கட்டிடம் இடிந்து விழுந்ததில் 21 பேர் பலி!! (உலக செய்தி)

Read Time:1 Minute, 29 Second

துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரின் கர்தால் மாவட்டத்தில் ஏழு மாடி கட்டிடம் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த அடுக்குமாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 3 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவித்தன. இதற்கிடையே, மேலும் 11 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், இஸ்தான்புல் நகரில் ஏழு மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக, மீட்புக்குழு அதிகாரிகள் கூறுகையில், கட்டிடம் இடிந்து விழுந்ததில் இதுவரை 21 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என தெரிவித்தனர்.

கட்டிட விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர்களை துருக்கி ஜனாதிபதி தயீப் எர்டோகன் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பன்றி காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டியது!! (உலக செய்தி)
Next post இலங்கையில் 3000 அடி ஆழத்தில் ராவணனின் மாளிகை கண்டு பிடிப்பு!! (வீடியோ)