வகை லேசர்கள் 650-900 nm முடி வளர உதவுகின்றன. இவை எதுவுமே வேலை செய்யவில்லையென்றால், விக் போன்றவற்றையும் பயன்படுத்திக் கொள்ளலாம். கடைசி தேர்வாக, முடி மாற்று அறுவை சிகிச்சை (Hair Transplantation) செய்துகொள்ளலாம். முடிமாற்று அறுவை சிகிச்சையிலும், பல முறைகள் இருக்கின்றன. அவை, Follicular Unit Extraction, Strip Method, Follicular Unit Transplant மற்றும் Robotic Hair Restoration போன்றவை.

வழுக்கை ஏற்பட்டால், பாதிக்கப்பட்டவர் மனரீதியாகவும் பாதிக்கப்படலாம் என்பதால், அவர்களுக்கு மருந்துகள் வாழ்நாள் முழுவதும் உபயோகப்படுத்த வேண்டியிருக்கும் என்பதை புரிய வைக்க வேண்டும். அறுவை சிகிச்சையும் எல்லோருக்கும் செய்துவிட முடியாது. பின் மண்டையில் தேவையான அளவு முடி இருப்பவருக்கு மட்டுமே அறுவை சிகிச்சை பலனளிக்கும். அதன்பின்னரும், மருந்து, மாத்திரைகள் தொடர்ந்து உபயோகித்து வர வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திம்பு பேச்சுவார்த்தை (4)!!! (கட்டுரை)
Next post அன்பும் அக்கறையும் மட்டுமே வேண்டும்! (அவ்வப்போது கிளாமர்)