புற்றுநோயை 100 சதவிகிதம் குணப்படுத்தலாம்! (மருத்துவம்)

Read Time:2 Minute, 57 Second

உலகெங்கிலும் புற்றுநோய்கள் வேகமாக பரவி வரும் சூழலில், 2020ஆம் ஆண்டுக்குள் இந்த கொடிய நோயை குணப்படுத்த சிகிச்சை அளிப்பதாக இஸ்ரேலைச் சேர்ந்த பயோடெக் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. புற்றுநோய்க்கு பல்வேறு வகையான சிகிச்சைகள் இன்று அளிக்கப்பட்டு வருகின்றன. இருந்தபோதும் அதை 100 சதவிகிதம் குணப்படுத்தும் சிகிச்சைகள் ஏதுமில்லை. ஆனால் AEBi என்கிற நிறுவனம் இந்நோயை முழுவதுமாக குணப்படுத்த முடியும் என்று தைரியமாக தெரிவித்துள்ளது. இந்த சிகிச்சை தொடங்கிய முதல் நாளிலிருந்து சில வாரங்களுக்குள்ளேயே அதன் திறனை உணர முடிவதோடு, மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.

இந்த மருந்துகளால் பக்க விளைவுகள் ஏதும் ஏற்படுவதில்லை என்பதோடு சந்தையில் மற்ற மருந்துகளை விட குறைவான விலையில் கிடைக்கும். Multi Target Toxin (MuTaTo) என்கிற இந்த நவீன சிகிச்சையானது SoAP என்கிற தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது என்கிறார் இந்த நிறுவனத்தின் தலைவர் Aridor. புற்றுநோய் தொடர்பான மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் ஏன் முழுமையாக பலனளிக்கவில்லை என்பதை தெரிந்து கொள்வதோடு, அந்நோயை எதிர்த்து சிறந்த முறையில் செயல்படும் மருந்தினைக் கண்டுபிடிக்கும் ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறோம்.

பெரும்பாலான புற்றுநோய் மருந்துகள் ஒரு குறிப்பிட்ட இலக்கை அல்லது புற்றுநோய் செல்களை தாக்கும் வகையில் மட்டுமே இருக்கிறது. ஆனால், MuTaTo சிகிச்சை புற்றுநோய் செல்களை மூன்று வெவ்வேறு திசைகளில் இருந்து தாக்கும் வகையில் இருக்கிறது. இந்த மருந்து பரிசோதனை முதலில் எலிகளிலும் அடுத்து மனிதர்களிலும் வெற்றிகரமான பிறகு அதற்கடுத்த ஆண்டில் அதை சந்தையில் விற்பனைக்கு கொண்டுவர இருக்கிறோம். உலகளவில் ஒவ்வொரு வருடமும் 1.81 கோடி புதிய புற்று நோயாளிகள் கண்டறியப்பட்டு வருகின்றனர் என்கிறார் இந்த பயோடெக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Ilan Morad.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இவனுங்கள எல்லாம் நடு ரோட்ல நிக்க வெச்சி செய்யணும்!! (வீடியோ)
Next post திருச்சியில் வாட்ஸ் ஆப் மூலம் இளம்பெண் செய்யும் வேலையை பாருங்க!! (வீடியோ)