அழகே… அழகே… மணமகள் அலங்காரம்!! (மகளிர் பக்கம்)

Read Time:14 Minute, 43 Second

இப்போதெல்லாம் 90 சதவிகிதம் மணப்பெண்கள் திருமணம் என வந்துவிட்டால் பணத்தைப் பற்றி யோசிப்பதே இல்லை. தங்களை எடுப்பாய் காட்ட நிறையவே மெனக்கெடுகிறார்கள். திருமணத்திற்கு தயாராக ஒரு மணப்பெண் என்ன மாதிரியான ஸ்கின் கேர் மற்றும் ஸ்கின் டிரீட்மென்ட்களை மேற்கொள்ள வேண்டும். எத்தனை நாட்களுக்கு முன்பிருந்து அவர்கள் தங்கள் தோலின் பொலிவை பாதுகாக்க வேண்டும் என்ற கேள்விகளோடு, மணப் பெண்ணிற்கான அழகுக் கலை வல்லுநரான பாத்திமா மூவாவை அணுகியபோது, ஏராளமான தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

“திருமணம் என்றாலும் வரவேற்பு என்றாலும் முன்னதாக 2 மணி நேரம் எங்களுக்குத் தேவை. திருமணத்திற்கு முன்பே நாங்கள் மணமகளுக்கு டிரையல் பண்ணுவதால் போடப் போகும் மேக்கப் எதுவும் எங்களுக்கு புதிதாக இருக்காது. மணமகளின் ஸ்கின் டோனுக்கு ஏற்ப, எதைப் பயன்படுத்த வேண்டும், எந்த அளவில் என்னென்ன மாதிரியான ப்ராடக்ட்களை பயன் படுத்தப் போகிறோம் என முன்பே எங்களுக்கு தெரிந்திருக்கும். ஒரு மணப்பெண் மேக்கப் செய்ய வருகிறார் என்றால், முதலில் கட்டாயம் அவர் புருவங்களை திருமணத்திற்கு இரண்டு தினங்களுக்கு முன்பே திருத்தம் செய்திருக்க வேண்டும்.

அப்பர் லிப்ஸ், முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை முடிந்தவரை நீக்கியிருக்க வேண்டும். முகத்திற்கு மட்டும் கேர் எடுக்காமல் கை கால்களையும் கேர் எடுத்தால் திருமண புகைப்படங்கள் பார்க்க மிகவும் நன்றாக இருக்கும். கால்களில் வெடிப்பு இருந்தால் முறையாக பெடிக்யூர், மெனிக்யூர் எடுக்க வேண்டும். மெகந்தியை திருமணத்திற்கு இரண்டு நாளுக்கு முன்பே போட்டுக்கொள்ள வேண்டும். நகங்களை சரியான முறையில் பராமரித்து வைத்துக்கொள்ள வேண்டும். திருமணத்திற்கு முதல் நாளில் ஷார்ட் கட், ஸ்டைல் கட் போன்ற விசயங்களைச் செய்தல் கூடாது.

ஹேர்கட் செய்வதால் சிகை அலங்காரம் செய்வது சரியாக இருக்காது. எண்ணெய் தன்மை உடைய தோல் உள்ளவர்களுக்கு மேக்கப் போடும்போது ஆயில் வந்துகொண்டே இருக்கும் என்றால் ஃபவுண்டேசனுக்கு முன் ஸ்கின் டோனுக்கு ஏற்ற நிறத்தில் ட்ரைமர் பயன்படுத்துவோம். இது ஆயிலை கட்டுப்படுத்தும். ட்ரை ஸ்கின் என்றால் அதற்கேற்ற ட்ரைமர் பயன்படுத்துவோம். திருமணம் இன்டோர் அதுவும் முழுவதும் ஏ.சி ஹால் என்றால் எனி டைப் ஆப் ஃபவுண்டேசன் போட்டு மேக்கப்பை மேட்ச் செய்துவிடலாம். ஆனால் வெளியில், அவுட்டோர் மேரேஜ் அல்லது நீண்ட தூரம் பயணம் செய்து திருமணம் செய்வது என்றால் திக்கான ஃபவுண்டேசன் போடுவோம்.

