டிரம்ப் வீட்டில் நுழைய முயன்ற சீனப்பெண் கைது!! (உலக செய்தி)

Read Time:2 Minute, 46 Second

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தில், பால்ம் கடற்கரை பகுதியில் உள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு சொந்தமான மார்-எ-லாகோ பண்ணை வீட்டிற்கு சீனாவைச் சேர்ந்த யூஜிங் ஜங் கடந்த சனிக்கிழமை மதியம் நுழைய முற்பட்டார். அங்குள்ள சோதனைச் சாவடியில் இருந்த அதிகாரிகள் விசாரித்தனர். அந்தப்பெண் உள்ளே நீச்சல் குளத்திற்கு குளிக்க செல்வதாக கூறியுள்ளார்.

ஆனால் அவரது கைகளில் எவ்வித நீச்சல் உடைகளும் இல்லை. மேலும் நடவடிக்கைகளிலும் சந்தேகமடைந்த அதிகாரிகள் அந்தப்பெண்ணிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் அவர் தங்கியிருந்த விடுதிக்கு சென்று, வரவேற்பாளரிடம் விசாரித்தனர். அப்போது அந்தப்பெண் ஐக்கிய தேசிய சீன அமெரிக்க கூட்டுறவு சங்கத்தில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள வந்துள்ளதாக கூறியது தெரிய வந்தது.

இதையடுத்து விசாரணையில் பொய் கூறியதால் அந்தப்பெண்ணை கைது செய்தனர். அவர் வைத்திருந்த உடமைகளை சோதனை செய்ததில், 2 சீன பாஸ்போர்ட்டுகள், வைரஸ் நிரம்பிய பென்டிரைவ் மற்றும் ஹார்ட் வேர், 4 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. பாஸ்போர்ட் சீன மொழியில் எழுதப்பட்டிருந்ததால், இரண்டாம் கட்டமாக வேரொரு இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

இங்கு நடத்திய விசாரணையில் ஜங் கூறுகையில், ´சீனாவைச் சேர்ந்த என் நண்பர் சார்லஸ், சீனா மற்றும் அமெரிக்காவிற்கு இடையே உள்ள பொருளாதார தொடர்பு குறித்து டிரப்பின் குடும்ப உறுப்பினரிடம் பேசுமாறு என்னை அனுப்பி வைத்தார். இதற்காகவே நான் வந்தேன்´ என கூறியுள்ளார்.

அந்தப்பெண் அளித்த தகவல்களில் முரண்பாடு இருப்பதையடுத்து, சார்லஸ் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஸ்ருதியும் லயமும் பேசுகின்றன..! (மகளிர் பக்கம்)
Next post விஜய் சேதுபதியை கைது செய்யுமாறு வற்புறுத்தல்!! (சினிமா செய்தி)