அபிநந்தன் வர்தமான் இந்தியாவிடம் ஒப்படைப்பு; பிரதமர் வாழ்த்து!! (உலக செய்தி)

Read Time:2 Minute, 14 Second

பாகிஸ்தான் வசமிருந்த இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் வெள்ளிக்கிழமை இரவு 9.23 மணியளவில் இந்திய எல்லைக்குள் நுழைந்தார்.

மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் மற்றும் நடைமுறைகளுக்கு பிறகு இரவு 9.15 மணி அளவில் வெளியுறவுத்துறை பெண் அதிகாரி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அபிநந்தனை வாகா எல்லைக்கு அழைத்து வந்தனர்.

எல்லையில் உள்ள மிகப் பெரிய இரும்பு ‘கிரில் கேட்’ திறக்கப்பட்டதும், அதன் வழியாக அபிநந்தன் பாகிஸ்தான் எல்லையில் இருந்து இந்திய எல்லைக்குள் வந்தார்.

அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய அதிகாரிகள் அபிநந்தனை வரவேற்றனர். அப்போது அங்கு கூடி இருந்தவர்கள் வாழ்த்து கோஷங் களை எழுப்பினார்கள்.

விடுதலையாகி வந்த அபிநந்தனை, யாரும் சந்திக்க விமானப்படை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. அவரை உடனடியாக அங்கிருந்து காரில் அமிர்தசரசுக்கு அழைத்துச் சென்றனர்.

கடந்த புதன்கிழமை பாகிஸ்தானிடம் பிடிபட்ட அபிநந்தன், 3 நாட்களுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டு தாயகம் திரும்பி இருக்கிறார்.

விங் கமாண்டர் அபிநந்தனை வரவேற்பதாக பிரதமர் நரேந்திர மோதி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அவரின் தைரியத்தை பார்த்து இந்தியா பெருமைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அபிநந்தனின் வீரம் நம் அனைவரையும் பெருமைப்படுத்தியுள்ளதாக இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புகழின் உச்சியில் இருந்து நடுத்தெருவிற்கு வந்து இறந்துபோன பிரபல நட்சத்திரங்கள்! (வீடியோ)
Next post காதலிக்காக மனதை மாற்றிக் கொண்ட நாயகன் !! (சினிமா செய்தி)