By 19 April 2019 0 Comments

பிரதமரைக் கைதுசெய்ய முயற்சியா? (கட்டுரை)

சித்தி​ரைப் புத்தாண்டு காலப்பகுதியில், இலங்கை அரசியலில் முக்கிய சம்பவமொன்று இடம்பெறுமென பரவலாக பேசப்பட்டது. கண்களில் விளக்கெண்ணெயை ஊற்றிக்கொண்டு ஊடகங்கள் காத்திருந்த போதிலும், அவ்வாறான சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை. எனினும், அன்று இடம்பெறவிருந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அலரி மாளிகையில் நேற்று (18) வெகுவாக அளவளாவப்பட்டது.

புத்தாண்டு விடுமுறையில் வெளியிடங்களுக்குச் சென்றிருந்தவர்களில் பலர், கொழும்புக்குத் திரும்பியுள்ளனர். வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள், உறுப்பினர்கள் சிலரை தவிர, பலரும் திரும்பிவிட்டனர். அவர்களில் பெரும்பாலானோர், அலரி மாளிகையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்ற (18) சந்தித்து, கடந்தவார அரசியலை அலசிகொண்டிருந்தனர்.

அவ்விடத்திலிருந்த சபைமுதல்வரான அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, “ஜனாதிபதித் தேர்தலில், கட்சித் தலைவர் போட்டியிட்டால், நான் பெரிதும் விரும்புவேன். எனினும், ஜனாதிபதி வேட்பாளர் யாரென்பதை கட்சியின் செயற்குழுதான் தீர்மானிக்கவேண்டும்.
தாமரைமொட்டுச் சின்னத்தைக் கொண்ட கட்சியைப் போல, அப்பா, சித்தப்பா, பெரியப்பா, அம்மா மற்றும் மகன்மார்கள் அடங்கிய செயற்குழு அல்ல” எனத் தெரிவித்து சம்பாஷணையை ஆரம்பித்துவைத்தார்.

இடையிடையே, அமைச்சர்களான சஜித் பிரேமதாஸாவுக்கும் ரவி கருணாநாயக்கவுக்கும் இடையில், பொதுவெளியில் இடம்பெற்றுவரும் கருத்துமோதல்கள் தொடர்பிலும் அங்கிருந்தவர்கள் பிரஸ்தாபித்தனர். அதற்கு, அடுத்த வாரத்துக்குள் தீர்வைப்பெற்றுத்தருவதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, புத்தாண்டு விடுமுறையை நுவரெலியாவில் கழித்துகொண்டிருந்த போதே, அரசியலில் முக்கிய சம்பவம் தொடர்பில் அவரது காதுக்கு எடுத்துரைக்கப்பட்டது. அப்போது, “நாங்கள் பார்ப்போமே” என ரணில் தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ரோஹித்த போகொல்லாமவுடன் இணைந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கால்நடையாக சுற்றிவந்தார். விடுமுறையை கழிப்பதற்காக, நாட்டின் பல பாகங்களிலிருந்தும் அங்கு வந்திருந்தவர்களுடன் அன்னியோன்யமாக கலந்துபேசியுள்ளார்.

அலரி​மாளிகையில், நேற்று (18) இடம்பெற்ற சம்பாஷணையின் போது, “சேர், புத்தாண்டில் அரசாங்கத்​தை கலைப்பதாகவும், பிரதமர் அல்லது அமைச்சர்களை கைது செய்வதாகவும் கதைகள் அடிபட்டன. என்றாலும், ஒன்றுமே நடக்கவில்லையே என யாரோ கூறிவிட்டனர். அப்போது அங்கிருந்தவர்கள் மூக்கின் மேல் விரலை வைத்து திகைத்து நின்றனர்.
அந்த குரலுக்கு பதிலளிக்கும் வகையில் கருத்துதெரிவித்த இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க,

“அது பத்திரிகையாசியர்களை, ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடிய போது, கூறிய கதையாகும். புதிய தகவல்கள் பத்திரிகையாசிரியர்கள் கேட்டபோது, புத்தாண்டு பிறக்கும்போது, நல்​லதொன்று நடக்கும் பாருங்கள்” எனக் ஜனாதிபதி கூறியுள்ளார். அந்த கதைதான், இவ்வாறு பரவியுள்ளது.

“அதனால்தான் பத்திரிகையில் கடமையாற்று ஊழியர்களை, புத்தாண்டு தினத்தன்று கடமைக்கு சமூகமளிக்குமாறு சில பத்திரிகைகளின் ஆசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்” என வைத்தியர் காவிந்த ஜயவர்தன, பலத்த குரலில் தெரிவித்துவிட்டார். அங்கிருந்தவர்களும் கைகளை தட்டிவிட்டனர்.

“மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி, நம்பிக்கை கொள்ளக்கூடிய ஒருவரல்ல. அதனால்தான், உனது கதைக்கு கைத்தட்டல்கள் கிடைத்தன” என ஷமிந்த விஜயசிறி எம்.பி கூறிவிட்டார்.
“ஓ… ஓ அதனால்தானோ, ஜனாதிபதியின் ஜப்பான் விஜயமும் தடைப்பட்டுவிட்டது” என ஹேஷா வித்தான கூறுகையில்,

“அவர், கடந்த வருடமும் ஜப்பானுக்குச் சென்றார். ஜப்பானுக்கு வழங்கிய உறுதிமொழிக்கு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. ஜப்பான சந்தோஷமாக இல்லை. அதனால்தான், உத்தியோகபூர்வ அழைப்பை, அமைச்சர் சாகல ரத்னாயக்கவுக்கு ஜப்பான் விடுத்திருந்தது” என சபை முதல்வர் கிரியெல்ல கூறிவிட்டார்.

“அப்படியாயின், புத்தகயாவுக்கு செல்லவிருந்த ஜனாதிபதியின் பயணமும் தடைப்பட்டுவிட்டதல்லவா” என சமிந்த விஜேசிறி எம்.பி கூறிவிட்டார்.

“ஆமாம்… ஆமாம்… இந்த காலத்தில் பீஹார் மாநிலத்தில் வாக்கெடுப்பு நடக்கிறது. அதனால்தான், திருப்பதிக்குச் சென்றுவிட்டார். ஜப்பானுக்கு விஜயம் செய்யமுடியாமல் போனமையால்தான், சிங்கபூருக்குச் சென்றுள்ளார்” என சபை முதல்வர் கிரியெல்ல கூறிவே, அப்படியானால், ஒரு உலகம் சுற்றுதல்தான் என அங்கிருந்தவர்கள் கூறிவிட்டனர்.

இதற்கிடையில், ஜனாதிபதி சட்டத்தரணிகள் நியமனம், சஜித் – ரவிக்கு இடையிலான பகிரங்க கருத்து மோதல்கள், நாடுக்கு திரும்பும் போது கோட்டாபயவுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பளிப்பு உள்ளிட்டவை தொடர்பில் அங்கிருந்தவர்கள் அளவளாவினர்.



Post a Comment

Protected by WP Anti Spam