கிச்சன் டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)

Read Time:3 Minute, 4 Second

துவையல் தேவைக்கு அதிகமாக இருந்தால் குறிப்பிட்ட அளவில் தோசை மாவை எடுத்து அதில் துவையலை கலக்கி தோசையாகச் சுட்டு விடுங்கள். வித்தியாசமான ருசி தரும்.
– ஆர்.அஜிதா. கம்பம்.

சேனைக்கிழங்கை தோல் சீவி துண்டுகளாக்கி அத்துடன் சிறிது எலுமிச்சை பழச்சாறு சேர்த்து வேக வைத்து பாருங்கள். சீக்கிரமே வெந்திடும்.
– தஞ்சை ஹேமலதா, வெண்டையம்பட்டி.

தோசை மிருதுவாக பூப்போல இருக்க தோசை மாவில் சிறிதளவு சாதம் வடித்த கஞ்சியை சேர்த்து தோசையை வார்த்தால் தோசை பூப்போல இருக்கும்.
– கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன் புதூர்.

கொழுந்து வெற்றிலை, சுண்ணாம்பு சிறிது சேர்த்து அரைத்து நகச்சுற்று உள்ள இடத்தில் கட்டினால் விரைவில் குணம் தெரியும்.
– சண்முகத்தாய், சாத்தூர்.

சிறிது வாழை மட்டை, இஞ்சி இரண்டையும் தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்த பின்பு, அந்த எண்ணெயில் பலகாரங்கள் செய்தால் பலகாரங்களில் எண்ணெய் அதிகம் தங்காது.
– ஆர்.அம்மணி ரெங்கசாமி, தேனி.

இட்லி மாவில் தண்ணீர் அதிகமாகி விட்டால் ஜவ்வரிசியை தூள் செய்து உடன் சேர்க்கலாம். மாவு கெட்டியாவது மட்டுமில்லாமல் இட்லியும் மிருதுவாக இருக்கும்.
– ஆர். ஜெயலட்சுமி, திருநெல்வேலி.

கேக் மிருதுவாகவும் சுவையாகவும் இருக்க

* மைதாவை சேர்த்த உடனேயே பேக் செய்துவிட வேண்டும் இல்லை என்றால் கடினமாகி விடும்.
* கேக் ரெடியான உடனேயே அவனிலிருந்து எடுக்கக் கூடாது. சிறிது நேரம் அந்த சூட்டிலேயே வைக்க வேண்டும்.
* கேக் ரெடியானவுடனே சூடாக கவிழ்க்கக் கூடாது. கேக் உடைந்துவிடும்.
* கப் அளவுகளை கடைபிடிக்கும்போது அழுத்தியும், சலித்தும் அளக்கக் கூடாது.
* எவ்வளவுக்கெவ்வளவு வெண்ணெய், சர்க்கரையை நுரைக்க அடிக்கிறோமோ அந்த அளவுக்கு கேக் சாஃப்டாக இருக்கும்.
* ஐசிங் செய்யும்முன் கேக் மீது சர்க்கரை தண்ணீரைத் தடவி பின் ஐசிங் செய்யலாம்.
* ப்ளம் கேக் செய்யும்போது பருப்புகளை மைதா தூவி கலக்க, அடியில் தங்காமல் எல்லா இடத்திலும் பரவி இருக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வைரலாகும் பிரியா வாரியரின் டாட்டூ !! ( சினிமா செய்தி)
Next post எப்படி மக்களை ஏமாற்றுகிறார்கள் மந்திரவாதிகள்?(வீடியோ)