அந்த நாட்களுக்கான ஆப் (app)! (மகளிர் பக்கம்)

Read Time:13 Minute, 5 Second

பெண்களே இனி உங்கள் ஆரோக்கியம் பற்றிய கவலையோ, பயமோ வேண்டாம். இங்குள்ள அனைத்து ஆப்களும் உங்களுக்கு ஒவ்வொரு விஷயத்திற்கும் பக்க பலமாக அமையும். பெண்களுக்கு அந்த மூன்று நாட்கள்… அவர்கள் பருவமடைந்த நாட்கள் முதல் தொடர்ந்து வரும் பிரச்னைகள். சிலருக்கு பிரதி மாதம் மாதவிடாய் தொடர்ந்து வரும். பலருக்கு எப்போது வரும் என்றே தெரியாது. அவ்வாறு வரும் போது அவர்களுக்கு கடைசியாக எப்போது மாதவிடாய் வந்தது என்பதே நினைவில் இருக்காது.

இது ஒரு பக்கம் என்றால், மறுபக்கம் புதிதாக திருமணமான தம்பதிகள். மாதா மாதம் தவறாமல் வந்த மாதவிடாய் தள்ளிப் போகும் போது… அந்தப் பெண்ணிற்கு கடைசியாக வந்த மாதவிடாய் நாட்கள் பற்றி நினைவு இருக்காது. இது எல்லாவற்றையும் விட பெண்கள் தங்களின் ஆரோக்கியம் மேல் கவனம் செலுத்தாமல் அலட்சியம் காண்பிப்பது. இந்த பிரச்னைகளை பற்றி இனி சிந்திக்க வேண்டாம். காரணம், இது குறித்து உங்களுக்கு அவ்வப்போது நினைவுபடுத்தவே சில ஆப்(app)கள் உள்ளன. அவை என்ன என்று ஒரு கண்ணோட்டம்.

* பீரியட் டிராக்கர்

இனி மாதவிடாய் தவறுகிறது என்று நினைத்து வருத்தப்பட வேண்டாம். தோழிகளே… உங்களுக்கு மாதவிடாய் சரியாக வருகிறதா என்று நீங்களே டிராக் செய்யலாம். இதன் மூலம் உங்களின் அடுத்த மாதவிடாய் எப்போது வரும், உங்கள் கருமுட்டை எப்போது வெளியேறும் மற்றும் வளர்ச்சி அடையும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

இதை பயன்படுத்துவது மிகவும் எளிது. இந்த ஆப்பை பயன்படுத்தி உங்களின் தாம்பத்திய உறவு, உங்களின் மனநிலை, அறிகுறிகள், உடல் எடை மற்றும் வெப்பநிலை, மாத்திரை எடுத்துக் கொண்ட நாட்கள் என அனைத்து குறித்தும் குறிப்பு எடுக்கவோ அல்லது பதிவு செய்யவோ முடியும். கருத்தடை மாத்திரை சாப்பிடும் நினைவூட்டியாகவும் இது செயல்படும். கர்ப்பகாலத்தில் எப்போது ஊசி போட வேண்டும் என்பதையும் நினைவுபடுத்தும். இந்த ஆப்பினை தன் செல்போனில் வைத்துக் கொள்ளும் ஒவ்வொரு பெண்ணும் மிகவும் பாதுகாப்பாக உணர்வாள். காரணம், அவளின் உடல் ரீதியான வாழ்க்கையும் மிகவும் எளிதாகும்.

சிறப்பம்சங்கள்

* உங்களின் கூகில் அக்கவுன்ட் மூலமாக இதனை பதிவு மற்றும் மறுசீரமைப்பு செய்ய முடியும்.
* மாதவிடாய் பிரச்னை உள்ளவர்களுக்கு சரியாக கணித்து சொல்ல உதவும்.
* மாதவிடாய் குறித்து குறிப்பு வைத்துக்கொள்ள சிறிய கைப்புத்தகமாக செயல்படும்.
* எப்போது கருத்தரித்தீர்கள் மற்றும் எப்போது குழந்தை பிறக்கும் என்பதையும் துல்லியமாக கணிக்க உதவும்.
* நீங்கள் கருவுற்று இருக்கும் போது உங்களின் கர்ப்பபையின் தன்மை மற்றும் கர்ப்பவாய் திறப்பு குறித்தும் கணிக்கலாம்.

