கோடை வெயிலை சமாளிப்பது எப்படி? (மருத்துவம்)

Read Time:8 Minute, 53 Second

கோடைகால வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்ககூடும் என்பதால் பொதுமக்கள் தங்களை கோடை வெப்பத்திலிருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும். அன்றாட தட்பவெப்ப நிலை அறிந்து கொள்ள வேண்டும். தாகம் எடுக்க வில்லை என்றாலும் அடிக்கடி போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும்.எடை குறைவான, இறுக்க மில்லாத, கதர் ஆடைகளை அணிவது, கண்கண்ணாடி அணிவது மற்றும் வெயிலில் செல்லும் போது குடை பயன்படுத்தவும் மற்றும் காலணிகளை அணிந்து செல்லவும் வேண்டும்.

வெளியூர் பயணம் செல்லும் போது கண்டிப்பாக தண்ணீர் எடுத்து செல்ல வேண்டும். வெளியில் வேலை செய்பவர்கள் தலைக்கு தொப்பி, குடை மற்றும் ஈரத்துணியினை தலை, கழுத்து மற்றும் முகம் ஆகிய பாகங்களில் அணிந்து வேலை செய்தல் வேண்டும். உப்பு கரைசல் நீர், வீட்டில் தயாரிக்கப்பட்ட நீர் ஆகாரம், எலுமிச்சை ஜூஸ், ‘லெஸி’ மற்றும் மோர் ஆகியவை உடம்பில் உள்ள நீர்சத்தை அதிகப்படுத்துவதால் இதனை அதிகமாக உட்கொள்ள வேண்டும். வெப்பத்தினால் ஏற்படக்கூடிய தலைவலி, வலிப்பு, அரிப்பு, பக்கவாதம், தலைசுற்றல், குமட்டல் மற்றும் அதிக வியர்வை போன்ற பாதிப்புகள் ஏற்படின் உடன் மருத்துவரை அணுக வேண்டும்.

வீட்டில் உள்ள கால்நடைகளை நிழலான இடத்தில் பராமரித்து அவைகளுக்கு தேவையான தண்ணீர் அடிக்கடி கொடுக்கப்பட வேண்டும். மின் விசிறி மற்றும் ஈரத்துணிகளை பயன்படுத்துதல், அடிக்கடி குளிர்ந்த நீரில் நீராட வேண்டும். பணிபுரியும் இடத்தின் அருகில் போதிய அளவு குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். தொழிலாளர்கள் நேரடியாக சூரிய ஒளியில் வேலை செய்வதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு வேலை செய்யும் பொழுது, கூடுதல் ஓய்வு நேரம் எடுத்து கொள்ள வேண் டும். வெயில் குறைவாக உள்ள நேரங்களில் கடுமையான வேலைகளை செய்ய திட்ட மிடல் வேண்டும். தொழிலாளர்கள் மற்றும் கர்ப்பிணி தொழிலாளர்கள் மருத்துவ நலனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

மேலும் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகளையோ அல்லது செல்ல பிராணி களையோ விட்டு செல்லக் கூடாது. வெயிலில் செல்வதை தவிர்க்கவும், குறிப்பாக நண்பகல் 12மணி முதல் பிற்பகல் 3மணி வரை செல்வதை தவிர்க்க வேண்டும். அடர்த் தியான நிறஉடைகள் மற்றும் இறுக்கமான உடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நேரங்களில் கடுமையான வேலைகள் செய்வதை தவிர்க்க வேண்டும். மது அருந்துவது, டீ, காபி அருந்துவதை தவிர்ப்பது நல்லது. இது உடம்பில் உள்ள நீர்சத்தை குறைக்கும். புரதச்சத்து அதிகமாக உள்ள உணவுகளை அதிகமாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

குளிர்ச்சியாக்க என்ன வழி?

தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலை குளிர்ச்சியாக்க முடியும். தண்ணீர் அதிகம் பருகு வதன் மூலம் ஈரப்பதம் எளிதில் ஆவியாவதை தவிர்க்க முடியும். ஏனெனில் வெப்பம் ஈரப்பதத்தின் மூலமாக வெளியாகி உடலை குளிர்ச்சியடைய செய்கிறது. உங்களுக்கு தாகம் எடுக்கும் போது தான் தண்ணீர் பருக வேண்டும் என்று நினைப்பது முட்டாள் தனம். அவ்வப்போது ஹைட்ரேட் நிறைந்ந தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும். உங்களுடைய செயல்பாடுகள் நீங்கள் பருகும் தண்ணீர் மூலம் தான் அதிகரிக்கும். தண்ணீர் பருகாமல் இருந்தால் அது சோம்பேறித்தனத்தை ஏற்படுத்தும் ஆதலால் தண்ணீரை அதிக அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

