குழந்தைக்கு தாய்ப்பால்!! (மருத்துவம்)

Read Time:2 Minute, 54 Second

குழந்தை பிறந்ததுமே தாய்க்கு முதன் முதலில் வரக்கூடிய பாலை சீம்பால் (Colostrum)என்கிறோம். இதன் அருமை பலருக்குப் புரிவதில்லை. இந்த சீம்பாலைக் குழந்தைக்குக் கட்டாயம் கொடுக்க வேண்டும். காரணம் குழந்தைக்கான நோய் எதிர்ப்புசக்தி இதிலிருந்து தான் அதிகப்படியாகக் கிடைக்கிறது. அதனால் தவறாமல் சீம்பால் கொடுங்கள்! தாய்ப்பால் கொடுப்பதால் தாய் ஒரு விதமான திருப்தியை உணர முடியும்.

அதைக் கொடுப்பதன் மூலம் தாயின் மன அழுத்தநிலை பெருமளவு குறைவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. தாய்ப்பால் கொடுப்பதால் பெண்களுக்கு மார்புப்புற்றுநோயிலிருந்து இயற்கையான பாதுகாப்பும் கிடைக்கிறது. தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைகளின் இறப்பு விகிதம் மிகவும் குறைகிறது என்கிறது இன்னொரு ஆராய்ச்சி. சில குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே டயாபடீஸ் நோய் வந்து, அவர்களை வாழ்நாள் முழுவதும் அவஸ்தைப் பட வித்திட்டு விடுகிறது. தாய்ப்பால் கொடுப்பதால் இந்த Juvenile Diabetes வருவது வெகுவாகக் குறையும். தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தை அதிபுத்திசாலியாக இருக்கும் வாய்ப்புகளும் அதிகம் என்றும் ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

தாய்ப்பால் எப்போது கொடுக்கக்கூடாது?

தொடர்ந்து பால் கொடுக்கத் தவறினால் பெண்களுக்கு மார்பில் பால் கட்டிக்கொண்டு அதுவும் பெரிய அவஸ்தையாகி விடும். இதனால் தாய்க்கு ஜுரம் கூட வரும். அதை கவனிக்காவிட்டால் அங்கு சீழ் உருவாகிவிடும் அபாயமும் உள்ளது. இப்படி நீங்கள் விஷயத்தை சீழ் வரை எடுத்துச் சென்றால் அதற்கான ட்ரீட்மெண்ட் கொடுக்க, ஒரு சின்ன அறுவை சிகிச்சையே கூட செய்ய வேண்டி வந்துவிடலாம். இந்த நிலையிலும் கூட குழந்தைக்கு பால் கொடுத்து வரலாம். இப்படிப்பால் கட்டிக் கொண்ட சமயங்களில் மார்பகத்தில் சுடூநீர் ஒத்தடம் கொடுத்து, குழந்தைக்கு பால் கொடுக்கவேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சின்னதம்பி சமத்தானவன்!! (மகளிர் பக்கம்)
Next post ஒரு பெண் இன்னொரு பெண்ணை ஏன் விரும்புகிறாள்?! (அவ்வப்போது கிளாமர்)