சிறந்த ஆட்சியை தருவது யார்? 83% பேர் ஆதரவு – புதிய தகவல்!

Read Time:2 Minute, 35 Second

பாராளுமன்ற தேர்தலில் சிறந்த ஆட்சியை தருவது யார் என்ற தலைப்பில் சமீபத்தில் ஆன்லைன் மூலம் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

பெப்ரவரி 11 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை சுமார் 2 இலட்சம் பேரிடம் ஒன்லைன் மூலம் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. 9 மொழிகளில் நடத்தப்பட்ட இந்த கருத்து கணிப்பில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அதற்கு சுமார் 2 இலட்சம் பேர் ஒன்லைனிலேயே பதில் அளித்தனர்.

இந்த கருத்து கணிப்பில் பாராளுமன்ற தேர்தலில் சிறந்த ஆட்சியை தருவது யார் என்று கேட்கப்பட்டிருந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடிக்கு 83 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2 வது இடத்தில் உள்ளார். அவருக்கு 8.33 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கு 1.44 சதவீதம் பேரும், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதிக்கு 0.43 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். 5.9 சதவீதம் பேர் மற்ற தலைவர்கள் பிரதமராக ஆதரவு தெரிவித்துள்ளனர்.

2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ராகுல் காந்தியின் செல்வாக்கு அதிகரித்துள்ளதா என்ற கேள்விக்கு ராகுல் செல்வாக்கு அதிகரித்திருப்பதாக 31 சதவீதம் பேரும், அதிகரிக்கவில்லை என்று 63 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அல்லாத அரசு அமைய வேண்டும் என்று 3.47 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

5 வருடம் நடந்துள்ள மோடி ஆட்சி மிகவும் நன்று என 59.51 சதவீதம் பேரும், நன்று என 22.29 சதவீதம் பேரும், பரவாயில்லை என 8.25 சதவீதம் பேரும், மோசம் என்று 9.9 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடலுக்கும் மனதிற்கும் அமைதி தரும் யோகாசனம்!! (மகளிர் பக்கம்)
Next post நடிகை செல்போனை முடக்கிய விஷமிகள் !! (சினிமா செய்தி)