திக் ஃபவுண்டேசன், லிக்யூட்டை விட ஸ்கின்னை நன்றாக இருக்கி பிடித்துக் கொள்ளும். மேலும் ஈவென்ட்டுக்கு ஏற்ற மாதிரியான ஃபவுண்டேசன் மற்றும் பிராண்டுகளையும் பயன்படுத்துவோம். ஹேர் ஸ்டைல் எல்லாம் ட்ரையல் மேக்கப்பிலே நாங்கள் பார்த்துவிடுவதால் மணமகளுக்கு என்ன சூட் ஆகும் என்ன தேவை என்பது எங்களுக்கு முன்பே தெரிந்துவிடும். ட்ரையலிலே 90 சதவிகிதம் நாங்கள் வேலை செய்துவிடுவதால் திருமணத்தில் மணப் பெண்ணிற்கு என்ன தேவை என்பது மைன்ட்டில் ரிஜிஸ்டர் ஆகிவிடும். என்னிடம் மேக்கப்பிற்கு வரும் பிரைட் நார்மல் ஸ்கின் மேனேஜ் பண்ண முடியும் என்றால், முதல் வாரத்தில் இருந்தே மணநாளுக்குத் தேவையான பொருட்கள், திருமணத்திற்கான நகை, உடை, அக்ஸசரிஸ் எல்லாவற்றையும் ரெடிபண்ணி வைத்துவிடச் சொல்லுவேன்.

இது கடைசி நேர டென்ஷனை குறைக்க உதவும். ஒரு மணப் பெண் முகத்தை மட்டுமே வெள்ளையாக வைத்துக் கொண்டு, கை கால்கள் கருப்பாக இருந்தால் திருமணப் புகைப்படம் மற்றும் வீடியோ பார்க்க நன்றாக இருக்காது. முகம் மட்டுமின்றி கை கால் எல்லாவற்றிற்கும் சேர்த்தே அக்கறை எடுத்தல் வேண்டும். மணப்பெண்ணின் ஸ்கின் டைப்பை பொருத்தே அவருக்கான டிரீட்மென்ட் வழங்கப்படும். தோலில் எந்தப் பிரச்சனையும் இல்லாத ஸ்கின்னை உடையவர்கள் அல்லது ஓரளவுக்கு பிரச்சனை இல்லாத தோல் கொண்ட மணப்பெண்களுக்கு திருமணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்து அவர்கள் தயாரானால் போதும்.

ஆனால் தோலில் பிரச்சனைகள் நிறைய உடையவர்கள், மெடிக்கலாக ஸ்கின் டீரிட்மென்ட்டை செய்தே பிறகே, திருமண அலங்காரத்திற்கு தயாராக வேண்டும். தோல் மருத்துவர்களை அணுகி டிரீட்மென்ட்டை எடுத்துக் கொண்ட பிறகு பார்லர்களை அணுகலாம். அதேபோல் இரவு நேர பணியில் இருக்கும் மணப்பெண்கள், நீண்ட தூரம் பயணம் செய்து பணியிடத்தை அடைபவர்களுக்கு கட்டாயம் தோலில் பிரச்சனைகள் இருக்கும். இவர்கள் அதற்கான முறையான சிகிச்சையினை எடுக்காமல் மணப் பெண்ணிற்கான அலங்காரங்களை மேற்கொள்வது தவறு. ஏனெனில் திருமணத்தன்று எவ்வளவுதான் மேக்கப் போட்டாலும் அது பார்க்க நன்றாக இருக்காது.

