எண்ணெய் வழியும் சருமத்திற்கு…!! (மகளிர் பக்கம்)

Read Time:2 Minute, 58 Second

‘வதனமே சந்திர பிம்பமே’ என்பாங்க. ஆனா முகமெல்லாம் எண்ணெய் காடா இருக்கே என்று தினமும் கவலைப்பட்டுக் கொண்டே இருப்பவரா நீங்கள்? என்னவெல்லாமோ செய்து பார்த்தும் எண்ணெய் வழியிற முகம் மட்டுமே என்று அலட்டிக் கொள்பவரா நீங்கள்? கவலைய விடுங்க. கொஞ்சம் கீழே சொல்லப் போற விஷயங்களை எல்லாம் முயற்சி செய்து பாருங்க.

*தக்காளிப்பழச் சாற்றை முகத்தில் பூசி காய்ந்தபின் கழுவினால் எண்ணெய்த் தன்மை கட்டுப்பட்டு விடும். தக்காளியுடன் வெள்ளரிப் பழத்தை அல்லது ஓட்சை சேர்த்து அரைத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து கழுவி வந்தாலும் முகத்தில் இருக்கும் எண்ணெய்ப் பிசுபிசுப்பு நாளடைவில் நீங்கி விடும்.

*எண்ணெய்த் தன்மையான சருமத்தை உடையவர்கள் முகத்தில் மோரை பூசி சிறிது நேரத்திற்குப்பின் கழுவி வந்தால் எண்ணெய் தன்மை குறையும்.

*சோள மாவுடன் தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரத்திற்குப்பின் கழுவினால் முகத்தில் எண்ணெய்த் தன்மை நீங்கும்.

*வெள்ளரிக்காயை தினமும் காலையில் முகத்தில் தேய்த்து வர முகத்தில் சுரக்கும் எண்ணெயானது கட்டுப்படும். வெள்ளரிச் சாறுடன் பால் பவுடரைக் கலந்து பூசினாலும் எண்ணெய்த் தன்மையின்றி முகம் பிரகாசமாகக் காணப்படும்.

*எண்ணெய்த் தன்மையுள்ள சருமத்தினர் அடிக்கடி முகம் கழுவ வேண்டும். முகத்தைக் கழுவ சோப்புக்குப் பதிலாக கடலை மாவைப் பயன்படுத்துங்கள். எண்ணெய்த் தன்மை குறைவதோடு முகமும் பளபளக்கும்.

*பால் மற்றும் முட்டையின் வெள்ளைக் கருவுடன் கேரட் துருவலைக் கலந்து முகத்தில் பூசினால் எண்ணெய் சுரப்பது குறைந்துவிடும்.

*வெள்ளரிச்சாறு, எலுமிச்சை சாறு, சந்தனப் பவுடர், தயிர், பாதாம் பவுடர், உருளைக்கிழங்குச் சாறு ஆகியவற்றை சம அளவில் எடுத்து கலந்து முகத்தில் பூசி சிறிது நேரத்திற்குப்பின் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் எண்ணெய்த் தன்மை நன்கு குறைவடையும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வைரஸ் காய்ச்சலை குணப்படுத்தும் பப்பாளி!! (மருத்துவம்)
Next post மூன்றாம் கண் மற்றும் மனிதனுக்கு இருக்கும் மர்மமான சக்தி!! (வீடியோ)