கடினமான கணக்கும் எளிமையே..! (மகளிர் பக்கம்)

Read Time:7 Minute, 19 Second

ஸ்கூல் படிக்கும் போதிலிருந்தே எனக்கு கணக்குன்னாவே அலர்ஜி. ஆனா, தொழில் செய்வதிலும் ஆர்வம் இருக்கிறது. அதுலையும், இந்த வரிகளின் பெயரையெல்லாம் கேட்டா காய்ச்சலே வந்திடும் என்பவர்களுக்கு, சமீபத்தில் FICCI FLO உடன் Zoho இணைந்து பெண் தொழில் முனைவோருக்காகப் பிரத்யேகமான வொர்க்‌ஷாப் நடத்தியது.

இதில் Charted Accountants நிபுணர்கள் கலந்து கொண்டு, கணக்கியலின் அடிப்படைகள், ஜிஎஸ்டி தாக்கல் செய்தல், Cloud Accounting-ன் நன்மைகளை எடுத்துக் கூறினர். தொழிலில், சிக்கலான பகுதிகள் என நாம் நினைத்து ஒதுக்கும் சில விஷயங்களின் முக்கியத்துவத்தையும், அதன் அம்சங்களையும் எளிமையான முறையில் விவரித்தனர். சொந்த தொழில் செய்யும் பெண் முனைவோர் வணிக ரீதியான சில நிதி முடிவுகளை எடுக்க Accounting பற்றிய புரிதலும், ஜிஎஸ்டி பற்றிய அறிதலும் இருப்பது மிக முக்கியம்.

யாரெல்லாம் ஜிஎஸ்டி பதிவு செய்வது?

* உங்கள் தொழிலின் வருவாய் வருடத் திற்கு ரூ.20 லட்சத்திற்கு மேல் இருந் தால் கட்டாயம் ஜிஎஸ்டி பதிவுசெய்து கொள்ள வேண்டும் (இது வரும் ஏப்ரல் மாதம் முதல் ரூ.40 லட்சமாக உயர உள்ளது). வடகிழக்கு மாநிலங்கள், மலைப்பகுதிகளில் தொழில் நடத்து வோர் ரூ.10 லட்சம் என வரையறுக்கப் பட்டுள்ளது. இதற்குக் குறைவாக வருவாய் இருந்தாலும் பதிவு செய்து கொள்ளலாம்.
* ஜிஎஸ்டி அறிமுகமாவதற்கு முன் வாட் வரி, சேவை வரி போன்ற இதர
வரிகளைச் செலுத்தி வந்தவர்களும் ஜிஎஸ்டி பதிவு செய்ய வேண்டும்.
* ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள நிறுவனங்கள்\தொழில்கள் (மேலே கூறப்பட்டுள்ள நிபந்தனைகள் இல்லாமல்).
* ஏற்றுமதியாளர்கள் / இறக்குமதியாளர்கள்.

பதிவு செய்ய தேவையான ஆவணங்கள்?

* பான் கார்டு
* முகவரி சான்று
* வணிக ஆதாரம் (உங்கள் விலைப் பட்டியலை சமர்ப்பிக்கலாம்).
* Promoters – களின் அடையாளச் சான்றும், முகவரி ஆதாரமும்.
* வங்கிக் கணக்கு அறிக்கை.
* டிஜிட்டல் கையொப்பம்.

இவற்றைக் கொண்டு https://www.gst.gov.in/ என்ற இணையதளத்தில் ஜிஎஸ்டி பதிவு செய்து தாக்கல் செய்யலாம். இது குறித்து மேலும் விரிவாகப் பேசிய தொழில்சார் கணக்கறிஞர் லாவண்யா, “நம் நாட்டில் ஜி.எஸ்.டி அறிமுகமாவதற்கு முன், சிக்கலான பல மறைமுக வரிகள் வழக்கில் இருந்தன. இதை சீரமைத்து மக்களுக்கு எளிதாக்க, அறிமுகப்படுத்தப்பட்டது தான் சரக்கு மற்றும் சேவை வரி என்கிற ஜிஎஸ்டி (GST – Goods and Services Tax) சட்டமாகும். பெண்கள் அனைத்துத் துறை களிலும் தற்போது வளர்ந்து வருகின்றனர். ஆனால், சிலர் இன்னும் நிதி கணக்கு வைப்பு களைக் கண்டாலே அச்சம் அடைகின்றனர்.

