பாம்பே O குரூப் இது புதுசு! (மருத்துவம்)

Read Time:9 Minute, 39 Second

ரத்தம் பற்றிய பல்வேறு சந்தேகங்களைப் போக்கும் வகையில் விரிவான நேர்காணல் ஒன்றை கடந்த இதழில் வெளியிட்டிருந்தீர்கள். ரத்த வகைகளை எப்படி கண்டுபிடிக்கிறார்கள், ரத்த தானம் செய்வதற்கு என்ன விதிமுறைகள் இருக்கின்றன என்பதையும் சொல்லுங்களேன்’ என சில வாசகர்கள் கேட்டிருந்தார்கள். இதோ… வாசகர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கிறார் ரத்த வங்கி மருத்துவர் தமிழ்மணி. ரத்தத்தில் என்னென்ன வகைகள் இருக்கின்றன?

ரத்தத்தில் ஏ பாசிட்டிவ், ஏ நெகட்டிவ்,பி பாசிட்டிவ், பி நெகட்டிவ், ஏபி பாசிட்டிவ், ஏபி நெகட்டிவ், ஓ பாசிட்டிவ், ஓ நெகட்டிவ் என்று 8 வகைகள் இருக்கின்றன. இவற்றுடன் ‘பாம்பே ஓ குரூப்’ என்ற அரிய வகை ஒன்றை சமீபத்தில் கண்டுபிடித்திருக்கிறார்கள்! ரத்தத்தின் வகைகளை எப்படி கண்டுபிடிக்கிறார்கள்?ரத்தத்தில் இருக்கும் ஆன்டிஜென் மற்றும் நோய் எதிர்ப்புப் பொருள் (Antibody) இரண்டையும் வைத்தே ரத்த வகையைக் கண்டு பிடிப்பார்கள்.

ஏ ஆன்டிஜென் இருந்தால் அது ஏ குரூப். இதில் பி ஆன்டிபாடி இருக்கும். பி குரூப்பில் பி ஆன்டிஜென், ஏ ஆன்டிபாடி இருக்கும். ஏபி குரூப்பில் ஏ ஆன்டிஜென், பி ஆன்டிஜென் இரண்டும் இருக்கும். ஆன்டிபாடி இருக்காது. ஓ குரூப்பில் ஆன்டிஜென் இருக்காது. ஆனால், ஆன்டிபாடி இருக்கும். இதில் பாசிட்டிவ், நெகட்டிவ் வகைகளைப் பிரிப்பதற்குஇதனுள் இருக்கும் ஆர்.ஹெச். என்ற மற்றொரு ஆன்டிஜென்னை பார்க்க வேண்டும். ஆர்.ஹெச்.இல்லாவிட்டால் அது நெகட்டிவ் குரூப்பாக இருக்கும். ஆர்.ஹெச். ஆன்டிஜென் இருந்தால் அது பாசிட்டிவ் குரூப்!ரத்த தானம் கொடுக்கவும் பெறவும் வழிமுறைகள் என்னென்ன?

குறிப்பிட்ட ரத்த வகையினருக்கு அதே வகையினர் மட்டுமே தானம் கொடுக்க முடியும். ஏ பாசிட்டிவ் உள்ளவர்கள் ஏ பாசிட்டிவ் உள்ளவர்களிடம் மட்டுமே ரத்தம் கொடுக்கவோ வாங்கவோ முடியும். இல்லாவிட்டால், சாதாரண குளிர் நடுக்கத்திலிருந்து உயிருக்கேஆபத்தான நிலை வரை வரலாம்.இதில் விதிவிலக்குகள் உண்டா?

ஓ நெகட்டிவ் வகை ரத்தம் உள்ளவர்கள் எல்லோருக்கும் ரத்தம் கொடுக்கலாம். இதனால் ‘யுனிவர்சல் டோனர்’ (Universal donor) என்று ஓ நெகட்டிவ் வகை ரத்தம் கொண்டவர்களைச் சொல்வார்கள். அதே போல, ஏபி பாசிட்டிவ் வகை உள்ளவர்கள் யாரிடம் இருந்தும் ரத்தம் பெற்றுக் கொள்ளலாம். இவர்களுக்கு ‘யுனிவர்சல் ரெசிபியன்ட்’ (Universal Recipient) என்று பெயர்.

அதென்ன ‘பாம்பே ஓ குரூப்’?

சாதாரணமாக ஓ குரூப் ரத்த வகையில் மட்டுமில்லாமல் அனைத்து வகையிலும்ஹெச் ஆன்டிஜென் இருக்கும். இந்த ஹெச் ஆன்டிஜென் இல்லாததையே ‘பாம்பே ஓ குரூப்’ என்று சொல்கிறோம்.

‘பாம்பே ஓ குரூப்’ வகையை எப்படி கண்டுபிடிக்கிறார்கள்?

ரத்தப் பரிசோதனையை ஃபார்வர்ட் குரூப்பிங் மற்றும் ரிவர்ஸ் குரூப்பிங் என்ற இரண்டு வகையிலும் செய்ய வேண்டும். காரணம், இந்த பாம்பே ஓ குரூப்பை ரிவர்ஸ் குரூப்பிங் சோதனையில் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். ஃபார்வர்ட் குரூப்பிங் என்பது ரத்தத்தின் செல்களை வைத்துப் பரிசோதனை செய்வது. ரிவர்ஸ் குரூப்பிங் என்பது ரத்தத்தின் சீரத்தை அடிப்படையாகக் கொண்டு செய்வது. இதனால் ரிவர்ஸ் குரூப்பிங் இன்னும் துல்லியமாக நமக்கு முடிவுகளை கொடுக்கும்.

