இந்த வார்த்தையை சொன்னால் சிக்கன் லெக் பீசில் 10 ரூபாய் தள்ளுபடி! (உலக செய்தி)

Read Time:1 Minute, 53 Second

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14 ஆம் திகதி பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய தற்கொலைத் தாக்குதலில், துணை இராணுவப் படையைச் சேர்ந்த 40 வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகின்றனர். போராட்டம், கடையடைப்பு என தொடர்ந்து எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரில் உள்ள சிறு உணவக உரிமையாளர், பாகிஸ்தான் எதிர்ப்பை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்தி உள்ளார். தள்ளுவண்டியில் வைத்து சிக்கன் வறுவல் வியாபாரம் செய்து வரும் அவர், ‘பாகிஸ்தான் ஒழிக’ என கூறும் வாடிக்கையாளர்களுக்கு சிக்கன் லெக் பீசில் 10 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “மனிதநேயத்தை பாகிஸ்தான் ஒருபோதும் மதிப்பதில்லை. மதிக்க விரும்புவதும் இல்லை. அதனால் தான், பாகிஸ்தான் ஒழிக என அனைவரும் சொல்ல வேண்டும் என்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளேன்’ என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுநீரக கற்களை கரைப்பதற்கான மருத்துவம்!! (மருத்துவம்)
Next post ஜானுசிரசாசனம்!! (மகளிர் பக்கம்)