அமெரிக்காவில் கடும் குளிர் – 8 பேர் பலி!! (உலக செய்தி)

Read Time:2 Minute, 7 Second

அமெரிக்காவின் மத்திய மேற்கு மாகாணங்களில் வரலாறு காணாத வகையில் உயிரை உறையவைக்கும் கடும் குளிர் நிலவுகிறது. ஆர்ட்டிக் வானிலையின் விளைவால் கடுமையான பனிப்பொழிவு நிலவுவதால் பல்வேறு மாகாணங்கள் முடங்கி உள்ளன.

குறிப்பாக இல்லினாய்ஸ் மாகாணத்தின் சிகாகோ நகரில் அண்டார்டிகாவை விட கடுமையான குளிர் நிலவுகிறது. அங்கு மைனஸ் 30 டிகிரி செல்சியசாக வெப்ப நிலை உள்ளது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கி போய் உள்ளது. சிகாகோ உள்பட பல்வேறு நகரங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என தேசிய வானிலை நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடும் குளிர் காற்று வீசுவதால் சில நிமிடங்களிலேயே குளிர்நடுக்கம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்துக்கு விளைவிக்கும் சூழல் நிலவுவதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பனிப்பொழிவு மற்றும் கடும் குளிருக்கு இதுவரை 8 பேர் பலியாகி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் குளிர் தொடர்பான நோய்களுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

குளிரை தாங்கும் வகையில் ஆடைகளை அணிந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனால் சிகாகோ நகரில் கம்பளி ஆடை அணிந்து செல்பவர்களிடம் மர்ம நபர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி அவர்களின் ஆடைகளை பறித்து செல்லும் சம்பவங்கள் நடப்பதாக பொலிசார் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாயகியின் வெளிநாட்டு பயணத்துக்கு இது தான் காரணமாம்! (சினிமா செய்தி)
Next post பன்றி கறியை ஏன் சாப்பிட கூடாது இஸ்லாம் கூறும் உண்மை…!! (வீடியோ)