‘பாம்பே ஓ குரூப்’பினருக்கு ஓ நெகட்டிவ் வகையினர் ரத்தம் கொடுக்கலாமா?

யாருக்கு வேண்டுமானாலும் ரத்தம் கொடுக்கும் ஓ நெகட்டிவ் ரத்தம் கொண்டவர்கள் ‘பாம்பே ஓ குரூப்’புக்கு மட்டும் கொடுக்க முடியாது. ‘பாம்பே ஓ குரூப்’ வகையினருக்கு ‘பாம்பே ஓ குரூப்’ மட்டுமே கொடுக்க வேண்டும்!

அரிய வகை ரத்தப் பிரிவுகள் எவை எவை?

நெகட்டிவ் வகை ரத்தம் எல்லாமே அரிய வகைதான். ஏபி மற்றும் ‘பாம்பே ஓ குரூப்’ வகைகளை இன்னும் அரிய வகை என்று சொல்லலாம்.

ரத்த தானம் செய்பவர்களுக்கு என்னென்ன பரிசோதனைகள் செய்வார்கள்?

‘‘ஹெச்.ஐ.வி., ஹெப்படைட்டிஸ் பி வகை, ஹெப்படைட்டிஸ் சி வகை, வி.டி.ஆர்.எல். என்ற பால்வினை நோய், மலேரியா என 5 வகை சோதனைகள் செய்வார்கள். ஏனெனில், இந்த நோய்கள் ரத்தத்தின் மூலம் மற்றவருக்குப் பரவும் நோய்கள். இந்த 5 பிரச்னைகளில் எது இருந்தாலும் ரத்தம் கொடுக்கக் கூடாது. நீரிழிவுக்காரர்கள், குடித்திருப்பவர்கள், ரத்த தானம் செய்யும் நாளில் உடல்நலம் குன்றியவர்கள் ஆகியோரும் ரத்த தானம் செய்யக்கூடாது.

கர்ப்பிணிகளுக்கு ஆர்.ஹெச். பரிசோதனை அவசியம் என்று சொல்வது ஏன்?

முதல் கர்ப்பத்தின் போது பெண்கள் ஆர்.ஹெச். பரிசோதனை செய்வது கட்டாயம். இரண்டாவது குழந்தை ஆரோக்கியமாகப் பிறந்து, நல்ல முறையில் வளர்வதற்காக செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை பரிசோதனை இது. ரத்த வகையை பாசிட்டிவ், நெகட்டிவ் என பிரிப்பதற்கு உதவும் ஆன்டிஜென்தான் ஆர்.ஹெச். என்று பார்த்தோம். இந்த ஆர்.ஹெச்சிலும் பாசிட்டிவ், நெகட்டிவ் என இரு வகைகள் இருக்கின்றன. இதில் அம்மாவுக்கு ஆர்.ஹெச். பாசிட்டிவ் குரூப்பாக இருந்தால் பிரச்னையில்லை.

அம்மாவுக்கு நெகட்டிவ் குரூப்பாக இருந்து, அப்பாவுக்கும் நெகட்டிவ் குரூப்பாக இருந்தாலும் பிரச்னையில்லை. ஆனால், அம்மா ஆர்.ஹெச். நெகட்டிவாகவும் அப்பா ஆர்.ஹெச். பாசிட்டிவாகவும் இருந்து முதல் குழந்தை ஆர்.ஹெச். பாசிட்டிவாக பிறந்தால் இரண்டாவது குழந்தை கருவிலேயே இறக்கவோ, பிறந்த உடன் இறக்கவோ வாய்ப்பு அதிகம். அதற்காகத்தான் இந்த ஆர்.ஹெச். பரிசோதனை. இதனால் முதல் குழந்தை பிறந்தவுடன் 48 மணி நேரத்தில் அம்மாவுக்கு Anti D என்ற தடுப்பூசி போட்டாக வேண்டும்.

அப்படி தடுப்பூசி போடத் தவறினால், இரண்டாவது கர்ப்பத்தின் போது கருவில் இருக்கும் குழந்தையின் ரத்தம் எந்த குரூப் என கண்டுபிடித்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். இந்தப் பரிசோதனை கர்ப்பமுற்ற ஐந்தாவது மாதத்தில் குழந்தையின் தொப்புள்கொடியின் மூலம் செய்வார்கள். கருவில் இருக்கும் குழந்தை ஒருவேளை பாசிட்டிவாக இருந்தால், அப்போது அம்மாவுக்கு ‘ஆன்டி டி’ தடுப்பூசி போட வேண்டும்.

இதன் மூலம் எரித்ரோப்ளாஸ்டோசிஸ் ஃபீட்டாலிஸ் (Erythroblastosis fetalis) என்ற பாதிப்பிலிருந்து குழந்தையைக் காப்பாற்ற முடியும். இந்த பாதிப்பு ஏற்பட்டால் குழந்தையின் உடல் முழுவதும் தண்ணீர் கோர்த்துக் கொண்டோ, சிறுநீரக வளர்ச்சி இல்லாமலோ, நுரையீரல், இதயம் போன்ற முக்கிய உறுப்புகள் வீங்கிப் போயோ உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். நெகட்டிவ் வகை ரத்தம் எல்லாமே அரிய வகைதான். ஏபி மற்றும் பாம்பே ஓ குரூப் ஆகியவை இன்னும் அரிய வகை!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண் உச்சம் அடைதல் ஏன் தாமதமாகிறது..? (அவ்வப்போது கிளாமர்)
Next post குட்டி ஹீரோயின்… லவ்லின்!! (மகளிர் பக்கம்)