உதாரணத்திற்கு ஒரு மணப்பெண்ணிற்கு முகத்தில் நிறைய பரு அல்லது டீப்பான டார்க் சர்க்கிள்ஸ், டீப் பிக்மென்டேஷன் பிரச்சனை, டிரையான ஸ்கின் பிரச்சனை என இதில் எந்த ஒரு பிரச்சனை இருந்தாலும், பிரச்சனையான தோல் கொண்டவர்கள், எடுத்ததும் பார்லரை அணுகாமல், கிளினிக்கல் வைஸாக அல்லது மெடிக்கல் வைஸாக ஆறு மாதங்களுக்கு முன்பிருந்தே தங்களைத் தயார்படுத்தத் தொடங்க வேண்டும். அப்படித் தங்களை தயார் செய்து கொண்டு ஒப்பனையில் ஈடுபடும்போது திருமண நேரத்தில் அவர்களின் தோற்றம் அலங்காரம் செய்துகொள்வதற்கு ஏற்ற தன்மையில் ஸ்கின் மிகவும் நெகிழ்வுத்தன்மையுடன் இருக்கும்.

திருமணம் முடிவானதுமே வெளியில் செல்லும்போது தோலில் வெயில் படாதவாறு முகத்தை மூடிக்கொண்டு, கை கால்களில் கிளவுஸ் அணிந்து கொண்டு செல்வதே நல்லது. வெளியில் போக வேண்டிய சூழலில் சன் ஸ்க்ரீன் பயன்படுத்தலாம். இல்லையென்றால் திருமணம் நெருங்கும் நேரத்தில் தோல் மங்கிவிடும். அது மணப்பெண் மேக்கப்பில் அப்படியே தெரியும். பார்லரில் இப்போதெல்லாம் ‘ஃப்ரீ பிரைடல் பேக்கேஜ்’ என ஒரு சிஸ்டம் வைத்துள்ளார்கள். 2 அல்லது 3 ஃபேசியல் செய்யச் சொல்லுவார்கள். ‘இதுவரை நான் பார்லருக்கு சென்றதில்லை. ஸ்கின் டச் எதுவுமே எடுத்ததில்லை’ என்பவர்கள், வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே தோலை தயார்படுத்த முடியும். திருமணம் வரை பார்லர் போகாதவர்கள் புதிதாக பார்லர் சென்று ஃபேசியல், ப்ளீச் செய்ய வேண்டாம்.

பார்லர்களில் எதையாவது கடைசி நேரத்தில் மேற்கொண்டால், திருமண நேரத்தில் தோலில் தேவையற்ற எதிர்வினைகளைக் காட்டிவிடும். வேர்க்குரு போன்ற சின்னச் சின்ன பொரிகள் தோன்றி முகத்தோற்றம் கெட்டுவிடும். சிலருக்கு ஒவ்வாமையால் தோல் வரண்டிருக்கும். தோல்கள் உரிந்து விடும். பார்லருக்கு சென்று பழகியவர்கள், உங்கள் தோலின் தன்மைக்கு எது உகந்ததோ அதை மட்டுமே மேற்கொள்வது நல்லது. ஃபேசியலோ, ப்ளீச்சோ மாலை நேரத்தில் செய்வதே பெரும்பாலும் சிறந்தது. பகலில் செய்துவிட்டு வெயிலில் வெளியில் சென்றால் முகம் மேலும் கருத்துவிடும். ஒருசில பார்லர்களில் ப்ரைடல் மேக்கப் என்றால் கோல்ட் பேசியல் அல்லது வேறு சில பேசியல் பெயர்களைச் சொல்வார்கள்.

அவரவர் ஸ்கின் டைப்பிற்கு எதைச் செய்தால் சரியோ அதை எடுத்துக் கொண்டாலே போதும். சிலருக்கு தோல் வறண்டு காணப்படும். அவர்கள் எவ்வளவுதான் மாய்ச்சரைசர் போட்டாலும் ஸ்கின் அதனை இழுத்துவிடும். வறண்ட சருமம் கொண்டவர்கள் ஆல்மென்ட் ஆயில், லெமன், மஞ்சள் தூள் மூன்றையும் கலந்து முகத்தில் தடவி பத்து பதினைந்து நிமிடத்தில் கழுவினால் தோலின் ட்ரைனஸ் குறையும் எந்த ஒரு மாற்றமும் ஒரு நாள் இரண்டு நாளில் வந்துவிடாது. தொடர்ந்து செய்தால் மட்டுமே மாற்றம் நிகழும். சில மணப்பெண்கள் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே ஸ்கின் கேர் எடுப்பார்கள்.

