பெண்களை பாதிக்கும் நோய்கள்!! (மகளிர் பக்கம்)

Read Time:8 Minute, 46 Second

அல்சைமர் நோய் பெரும்பாலும் முதுமையில் ஏற்படும் ஒரு நோய். இது பெண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது. மூளையில் உள்ள உயிரணுக்கள் சிதைவடைவதால் ஞாபக மறதி, நினைவாற்றல் மாற்றம், தாறுமாறான நடத்தைகள், உடல் செயலிழப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. பொதுவாக இந்நோய் மெதுவாக ஆரம்பித்து நாட்பட நாட்பட மோசமான நிலைமைக்குச் செல்கின்றது.

சமீபத்திய நிகழ்வுகளை நினைவில் வைத்துக்கொள்ளச் சிரமப்படுவது இந்நோயின் ஆரம்பக்கட்ட அறிகுறிகளில் ஒன்று. இந்த நோயாளிகள் நீண்ட நாள் நண்பர்கள் பெயர்களையும், முகவரிகளையும் சாலைகளின் பெயர்களையும் பிறவற்றையும் கூட மறந்து விடுகிறார்கள். அதிகரித்துக்கொண்டே செல்லும் இந்த மூளை நோயால் நினைவாற்றலையும் சிந்தனை திறனையும் பாதிக்கப்பட்டவர்கள் இழக்க நேரிடுகிறது.

அல்சைமர் வியாதி ஒருவருக்கு உள்ளதா என்று எப்பொழுது சந்தேகப்பட வேண்டும்?

அல்சைமர் அறிகுறிகள்

ஞாபகமறதி.

* தெரிந்த வேலைகளை கூட இந்த நோய் வந்த பின்னர் சரியாக செய்ய முடியாது. பல வருடங்களாக நன்றாக சமைத்து வந்த பெண்மணி அல்சைமர் பாதிப்புக்கு பின் சமைக்கத் தெரியாமல் திண்டாடுவார்.
* தெளிவாகக் கோர்வையாக அர்த்தமுடன் பேச மாட்டார்கள்.
* தன்னைப் பற்றியும் சூழலைப் பற்றியும் தெரியாது.
* பல வருடங்களாக டாக்ஸி ஓட்டும் டாக்ஸி டிரைவருக்கு இந்த பிரச்னை ஏற்பட்ட பின்னர் நாம் எங்கு இருக்கிறோம். தன் வீட்டுக்கு எப்படி செல்வது என்று கூட தெரியாது.
* நல்லது எது? கெட்டது எது என்று அவர்களால் தீர்மானம் எடுக்க முடியாது. நாம செய்கிற விஷயம் சரி தானா இல்லையா என்று அவர்களுக்குத் தெரியாது.
* ஒன்றை புரிந்து கொண்டு அதனுடன் தொடர்புடைய மற்ற விஷயங்களை சிந்திக்க முடியாது.
* தெருவில் நடந்து செல்லும் போது ஒரு பள்ளம் இருந்தால் அங்கே பள்ளம் இருக்கிறது… அந்த பள்ளம் எவ்வளவு ஆழமாக இருக்கிறது என்பதை உணர அவர்களால் முடியாது.
* மறதியாக பொருட்களை மாற்றி வைத்துவிட்டு தேடிக்கொண்டே இருப்பார்கள். வண்டி சாவி, பேனா போன்றவற்றை எங்கேயாவது வைத்து
மறந்து விட்டு வேறு இடத்தில் தேடிக்கொண்டு இருப்பார்கள்.
* திடீரென்று சிரிப்பது. திடீரென்று அழுவது, சந்தோஷப்படுவது என காரணம் இல்லாமல் அவர்களின் மனநிலை மாறிக் கொண்டே இருக்கும்.
* அமைதியாக இருப்பவர்கள் கோபப்படுபவர்களாவோ அடிக்கடி கோபப்படுபவர்கள் அமைதியாகவோ மாறலாம்.
* எந்த ஒரு செயலையும் முனைந்து செய்ய பிரியப்படமாட்டார்கள்.

அல்சைமர் ஏற்படுவதற்கு கீழே சொல்லப்படும் விஷயங்கள் காரணமாக அமையலாம்.

குடும்பத்தில் இத்தகைய வியாதி இருப்பது.

சர்க்கரை மற்றும் இதய நோய்கள் இருப்பது.

அதிகம் படிப்பறிவில்லாதவர்கள்.

