By 31 May 2019 0 Comments

ஒரே படத்தில் இணையும் டாப் 4 ஹீரோயின்கள்!!

சைர நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி. சுதந்திர போராட்ட வீரரின் வாழ்க்கை கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் அவருடன் அமிதாப்பச்சன், சுதீப், விஜயசேதுபதி, நயன்தாரா, தமன்னா உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை அடுத்து கொரட்டல்ல சிவா இயக்கும் தனது 152வது படத்தில் நடிக்கிறார் சிரஞ்சீவி. இந்த படத்தில் அவருடன் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், தமன்னா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் என நான்கு மெகா நடிகைகள் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

இவர்களில் ஸ்ருதிஹாசன், தமன்னா இருவரும் அவருடன் ரொமான்ஸ் செய்யும் கதாபாத்திரங்களிலும், அனுஷ்கா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகிய இருவரும் கதைக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்களாம். ஆகஸ்ட் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.



Post a Comment

Protected by WP Anti Spam