3 அமைச்சர்கள் இராஜினாமா !! (உலக செய்தி)
அசாமில் முதல் அமைச்சர் சர்பானந்தா சோனோவால் தலைமையில் பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. மத்திய அரசு இந்திய குடியுரிமை திருத்த மசோதாவை நிறைவேற்றியதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் கணபரிஷத் கட்சி பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து விலகியது.
இதைத் தொடர்ந்து நேற்று அம்மாநில அரசில் அமைச்சர்களாக இருந்த அசாம் கணபரிஷத் கட்சியை சேர்ந்த அதுல் போரா, கேசவ் மஹந்தா, பானிபூஷன் சவுத்ரி ஆகியோர் தங்கள் மந்திரி பதவியை இராஜினாமா செய்தார்கள். முதல் அமைச்சர்கள் தங்கள் இராஜினாமா கடிதத்தை கொடுத்தனர்.