மூளை சம்பந்தமான வேலைகள் அதிகம் தேவைப்படாதவர்களுக்கு இந்த நோய் அதிகமாக ஏற்படுகிறது. (அதாவது கூலி வேலை செய்பவர்கள், மூளையை பயன்படுத்த தேவையில்லாமல் மிஷின் மாதிரி ஒரே வகையான வேலைகளை பல ஆண்டுகளாக செய்து வருபவர்கள்) தொழில் ரீதியாக மூளை சம்பந்தமான வேலைகள் அதிகமாக செய்பவர்களுக்கு இது குறைவாக ஏற்படுகிறது. உதாரணத்திற்கு கணிதப் பேராசிரியர் போன்று மூளையை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு இந்த நோய் ஏற்படும் வாய்ப்பு குறைவாக இருக்கும்.

இந்நோய் முழுமையாக குணமடைய வாய்ப்பில்லை. இருந்த போதும் ஆரம்ப நிலையிலேயே நோயைக் கண்டறிவதன் மூலம் நோயாளிக்குப் பலன் தரும் வகையில் சிகிச்சையளிக்கலாம். அதாவது மருந்து மாத்திரைகள், உளவியல் மற்றும் அவர்களை முறையாக பார்த்துக்கொள்ளுதல் போன்ற வகையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் குடும்ப மற்றும் சமுதாய ஆதரவு முக்கியப் பங்கு வகிக்கிறது.

அல்சைமர் நோயை தடுக்க அல்லது கட்டுப்பாட்டில் வைக்க…

ஏற்கனவே டிமென்சியா குடும்ப வரலாறு இருந்தால் அவருக்கு டிமென்சியா வர வாய்ப்பு அதிகம். அப்பா, அம்மா உடன் பிறந்தவர்கள் என நம் குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்கு அல்சைமர் நோய் இருந்தால், அல்லது இருந்திருந்தால் அந்த குடும்பத்தின் மற்ற உறுப்பினர் எதிலும் ஆர்வம் இல்லாமல் சுறுசுறுப்பில்லாமல் இருந்தார்கள் என்றால் டிமென்சியா வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதாவது சிலர் செய்திருந்த வேலையை விட்டுவிட்டு வி.ஆர்.எஸ் வாங்கி விட்டு வீட்டில் சும்மா உட்கார்ந்திருப்பார்கள். சிலர் ஒரே இடத்தில் தொடர்ந்து அமர்ந்து டி.வி. பார்த்துக்கொண்டே இருப்பார்கள்.

இவர்கள் சுறுசுறுப்பாக இருந்தால் டிமென்சியா மற்றும் அல்சைமர் பாதிப்பை தடுக்கவும் முடியும். தள்ளிப்போடவும் முடியும். அல்சைமரால் பாதிக்கப்பட்டவர்கள் நோய் தீவிரமாவதைத் தடுக்க வாசித்தல், எழுதுதல், இசைக்கருவிகள் வாசித்தல், குறுக்கெழுத்து, புதிர், சதுரங்கம் ஆகிய விளையாட்டுகளில் ஈடுபட வைத்தல், நீச்சல் பயிற்சி மேற்கொள்ளுதல், பந்து விளையாடுதல் போன்ற குழு விளையாட்டில் இணைத்தல், வாக்கிங், யோகா, தியானம் போன்ற பயிற்சிகளில் ஈடுபடச் செய்தல், சமூகம் சார்ந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்துதல் போன்றவை இந்நோய் தீவிரமாவதைத் தடுக்க உதவியாக இருக்கும்.

டிமென்சியா மற்றும் அல்சைமர் நோய் தாக்கியவர்களை எப்படி கவனித்துக்கொள்வது?

* வெளியே அழைத்துச் செல்லும் போது ஒரு அட்டையில் விலாசத்தை எழுதி அவர்களது பாக்கெட்டில் வைக்க வேண்டும்.
* சரியாக சாப்பிடுகிறார்களா என்று கவனிக்க வேண்டும்.
* தண்ணீர் சரியாக குடிக்கிறார்களா என கவனித்துக்கொள்ள வேண்டும்.
* விபத்துகளில் சிக்கிக்கொள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* சிறுநீர் அல்லது மலம் வந்தால் அவர்களையே கழிவறைக்குச் செல்லப் பழக்கப்படுத்த வேண்டும்.
* தொலைந்து போய்விடாமல் அவர்களை கண்காணிக்க வேண்டும்.
* சரியாக தூங்குகிறார்களா என்று கவனிக்க வேண்டும்.
* அவர்களை அன்போடு கவனித்துக் கொள்ள வேண்டும்.
* அவர்களின் உணர்வை புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்களை பாதிக்கும் நோய்கள் !! (மகளிர் பக்கம்)
Next post வகுப்பறையில் ஆசிரியை செய்த மிக மோசமான செயலை பாருங்க! (வீடியோ)