* வெல்பேபி மற்றும் ஃபீடிங் ரிமைண்டர்

எப்போதும் பிசியாக இருக்கும் தாய்மார்களுக்கு குழந்தைக்கு பால் புகட்ட வேண்டும் என்பதை உணர்த்தும் ஆப்தான் வெல்பேபி மற்றும் ஃபீடிங் ரிமைண்டர் ஆப். இதன் மூலம் உங்கள் குழந்தை எப்போது பால் குடித்தது என்ற வரலாற்றை முற்றிலும் கவனிக்க முடியும். அது மட்டும் இல்லாமல் உங்கள் குழந்தை எப்போது என்ன சாப்பிட வேண்டும் என்பது குறித்த ஆலோசனையும் இந்த ஆப் வழங்குகிறது.

சிறப்பம்சங்கள்

* குழந்தைகளின் தாய்ப்பால் மற்றும் பாட்டில் பால் பற்றி கண்காணிக்கலாம்.
* எப்போது தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று நாம் இதில் பதிவு செய்துகொள்ளலாம்.

* வுமன்ஸ் ஹெல்த் டைரி

இந்த ஆப் பெண்களுக்காகவே அமைக்கப்பட்டது. ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமான பங்கு வகிப்பது அவர்களின் ஆரோக்கியம் சார்ந்த விஷயம். இந்த ஆப், உங்களின் ஆரோக்கியம் குறித்த விவரங்களை உங்களின் விரல் நுனியில் கொண்டு வரும். பெண்களுக்கு மிகவும் பயனுள்ளது என்பதால், எளிதாக செயல்படும்படி அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பெண்ணுடைய ஸ்மார்ட்போனிலும் இந்த ஆப் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

சிறப்பம்சங்கள்

* உங்களின் எடை, பாடி மாஸ் இன்டெக்ஸ் போன்றவற்றை கணிக்க முடியும்.
* உங்களின் எடை மற்றும் உயரத்திற்கு ஏற்ப தினமும் எவ்வளவு கலோரி உணவுகள் சாப்பிடலாம் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
* மாதவிடாய், ஆரோக்கியம் குறித்த குறிப்பு, எதிர்ப்பு சக்தி மற்றும் எப்போது என்ன மாத்திரை சாப்பிட வேண்டும் என்பதை இதில் குறித்து வைக்கலாம். வுமன்ஸ் ஹெல்த் டைரி, தோழிகளே உங்களின் ஆரோக்கியம் குறித்து கண்காணிக்கக் கூடிய மிகவும் பயனுள்ள ஆப். இது உங்களின் ஆரோக்கியத்தை கண்காணிக்குமே தவிர உங்களுக்கு மருத்துவ உதவியோ அல்லது ஆலோசனையோ தராது.

* ஃபேடல் கிக் கவுன்ட்

ஃபேடல் கிக் கவுன்ட், கருவுற்று இருக்கும் தாய்மார்களுக்கு மிகவும் பயனுள்ள ஆப். கருவுற்று இருக்கும் சமயத்தில் அவர்கள் வயிற்றில் வளரும் சிசுவின் வளர்ச்சி பற்றி தெரிந்து கொள்ள முடியும். இந்த ஆப்பினை மகப்பேறு மருத்துவர்கள் பலர் பரிந்துரை செய்கின்றனர். ஒரு கரு 28 வாரம் வளர்ந்த பிறகு தான் அதன் அசைவு தெரியும். கரு அசையத் துவங்கிய பிறகு பிரசவ காலம் வரை அதன் அசைவை கண்காணிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைப்பது வழக்கம். அதன்படி 12 மணி நேரத்திற்கு குறைந்தபட்சம் 10 முறையாவது கருவின் அசைவு தெரிய வேண்டும்.

அந்த அசைவுதான் குழந்தை ஆரோக்கியமாக உள்ளது என்று நமக்கு அறிவுறுத்தும். இப்போது பெண்களும் வேலைக்கு செல்வதால், வேலைப் பளுக் காரணமாக எல்லாரும் குழந்தையின் அசைவினை சரியாக கணிக்க முடியாது. அந்த வேலையை இந்த ஆப் செய்யும். இது உங்கள் குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் கணித்து அதை பதிவு செய்யும். வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பிறகோ அல்லது வேலை நேரத்தில் கிடைக்கும் இடைவேளையின் போேதா, பதிவு செய்யப்பட்டு இருப்பதை பார்த்து உங்கள் வயிற்றில் இருக்கும் கருவின் அசைவு மற்றும் ஆரோக்கியத்தை தெரிந்து கொள்ளலாம்.

