கர்ப்பக்கால சர்க்கரை நோய்! கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்!! (மருத்துவம்)

Read Time:4 Minute, 44 Second

கர்ப்பக்காலத்தில் சர்க்கரை நோய் வந்து, பின் பிரசவத்துக்கு பிறகு தானாக சரியாகிவிடும். ஆனால் சிலர் கவனமாக இருக்க வேண்டும். அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம். கர்ப்பக்காலத்தில் சர்க்கரை நோய் வந்து, பின் பிரசவத்துக்கு பிறகு தானாக சரியாகிவிடும். இதைக் கர்ப்பக்கால சர்க்கரை நோய் (Gestational Diabetes) என்பார்கள்.

கர்ப்பிணி பெண்கள் தங்களுடைய கர்ப்பக் காலத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். இதனால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு சர்க்கரை நோய் வராமல் பாதுகாக்க முடியும். தாய், சேய் என இரண்டு உயிர்கள் வெவ்வேறாக இருந்தாலும் தாயின் ஆரோக்கியமின்மை குழந்தையைப் பாதிக்கும்.
ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டுமெனில், தாய் போதுமான அளவு இன்சுலின் சுரப்பும், சரியான ரத்த சர்க்கரையும் இருக்க வேண்டியது அவசியம். இந்த இன்சுலினிலும் ரத்த சர்க்கரையிலும் சிக்கல்கள் இருந்தால் அவர்களுக்கு கர்ப்பக்கால சர்க்கரை நோய் இருக்கிறது என அர்த்தம்.

குழந்தை வயிற்றில் கருவாக தோன்றும்போது நஞ்சுக்கொடி மற்றும் நஞ்சுப்பை தோன்றி, குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கின்றது. கரு உற்பத்தி மற்றும் வளர்ச்சிக்குத் தேவைப்படும் சில ஹார்மோன்கள் தாயின் இன்சுலின் சுரப்பைத் தடை செய்வதுடன் இன்சுலின் கிரகிக்கும் செல்களின் ஆற்றலையும் குறைக்கின்றன.

கர்ப்பக்கால ஹார்மோன்கள் தாயின் இன்சுலின் சுரப்பில் தடை ஏற்படுத்துவதால், தாயின் சர்க்கரை அளவு அதிகரிக்க நேரிடுகிறது. குழந்தை வளர்ச்சிக்குத் தேவையான, அதிகப்படியான ஆற்றலை செல்கள் உற்பத்தி செய்ய வேண்டியுள்ளதால் இன்சுலின் தேவையும் அதிகரிக்கிறது. கர்ப்பக்கால ஹார்மோன்களின் மாறுபாட்டால், செல்களால் இன்சுலினை பயன்படுத்த இயலாமல் போய்விடுகிறது. இதுவே கர்ப்பக்கால சர்க்கரை நோய்க்கு ஒரு முக்கிய காரணம்.

* நடுத்தர வயதில் குழந்தை பெற்று கொள்ளும் தாய்மார்கள், இவர்களுக்கு பிறக்கும் குழந்தையும் சர்க்கரை நோய் தாக்கத்தால் பாதிக்கலாம்.

* தாயின் ரத்தத்தில் உள்ள சர்க்கரை, குழந்தையின் நஞ்சுப் பையைத் தாண்டி செல்வது போல், இன்சுலின் செல்களால் நஞ்சுப்பையை தாண்டி செல்ல இயலாததால், தாயின் ரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பது போல கருவில் உள்ள குழந்தையின் ரத்தத்திலும் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது.

* இதற்காக கருவில் உள்ள குழந்தையின் கணையம் ஆரம்பக் காலத்திலே அதிகமான அளவு இன்சுலினை சுரக்க வேண்டியுள்ளது.

* இதனால் கிடைத்த ஆற்றலானது கொழுப்பு செல்களாக குழந்தையில் தோலுக்கு அடியிலும், கல்லீரலும் சேமிக்கப்படுகிறது. இதனால் வயிற்றுக்குள் குழந்தை எடை அதிகரித்து கொழு கொழுவென்று மாற ஆரம்பிக்கிறது.

* இவ்வாறு கொழு கொழு குழந்தை பிரசவத்துக்குப் பின் வெளியே வந்ததும், திடீரென ரத்த சர்க்கரை அளவு குறைந்து இன்சுலின் சுரப்பு அதிகரித்து, மூச்சுத் திணறலுக்கோ அல்லது குறை ரத்த சர்க்கரை நோயுக்கோ ஆளாகிறது.

* இதனால் கர்ப்பக்கால சர்க்கரை நோய் உள்ள தாயுக்கும் பிறந்த குழந்தைக்கும் தொடர் மருத்துவ சிகிச்சை அவசியம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சௌந்தர்யா முதல் கணவர் தற்போதைய நிலை !! (வீடியோ)
Next post அழகான உறுதியான தலைமுடிக்கு ஆலோவேரா!(மகளிர் பக்கம்)