பானங்கனை தவிர்க்க வேண்டும்

கார்பனேற்றப்பட்ட பானங்கள், மதுபானங்கள் போன்றவை கெட்டுப் போகாமல் இருக்கும் விதமாக வண்ணங்கள் மற்றும் சர்க்கரைகளை சேர்க்கின்றனர். அதனை பருகு வதன் மூலம் அமிலத்தன்மை நீர்ப்பெருக்கியாக செயல்பட்டு சீறுநீர் மூலமாக இழப்பை ஏற்படுத்தும். மிகுந்த குளிர்பானங்கள் செரிமானத்தை ஏற்படுத்தும் விதமாக நீர்த்த போஸ்பாரிக் என்ற அமிலத்தை கொண்டிருக்கிறது.அதிகளவில் குளிர்பானங்கள் பருகும் போது ரத்தத்தில் பாஸ்பரஸ் அளவை அதிகரிக்கிறது. அதனால் பிரிக்கும் தன்மை யுடைய கால்சியம் ரத்தத்திற்கு நகர்கிறது. தொடர்ந்து விளைவை ஏற்படுத்தும்.

வெப்ப இழப்பை ஏற்படுத்தும்

எலும்புகள் மற்றும் கால்சியம் இடப்பெயர்ச்சி நுண் துகள்களுடைய சிதைவு ஏற்படுகி றது. இதனால் பற்கள், சிறுநீரக கற்கள், கீல்வாதம் மற்றும் எலும்பு துருத்த மீது பிளேக் நோயை ஏற்படுகிறது.குளிர்பானங்களினால் என்சைம்கள் அஜீரணமாக்கப்பட்டு அதன் விளைவாக, உடல் இயங்க முடியாமல் தாதுஅளவு குறைகிறது. கோடை காலத்தில் அனைவரும் குளிர்ச்சியுடன் தான் இருக்க விரும்புவார்கள்.அக்காலத்தில் புழுக்கமான சூழ்நிலையில் குளிர்ந்த திரவங்களை உட்கொள்வதன் மூலம் தோல் ரத்த நாளங்களில் சுருக்கம் ஏற்பட்டு வெப்ப இழப்பை ஏற்படுத்தும்.

தள்ளிப்போட வேண்டாம்

ஆரோக்கியமான காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகம் உட்கொள்ளுதலை குறைத்தல் . அதாவது பசலை கீரை, முள்ளங்கி, சூடான மிளகுத்தூள், வெங்காயம், பூண்டு, பீட் ரூட், அன்னாசி, கிரேப்ப்ரூட் மற்றும் கனியும் மாம்பழம், ஆரோக்கியமான காய்கறிகள் மற்றும் பழங்கள் உட்கொள்ளுதலை குறைத்தல் வேண்டும். மாம்பழம் சாப்பிட வேண் டும் என்று தோன்றும் போது மாம்பழச்சாறு சாப்பிட்டுக் கொள்ளலாம். தாகம் எடுத் தால் உடனே மடமடவென தண்ணீர் அருந்தவும். ‘அப்புறமா குடிச்சுக்கலாம்’ என்று தள்ளிப்போட வேண்டாம். மண்பானைத் தண்ணீர் மிக நல்லது.

சரும நிறத்தை மீட்பது எப்படி?

இந்த சீசனில் அதிகம் கிடைக்கும் மாம்பழத்தை, சூடு என்று சொல்லி சிலர் ஒதுக்கு வார்கள். வேனல் கட்டிகள், வியர்க்குரு போன்ற பாதிப்பு இருப்பவர்களை தவிர, மற்ற வர்கள் தாராளமாக மாம்பழம் சாப்பிடலாம். வெயிலால் தலை முழுவதும் வியர்த்து அதனால் வரும் ஜலதோஷத்துக்கு எண்ணெய் குளியல் பெஸ்ட் சாய்ஸ். தலையுடன் உடம்புக்கும் எண்ணெய் தேய்த்து ஊறவிட்டு குளிக்கலாம். வெயிலில் அலை பவர்கள் எண்ணெய்க்கு பதில் உடலில் நெய்தடவி ஊறவிட்டுக் குளித்தால், வெயிலால் கறுத்த சருமம் நிறத்தை மீட்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நான் கிராமம் சார்ந்த தமிழ்ப் பெண் !! (மகளிர் பக்கம்)
Next post ஜன்னி, ஜூரம், வலிப்பு நோயை போக்கும் தினை!! (மருத்துவம்)