பளபளக்கும் கழிப்பறைகளாக மாறும் பழைய பேருந்துகள்!! (மகளிர் பக்கம்)

Read Time:4 Minute, 8 Second

பெண்கள், இங்கு சுகாதாரமான கழிவறை வசதிகள் இல்லாததால், காலை வீடு விட்டுச்சென்று, மாலை வீடு திரும்பும் வரை கழிப்பறைகள் உபயோகிக்க முடியாத நிலைமையில்தான் இருக்கிறோம். குறிப்பாக பள்ளி மாணவிகள் இதனால் அதிகம் உடல் நலக்குறைபாட்டிற்கு ஆளாகின்றனர். ஒவ்வொரு முறையும் அவசரத்திற்காக ஏதாவதொரு உணவகத்தில் பெயருக்கென காபி, டீ என செலவு செய்துதான் அங்கிருக்கும் கழிப்பறையை உபயோகிக்க முடிகிறது. முறையான கழிவறை வசதிகள் இல்லாததும் பெண்களுக்கு எதிரான அநீதியாகவே பார்க்க வேண்டும்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் பூனா நகரை சேர்ந்த தொழில் முனைவோர்கள் உல்கா சதல்கர் மற்றும் ராஜீவ் கீரா என்ற இருவர் இதற்கான சுலபமான தீர்வை கொண்டுவந்துள்ளனர். பழைய பழுதடைந்த அரசு பேருந்துகளை பொது கழிவறைகளாக மாற்றியமைத்து, அதில் Wi-fi, ஷவர், குடிநீர் பாட்டில் வசதி என பல அம்சங்களை அறிமுகப்படுத்தி ஜமாய்த்துள்ளனர். இது பெண்களுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட கழிவறை. இதற்கு ‘Ti – Toilet’ எனப் பெயர் சூட்டியுள்ளனர்.

டி என்றால், மகாராஷ்டிர மொழியில் பெண் என்று பொருள். இந்திய பாணியிலும், மேற்கத்திய பாணியிலும் கழிவறைகள் அமைக்கப்பட்டு எப்போதும் சுத்தமாக பளீச் என்று முறையாக அவை பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் எப்போதும் உதவிக்கு பணிப்பெண் இருந்து, பேருந்தை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவியாய் இருக்கிறார். இங்கு குழந்தைகளுக்கு டையப்பர் மாற்ற வசதிகளும், பெண்களுக்கு நேப்கின்களும் இருக்கின்றன.

இது, முழுக்க முழுக்க சோலார் பவர் மூலம் கிடைக்கும் மின்சாரத்தில் மட்டும்தான் இயங்குகிறது. பூனா மாநகராட்சி பழைய பேருந்துகளை வழங்க, தனியார் நிறுவனங்கள் நன்கொடைகள் வழங்கி இதற்கான செலவுகளை ஏற்றுள்ளனர். இதை பராமரிக்க மாதம் ரூ.50,000 முதல் ரூ.60,000 வரை செலவாகிறது. செலவுகளை சமாளிக்க, பேருந்தில் விளம்பரத்திற்கென இடமும் ஒதுக்கியுள்ளனர். மேலும், பெண் தொழில்முனைவோர்கள் தங்கள் பொருட்களை அருகில் விற்கவும் அனுமதி வழங்கப்போவதாக தெரிவித்துள்ளனர். இது கூடுதல் லாபம் தந்து இன்னும் பல இடங்களில், டி-கழிவறைகளை அமைக்க உதவும்.

இந்த பேருந்துகளை மக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களான, பூங்காக்கள், சுற்றுலா இடங்கள் மற்றும் பிஸியாக இயங்கி வரும் சாலையோரங்களிலும் பொருத்தியுள்ளனர். மேலும், சில பேருந்துகளில் தினம் 300 பெண்கள் வந்து கழிவறையை உபயோகிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இது பெண்களுக்கு நிச்சயமாக ஒரு வரம்தான். இந்த டி-டாய்லெட் பயன்படுத்த ஐந்து ரூபாய் செலுத்தினால் போதும். இது, பேருந்தை சுகாதாரமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. இதுவரை 11 கழிவறை பேருந்துகள் இந்த நகரில் அமைக்கப்பட்டு, நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காமத்தில் வெட்கத்திற்கு இடமே இல்லை!! (அவ்வப்போது கிளாமர்)
Next post ஜனாதிபதித் தேர்தலில்களம் காண்பாரா ரணில் !! (கட்டுரை)