கற்றாழை!! (மருத்துவம்)

Read Time:5 Minute, 9 Second

கற்றாழை இயற்கையின் அதிசயம். பல நோய்களை தீர்க்கும் மருந்துதன்மை கற்றாழையில் உள்ளது. கிராமப்புறங்களில் இயற்கையாக வளரும் கற்றாழையில்தான் எத்தனை மருத்துவ குணங்கள்.கற்றாழையில், சோற்று கற்றாழை, சிறு கற்றாழை, பெருங்கற்றாழை, பேய் கற்றாழை, கருங்கற்றாழை, செங்கற்றாழை, ரயில் கற்றாழை என பல வகை உண்டு. இதில் சோற்று கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது.உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் காஸ்மெட்டிக் பொருள் தயாரிப்பிலும், மருந்து உற்பத்தியிலும் கற்றாழை பெரும் பங்கு வகிக்கிறது.

இதில், சிறு கற்றாழை மருத்துவத்திற்கும், காஸ்மெட்டிக் பொருள் தயாரிப்பிலும் முதலிடம் பெறுகிறது. சிறு கற்றாழை, சோற்று கற்றாழை என இரண்டு வகைகளும் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. சோற்று கற்றாழை மடல்களை பிளந்து நுங்கு சுளைபோல உள்ள சதைப்பகுதியை, சிறு சிறு துண்டுகளாக வெட்டி நன்நீரில் 7 – 10 முறை நன்றாக கழுவி எடுத்துக்கொண்டு மருந்தாக பயன்படுத்தலாம். கற்றாழையை கையால் தொட்டால் வாய் கசக்கும் என்பார்கள். கழுவி சுத்தம் செய்தால், கற்றாழையின் குமுட்டல் குணமும், கசப்பும் குறைந்துவிடும்.

சோற்று கற்றாழை வேர்களை, சிறு சிறு துண்டுகளாக வெட்டி சுத்தம் செய்து, இட்லி பானையில், பால் ஆவியில் வேக வைத்து எடுத்து, நன்கு காயவைத்து, பொடி செய்து வைத்துக்கொண்டு, தினசரி ஒரு தேக்கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், தாம்பத்திய உறவு மேம்படும். இது, தாம்பத்திய உறவுக்கு சக்தி கொடுக்கும் நிகரற்ற மருந்தாகும்.சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையின் சதைப்பகுதியை சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து, அதில் சிறிது படிக்கார தூளை தூவி வைத்திருந்தால், சோற்றுப்பகுதியில் உள்ள சதையின் நீர் பிரிந்து விடும்.

இந்த நீருக்கு சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து நீர் சுண்ட காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு, தினசரி தலைக்கு தடவி வந்தால் கூந்தல் நன்றாக வளரும். நல்ல தூக்கம் வரும்.கண்களில் அடிபட்டதாலோ, இதர காரணங்களாலோ கண் சிவந்து வீங்கியிருந்தால் கற்றாழை சோற்றை வைத்து கட்டி, இரவு தூங்கினால் வேதனை குறையும். மூன்று தினங்களில் நோய் குணமாகும்.

கற்றாழை சோற்றில் சிறிது படிகாரத்தூள் சேர்த்து, ஒரு துணியில் முடிச்சு கட்டி, தொங்க விட்டு ஒரு பாத்திரத்தை வைத்து நீர்சொட்டுவதை சேகரித்து வைத்துக்கொண்டு, இதை சொட்டு மருந்தாக கண்களில் விட்டு வந்தால், கண் நோய், கண்களில் அரிப்பு, கண் சிவப்பு மாறும்.மூலிகை குளியல் எண்ணெய் தயாரிக்க, சோற்று கற்றாழையின் சோற்றுப்பகுதியை அரை கிலோவும், ஒரு கிலோ நல்லெண்ணெய் சேர்த்து, கடும் வெயிலில் 30 தினங்கள் வைத்து எடுத்து, வடிகட்டிக்கொள்ள வேண்டும். எண்ணெய் பசுமை நிறமாக மாறிவிடும். இதில், தேவையான வாசனையை கலந்து வைத்துக்கொண்டு, குளியலுக்கு பயன்படுத்தினால் குளிர்ச்சி தரும் ஆயில் ஆகும்.

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், தழும்புகள், வெயில் பாதிப்புகளால் உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழை சாற்றை தினமும் தடவி வர, நல்ல குணம் கிடைக்கும்.ஆண்கள் சவரம் செய்யும்போது ஏற்படும் கீறல்கள், காயங்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்க கற்றாழை சாற்றை பயன்படுத்தலாம். தீக்காயங்களுக்கும்கூட கற்றாழைச்சாறு சிறந்த மருந்து.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பபுக் புயல் தாக்கியது !! (உலக செய்தி)
Next post காய்ச்சலா பதற வேண்டாம்!!(மகளிர் பக்கம்)