* ப்ரெக்னன்சி டிராக்கர் மற்றும் கவுன்ட்டவுன் டூ பேபி டியூ டேட்

தாய்மை ஒவ்வொரு பெண்ணும் மிகவும் எதிர்பார்க்கக்கூடிய தருணம். அதிலும் முதல் குழந்தையை கருவில் சுமக்கும் பெண்ணுக்கு மசக்கை காலம் முதல் குழந்தையின் அசைவு மற்றும் வளர்ச்சி எல்லாமே அவர்கள் வியக்கும் தருணமாக தான் அமையும். முதல் முறையாக கருவுற்று இருக்கும் பெண்ணுக்குள் பல விதமான கேள்விகள் எழுவது இயல்பு. ஒவ்வொரு வாரம் கருவின் வளர்ச்சி எப்படி இருக்கும்? கர்ப்ப காலத்தில் என்ன விஷயங்களை கடைப்பிடிக்கலாம்? எப்படி நடந்து கொள்ளலாம்? என்ன சாப்பிடலாம்? என பல சந்தேகங்கள் இருக்கும்.

இவர்களின் எல்லா சந்தேகங்களையும் போக்குவது தான் ப்ரெக்னன்சி டிராக்கர் மற்றும் கவுன்ட்டவுன் டூ பேபி டியூ டேட் ஆப். இந்த ஆப் தாய்மையின் ஒவ்வொரு கட்டத்தையும் மிகவும் எளிய முறையில் புரியவைக்கும். நீங்கள் தாயாக வேண்டும் என்று நினைக்கும் பெண்ணாக இருக்கலாம் அல்லது ஏற்கனவே கருவுற்று இருக்கலாம், குழந்தையின் வளர்ச்சி மற்றும் பரிமாற்றம் குறித்து தெரிந்து கொள்ள ஆர்வமுள்ளவராக இருக்கலாம்… இந்த அனைத்து விவரங்களையும் இதில் தெரிந்து கொள்ள முடியும். இதில் குறிப்பிட்டு இருக்கும் தாய்மார்களுக்கான ஆரோக்கியம் குறித்த ஆலோசனைகள் அனைத்தும் மருத்துவ ஆலோசனை வாரியத்தால் பரிந்துரை செய்யப்பட்டது.

இதில் கருவின் ஒவ்வொரு வளர்ச்சி குறித்தும் வீடியோக்கள் இருப்பதால், அதன் மூலம் ஒரு குழந்தையின் பிறப்பு மற்றும் குழந்தை பிறக்க இருக்கும் நாளை பற்றியும் கணக்கிட முடியும். உங்களின் தேவைக்கு ஏற்ப அந்தந்த மாதத்திற்கு என்ன ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடலாம் என்று வல்லுனர்கள் ஆலோசனை வழங்குவார்கள். கர்ப்பகாலத்தில் என்ன உடற்பயிற்சி செய்வது குறித்த குறிப்பு மற்றும் வீடியோக்களும் இதில் உண்டு. சில பெண்களுக்கு முதல் ஐந்து மாதம் வரை வாந்தி பிரச்னை இருக்கும். அதை எவ்வாறு சமாளிக்கலாம் என்று இதில் தெரிந்து கொள்ள முடியும்.

பொதுவாக கர்ப்பகாலத்தில் பெண்கள் எடை போடுவது வழக்கம். சிலர் கிடைப்பதை எல்லாம் சாப்பிட்டு விடுவார்கள். இதனால் அவர்களின் எடை சராசரி எடையைவிட கொஞ்சம் அதிகமாக இருக்கும். எடையும் கூடாமல் அதே சமயம் ஆரோக்கியமான உணவுகள் பற்றிய குறிப்பும் இதில் உள்ளது. உங்களுக்கு குழந்தை பிறந்த அடுத்த நிமிடம் இந்த ஆப் பேரன்டிங் கைடாக மாறிடும். ஒரு வருடம் வரை பிறந்த குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்? எவ்வாறு பராமரிக்கலாம் என்று வாரம் அல்லது மாதம் தோறும் குறிப்பு வழங்கப்படும்.

சிறப்பம்சங்கள்

* கர்ப்பம் தரிந்த காலம் முதல் டியூ டேட் வரை கணக்கிடலாம்.
* கர்ப்பமாக எண்ணுபவர்களுக்கான ஆலோசனைகள்.
* குழந்தை பிறக்கும் நாளை கணிக்கும் கேல்குலேட்டர்.
* குழந்தையின் வளர்ச்சி குறித்த ஆலோசனைகள்.
* குழந்தை ஒரு வயசு வரை அவர்களின் வளர்ச்சி குறித்த அப்டேஷன்.
* அம்மாக்கள் மற்றும் குழந்தைகள் இருவருக்குமான செயல்பாடு பரிந்துரைகள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மயக்கம்… குழப்பம்… கலக்கம்!! (அவ்வப்போது கிளாமர்)
Next post காய்ச்சலை போக்கும் பேய் விரட்டி!! (மருத்துவம்)