நைஜீரிய கிராமங்களில் கிடந்த 66 இறந்த உடல்கள் கண்டெடுப்பு!! (உலக செய்தி)

Read Time:2 Minute, 11 Second

நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில், 22 குழந்தைகள் மற்றும் 12 பெண்களின் உடல்கள் உள்பட, 66 பேரின் இறந்த உடல்களைக் கண்டுபிடித்துள்ளததை அந்நாட்டு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

´குற்றப்பின்னணி உடையவர்களால்´ கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள காவல் அதிகாரிகள், கொல்லப்பட்டவர்கள் குறித்த விவரங்களையோ, கொலைகளுக்கான நோக்கம் என்ன என்பதையோ இதுவரை உறுதிசெய்யவில்லை.

மத ரீதியான மோதல்களால் இந்தக் கொலைகள் நடந்திருக்கலாம் என ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

இன்று, சனிக்கிழமை, நைஜீரியா தேசியத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்க உள்ள நிலையில், நேற்று, வெள்ளிக்கிழமை, இந்த உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

76 வயதாகும் நைஜீரிய அதிபர் முகமது புகாரி மீண்டும் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

நைஜிரியாவின் கதுனா மாகாணத்தில் அமைந்துள்ள குஜுரு பகுதியில் இருக்கும் எட்டு வெவ்வேறு கிராமங்களில் இந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மாகாண அரசு தெரிவித்துள்ளது.

காவல் அதிகாரிகள் இது தொடர்பாக கைதுகளை மேற்கொண்டுள்ளதாக அம்மாகாண ஆளுநர் நசீர் எல்-ரூஃபியா கூறியுள்ளார்.

பதில் தாக்குதல் நடத்த வேண்டாம் என்று பாதிக்கப்பட்ட சமூகக் குழுக்களை சேர்ந்தவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள அவர், சந்தேகிக்கப்படும் நபர்கள், அவர்களின் நோக்கங்கள் ஆகியவை பற்றி எதையும் தெரிவிக்கவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இரவு பார்ட்டிகளில் கற்பை இழந்த 5 நடிகைகள்!! (வீடியோ)
Next post இப்போது குழந்தைப்பேறு வேண்டாமா? (மருத்துவம்)