ஜானுசிரசாசனம்!! (மகளிர் பக்கம்)

Read Time:1 Minute, 53 Second

இது முழங்கால் பிரச்சினைகளை சரி செய்து பலப்படுத்துவதால் இந்த பெயர் பெற்றது.

செய்முறை:

விரிப்பில் உட்கார்ந்து, இரண்டு கால்களையும் நேராக நீட்டவும்

இடது காலை மடக்கி, வலது தொடையை ஒட்டியவாறு, கீழே வைக்கவும்

இப்போது இருகைகளையும் நமஸ்கார நிலைக்கு கொண்டு வந்து, மூச்சை இழுத்துக் கொண்டே கைகளை மேலே உயர்த்தி, மெதுவாக மூச்சை வெளிவிட்டுக் கொண்டே குனிந்து, கைவிரல்களால் கால்விரல்களை பிடித்து, நெற்றிப்பகுதி வலது மூட்டில் படுமாறு செய்யவும். இதில் கால் மூட்டு பகுதியை உயர்த்தக் கூடாது. முழங்கை தரையில்பட வேண்டும்.

சிறிது ஆழ்ந்த சுவாசத்திற்கு பின் கைகளை விடுவித்து, சாதாரண நிலைக்குவரவும். இதே போல் இடதுபக்கம் செய்யவும்.

பலன்கள்:

1. தொடையில் அதிகப் படியான சதைகள் குறையும்
2. கால்களில் நரம்பு சுருள், பிடிப்பு, மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தீரும்
3. தட்டைக்கால் பிரச்னை உள்ளோர், இதை செய்து பலன் பெறலாம்
4. அடி வயிற்று தசைகள் இறுக்கப்படுவதால், வயிற்று உள் உறுப்புகளின் பணி சீராகும்.

குறிப்பு:

பலவந்தமாக செய்ய வேண்டாம்; மெதுவாக பழக, பழக எளிமையாகிவிடும். முதுகு வலி உள்ளோர் யோகாசன ஆசிரியர்களின் அறிவுரையோடு செய்ய வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிகர்கள் இரண்டு மனைவிகள் யார் தெரியுமா!! ( வீடியோ)
Next post கர்ப்பம் சம்பந்தமான பிரச்சனைகளை நீக்கும் கல்யாண முருங்கை!! (மருத்துவம்)