அதாவது கடலை மாவு, தயிர், காய்ச்சாத பால், வெள்ளரி ஜூஸ் இவற்றை அடிக்கடி தோலில் போடும்போது தோல் மிகவும் மென்மையானதாக மாறத் துவங்கும். மணநாளில் இடப்படும் மேக்கப்பை தோல் நன்றாக அப்சர்வ் செய்யும். திருமணம் முடிவான நாளில் இருந்தே இவற்றை செய்யத் தொடங்கினால், இயல்பான அழகும், மினுமினுப்பும், தோற்றமும் கிடைக்கும். முகத்திற்கு ஸ்க்ரப் செய்வது மிகவும் முக்கியம். ஸ்க்ரப் செய்வதால் டெட் செல்கள் உதிரும். பேசியல் செய்ய விரும்பாத மணமகள்கள் வாரத்தில் ஒரு நாளாவது முகத்தை ஸ்க்ரப் செய்வது சிறந்தது.

அதிக அழுத்தம் தரும் ஸ்க்ரப்களைத் தவிர்த்து, மைல்டான ஸ்க்ரப்களை வாங்கி பயன்படுத்தலாம். ஸ்க்ரப் பயன்படுத்த விரும்பாதவர்கள் அரிசி மாவு, பயத்த மாவு போன்றவற்றை வீட்டிலே தயார் செய்து ஸ்க்ரப்பாக உபயோகிக்கலாம். முக்கியமாக மணப் பெண்கள் தினமும் ஆழ்ந்து நன்றாக தூங்க வேண்டும். தண்ணீர் நிறைய குடித்தல் வேண்டும். இதனாலும் தோலுக்கு மென்மையான தன்மை கிடைக்கும். முடிந்தவரை ஜங் ஃபுட்ஸ், ஃபாஸ்ட் ஃபுட்ஸ் போன்றவற்றைத் தவிர்க்கலாம். எண்ணெயில் தயாரான உணவுகளுக்கும் நோ சொல்ல வேண்டும். நாம் எடுக்கும் உணவை நிதானமாக பார்த்து உண்டாலே முகம் பொலிவு பெறும். அழகு கூடும்.

முக்கியமாக வயிறு தொடர்பான பிரச்சனைகள், செரிமானப் பிரச்சனைகள் வராமல் பார்த்துக்கொண்டாலே பரு, மரு, கரும்புள்ளிகள், மங்கு, பிக்மென்டேஷன் பிரச்சனைகள் தோலில் தோன்றாது. தலையில் பொடுகு நிறைய இருந்தால் புகைப்படத்தில் வெளிப்படையாகத் தெரிந்து விடும், அதற்கும் சேர்த்தே திருமண நேரத்தில் சிகிச்சை எடுக்க வேண்டும். பொடுகு பிரச்சனை உள்ள மணமகள் ஆலிவ் ஆயில் கொண்டு மசாஜ் எடுப்பதோடு, முறையான ஹேர் வாஷ் செய்வது நல்லது. அல்லது ஆலுவேரா ஜெல்லை தலையில் அப்ளை செய்து குளிக்கலாம். இவற்றையெல்லாம் செய்ய முடியாத நிலையில் இருப்பவர்கள் திருமணத்திற்கு ஒருவாரத்திற்கு முன்பாகவே ஹேர் ஸ்பா டிரீட்மென்ட் எடுக்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மீண்டும் அழ விரும்பவில்லை! : மல்யுத்த வீராங்கனை குர்சரண் ப்ரீத் கவுர்!! (மகளிர் பக்கம்)
Next post அம்பானி மகனை திருமணம் செய்து கொள்ள நூறு கோடி கேட்ட பெண்!! (வீடியோ)