தமன்னா இடை பெற 5 வழிகள்! (மகளிர் பக்கம்)

Read Time:2 Minute, 44 Second

டீன் ஏஜ் பெண்கள் நயன்தாரா அல்லது தமன்னா போல இடை வேணும்ன்னு நினைப்பது இயல்பு. அது எல்லாருக்கும் சாத்தியமாகாது. காரணம் ஒவ்வொருவரின் உடல் அமைப்பு மாறுப்படும். உடலமைப்புக்கு ஏற்ப எடை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்ந்தாலே போதும். ஜீரோ சைசில் இருக்கும் பெண்கள் பார்க்க ஒல்லியாக இருப்பார்கள், அரோக்கியமாக இருப்பார்களா என்பது தான் கேள்வி.

உடலமைப்புக்கு ஏற்ற எடையுடன் ஆரோக்கியமாக இருக்க சில டிப்ஸ்…

உணவு : சாப்பிடாமல் இருந்தால் எடை அதிகமாகுமே தவிர குறையாது. சாப்பிடமல் இருப்பதால் உங்களின் மெட்டபாலிசம் குறைத்து உடலில் அதிக அளவு கொழுப்பு சேரும். உணவில் பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்துக் கொள்வதன் மூலம் மெட்டபாலிசம் சீராக வைத்துக் கொள்ளலாம். நம் உடலுக்கு எல்லா விதமான உணவுகளும் அவசியம். எல்லா உணவையும், அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

உடற்பயிற்சி : ஒருவரின் வயசு மற்றும் உடல்நிலைக்கு ஏற்ப தினமும் உடற்பயிற்சி செய்யவேண்டும். சர்க்கரையின் அளவினை கட்டுப்பாட்டில் வைக்கும். உடற்பயிற்சி மூலம் ஏற்படும் வியர்வை நச்சுக்களை வெளியேற்ற உதவும்.

தண்ணீர் : தினமும் போதிய அளவு தண்ணீர் குடிப்பதால், உடலின் தட்ட வெப்பம் ஒருநிலை ப்படுத்தப்படும். உடல் எடையும் குறையும். உடலை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்வதால், சருமம் பளபளப்பாகும். தலைமுடியும் நன்கு வளரும்.

தூக்கம் : ஒருவர் குறைந்த பட்சம் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும். நம் உடலுக்கு ஓய்வு மிகவும் அவசியம். குறைந்த நேரம் தூங்குவதால் உடல் பருமன் பிரச்னை ஏற்படும்.

தொலைக்காட்சி : டி.வி பார்க்கும் போது அல்லது லேப்டாப்பில் வேலை செய்யும் போது, நிறைய சாப்பிட தோன்றும். விளைவு உடல் பருமன். உணவை சாப்பிட்ட பிறகு டி.வி பார்க்கலாம். லேப்டாப்பில் வேலை செய்யலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காய்ச்சலை தணிக்கும் கோரை கிழங்கு!! (மருத்துவம்)
Next post தாம்பத்திய உறவில் கொக்கோகம் காட்டும் வழி!! (அவ்வப்போது கிளாமர்)