நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட சிறுமி!! (கட்டுரை)

Read Time:3 Minute, 31 Second

சுவீடன் நாட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமியான கிரேட்டா தன்பர்க், நோபல் பரிசுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

இவர் பாடசாலையில் கல்வி கற்கும்போதே, பருவ நிலை மாற்றத்துக்கு எதிராக போராடி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதன் முறையாக, கடந்தாண்டு ஓகஸ்ட் மாதம், சுவீடன் நாட்டு நாடாளுமன்ற வளாகத்தில், பாடசாலை மாணவ, மாணவியரைத் திரட்டி, பருவ நிலை மாற்றத்துக்கு எதிராக போராடினார். அவரது இந்தப் போராட்ட உணர்வு, அனைவரது கனவத்தையும் ஈர்த்தது.

இதனையடுத்து, டுவிட்டரில் “ப்ரைடேஸ் போர் தி பியூட்சர்” (#fridaysforfuture) என்ற ஹேஷ்டேகை உருவாக்கினார். இது உலகம் முழுவதும் டிரெண்டிங்கானது.

கடந்த டிசெம்பர் மாதம், போலாந்தில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில், பருவ நிலை மாற்றம் குறித்து கிரேட்டா உரையாற்றினார். அதிலிருந்து சர்வதேச அளவில், அவரது பெயர் கவனிக்கப்படத் துவங்கியது.

அதேபோன்று, கடந்த ஜனவரி மாதம், தேவாசில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்டு, பருவ நிலை மாற்றம் குறித்து பேசினார்.

இந்நிலையிலேயே, கிரேட்டா தன்பர்க்கின் பெயர், அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நோர்வே நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரேட்டி ஆண்ட்ரு கிரேட்டா, இவரது பெயரை பரிந்துரைத்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர்,

“நாங்கள் ஏன் கிரேட்டா பெயரை பரிந்துரைத்தோம் என்றால், பருவ நிலை மாற்றத்துக்காக நாம் எதுவும் செய்யவில்லை என்றால், அது யுத்தத்தில் தான் போய் முடியும். பருவ நிலை மாற்றத்துக்காக கிரேட்டா நிறைய காரியங்களை செய்து வருகிறார்” என்றார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள கிரேட்டா, நோபல் பரிசுக்கு தனது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளதுடன், இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், ” இதை நான் மிகவும் கவுரவமாக பார்க்கிறேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அமைத்திக்கான நோபல் பரிசை கிரேட்டா பெற்றால், அதுதான் மிக குறைந்த வயதுடைய ஒருவர் நோபல் பரிசை பெற்றுக்கொண்டமைக்கான சந்தர்ப்பமாக அமையும். ஏனெனில், இதற்கு முன்பு, பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா, தனது 17ஆவது வயதில் நோபல் பரிசை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெரிய கோபக்காரனா இருப்பானோ‌ 😂😂!! (வீடியோ)
Next post ப்யூட்டி பாக்ஸ் ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது!! (மகளிர் பக்கம்)