ஓட்டலில் உணவு சப்ளை செய்யும் ரோபோக்கள்! (உலக செய்தி)

Read Time:1 Minute, 24 Second

ஹங்கேரி நாட்டின் தலைநகரம் புடாபெஸ்டில் ஒரு தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.டி. கம்பெனி) ஒரு ஓட்டல் தொடங்கி உள்ளது. அதில் 16 முதல் 20 ‘ரோபோ’க்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளன.

அவை அங்கு சாப்பிட வரும் வாடிக்கையாளர்களுக்கு ஆர்டர் செய்யும் உணவு வகைகளை பரிமாறுகிறது. வேண்டிய பானங்கள் மற்றும் தண்ணீரை சப்ளை செய்கிறது.

ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு வழிகாட்டுகிறது. அவர்களுடன் உரையாடுகிறது. குழந்தைகள் மற்றும் பெரியவர்களுடன் நடனம் ஆடி மகிழ்விக்கிறது.

இதனால் ஓட்டலுக்கு வருகை தரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ‘ரோபோக்’களின் சேவை தொடருமானால் மக்களுக்கான வேலை வாய்ப்பில் பாதிப்பு ஏற்படும் என்ற எதிர்ப்பும் எழுந்துள்ளது.

அதற்கு பதில் அளித்த ஓட்டல் நிர்வாகம் பணி புரியும் ‘ரோபோ’க்களை இயக்க தொழில் நுட்ப நிபுணர்கள் பலர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் என தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எப்படி மக்களை ஏமாற்றுகிறார்கள் மந்திரவாதிகள்?(வீடியோ)
Next post விஸ்ணு சிலை வெற்றிகரமாக பாலத்தை கடக்கும் திக் திக் நிமிடத்தை பாருங்கள்!! (வீடியோ)