நிதியியல், கணக்கியல் அனைத்தும் ரொம்ப போரிங் என்பது உண்மைதான் என்றாலும், கற்றுக்கொண்டால் சுலபம். தொழில் செய்யும் பெண் கள் ஆடிட்டரிடம் பேசி உதவிக் கேட்கலாம். நிதி கணக்கியல் பற்றிய புரிதல் அனைவரிடமும் இருப்பது மிக அவசியம். தெரியாது, புரியாது எனச்சொல்லி ஒதுக்குவது முட்டாள்தனமாகிவிடும். கணக்கு வைப்பு, எண்களைப் பார்த்து பயந்து ஓடத் தேவையில்லை. பல க்ரியேடிவ் துறைகளில் இருக்கும் பெண்கள், ‘நம்பர்களை’ கண்டாலே வெறுக்கிறார்கள். முதலில் இது சுலபம், எளிதில் கற்கலாம் என்று நம்ப வேண்டும்.

நம்பினால்தான் கற்க முடியும். கணக்கியலும் ஒரு மொழிதான். பிரஞ்சு போல நம்மை ஈர்க்காவிட்டாலும், அதிலும் இலக்கணம், ரிதம் எல்லாமே உண்டு. இதில் உள்ள அடிப்படைகளைக் கற்றுக்கொள்ளுங்கள். முறையாகப் பின்பற்ற நேரம் இல்லாத போது, கணக்கறிஞரின் உதவி பெறுங்கள் அல்லது “Cloud Accounting” மென்பொருள் மூலம் உங்கள் வேலையை எளிதாக்குங்கள்” என்றார். ஆன்லைன் Cloud Accounting சேவையை வழங்கும் “Zoho Books” மூலம் தன் வணிகத்தைச் சிறப்பாக நிர்வகித்து வரும் ‘வரம்’ குழுமத்தின் நிறுவனர் காவியா சபரீஷ் இதுகுறித்து பேசினார்.

“Cloud Accounting software ஒரு கணக்கறிஞரின் அனைத்து வேலையையும் செய்துவிடும். தொழில் சார்ந்த அனைத்துக் கணக்கு பதிவையும் பார்ப்பதோடு, நேரத்தை மிச்சம் செய்வதால் நம் தொழிலில் கூடுதல் கவனம் செலுத்தலாம். ஜிஎஸ்டி-யுடன் இணைத்து, வரி விவரங்களையும் தெரிவிப்பதோடு நேரடியாக ஜிஎஸ்டி தாக்கல் செய்யவும் இந்த Cloud Accounting உதவுகிறது. சரியான நேரத்திற்குள் ஜிஎஸ்டி தாக்கல் செய்து பெரிய பொருட் செலவில்லாமல் எளிதாக கணக்கியலை சேகரிக்கலாம். நீங்கள் எந்த சேவையை பயன்படுத்த வேண்டுமோ, அதற்கு மட்டும் பணம் கொடுத்தால் போதும். உங்களுக்குப் பொருத்தமான Cloud-ஐ நீங்களே தேர்வு செய்யலாம்.

டிஜிட்டல் அலுவலகத்தை குறைந்த செலவில் இயக்கலாம். பதிவிறக்கம், பதிவேற்றம் எதுவும் செய்ய வேண்டியதில்லை. எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் இதை உபயோகிக்கலாம்” என்கிறார். Cloud Accounting சேவையைப் பல மென்பொருள் நிறுவனங்கள் வழங்குகின்றன. உங்களுக்குத் தேவையான கூறுகள் உடைய மென்பொருளைத் தேர்வு செய்து பயன்படுத்தலாம். சுயதொழில் செய்யும் தோழிகளே, இனிமேல் கணக்கியலை வெறுக்காமல் முறையான நிபுணரின் உதவியோ அல்லது Cloud Accounting மூலமாகவோ, உங்கள் தொழிலுக்கு நிதி சார்ந்த தகவல்களை அறிந்து முடிவுகளை சுயமாக நிர்ணயுங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தயக்கம் வேண்டாம் தடுப்பூசி போட!! (மருத்துவம்)
Next post தாய்ப்பால் சுரக்க வைக்கும் ஆமணக்கு!! (மருத்துவம்)