புயலினாலான உயிர் சேதங்களை குறைத்தமைக்கு இந்தியாவுக்கு ஐநா பாராட்டு!! (உலக செய்தி)

Read Time:2 Minute, 45 Second

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டு புயலின் போது உயிர் சேதங்களை குறைத்த இந்தியாவுக்கு ஐநா பாராட்டு தெரிவித்துள்ளது.

சென்னை அருகே வங்க கடலில் உருவாகி, தமிழ்நாட்டை தாக்கும் என்ற பதற்றத்தை ஏற்படுத்திய ‘பானி’ புயல் திடீரென பாதை மாறியது. அது தீவிர புயலாக மாறி, வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து ஒடிசா நோக்கி சென்றது.

இந்த புயல் நேற்று முன்தினம் ஆந்திராவில் கடலோர மாவட்டங்களில் பலத்த மழையை கொடுத்தது. வடக்கு, வடகிழக்கு நோக்கி நகர்ந்த ‘பானி’ புயல் கோபால்பூர்-சந்த்பாலி இடையே நேற்று காலை 8.30 மணி அளவில் கரையை கடந்தது.

பூரி, குர்தா, புவனேசுவரம், ஜெகத்சிங்பூர் என மாநிலம் முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. கடலோர மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மணிக்கு 175 கி.மீ. வேகத்தில் வீசிய பேய்க்காற்றால் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன.

பல்லாயிரக்கணக்கான மின் கம்பங்கள் விழுந்தன. இதனால் மின் வினியோகம் பாதித்தது. வீடுகள் இருளில் மூழ்கின. சாலைப் போக்குவரத்து கடுமையாக பாதித்தது. 147 ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. புயல் தொடர்பான சம்பவங்களில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.

20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் வலுவான புயல் ஒடிசாவை தாக்கிய போதிலும், அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், பெருமளவு உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

இந்திய வானிலை ஆய்வு மையம் மிகவும் துல்லியமாக கணித்து அளித்த தகவலின் பேரில், அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டதால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

இந்தநிலையில், சிறப்பாக செயல்பட்டு உயிர்சேதத்தை குறைத்த வானிலை ஆய்வு மைய துறைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பேரழிவு குறைப்பு முகமை வெகுவாக பாராட்டு தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இடையே…இடையிடையே…! (அவ்வப்போது கிளாமர்)
Next post அமெரிக்காவில் ஆற்றில் விழுந்த பயணிகள் விமானம்!! (உலக செய்தி)