மிகச்சிறப்பாக நடைபெற்ற, “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்”, வேரும் விழுதும் விழாவின் “கலைப்பெருமாலை” நிகழ்வு..! (படங்கள்)

Read Time:14 Minute, 55 Second

மிகச்சிறப்பாக நடைபெற்ற, “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்”, வேரும் விழுதும் விழாவின் “கலைப்பெருமாலை” நிகழ்வு..! (படங்கள்)

“சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” சார்பில், “சுவிஸ் வாழ் தமிழ் மக்களுடன் இணைந்து” கடந்த சனிக்கிழமை 25.05.2019 மாலை மூன்று மணிக்கு Bären Strasse -5, 3414 OBERBURG எனுமிடத்தில் உள்ள “சமூகப் புரட்சியாளர்” அமரர் மு.தளையசிங்கத்தின் நினைவு மண்டபத்தில் “ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாக” நடைபெற்ற நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

** விருந்தினர்கள் வரவேற்பு…

மேற்படி நிகழ்வில் பிரதம விருந்தினராக “எம்.எஸ்.எஸ்”பவுண்டேஷன் நிறுவனரும், சமூக சேவையாளரும், விரிவுரையாளருமாகிய திரு.மாகோ சி.கனகலிங்கம் அவர்கள் கனடாவில் இருந்து தம்பதிகளாகக் கலந்து கொண்ட அதேவேளை, சிறப்பு விருந்தினராக முன்னாள் அதிபரும், சமாதான நீதிவானும், பிரபல சமூக சேவையாளருமாகிய திரு.எஸ்.கே.சண்முகலிங்கம் அவர்கள் இலங்கையில் இருந்து தம்பதிகளாகக் கலந்து கொண்ட அதேவேளை, பிரபல எழுத்தாளர்களில் ஒருவரான திரு.பாலகணேஷ் அவர்கள் பிரான்சில் இருந்தும், சுவிஸ் விஷ்ணு துர்க்கையம்மன் ஆலய பிரதமகுரு வணக்கத்துக்குரிய திரு.சரவணபவானந்தக் குருக்கள், சுவிஸ் சுக் மாநில விநாயகர் ஆலயம் மற்றும் தூண் மாநில சீரடி சாய் பாபா ஆலய பிரதமகுரு வணக்கத்துக்குரிய திரு.பாஸ்கரன் சர்மா, சுவிஸ் பேர்ண் மாநில சிவன் ஆலய பிரதம குருக்களில் ஒருவரான வணக்கத்துக்குரிய திரு.முரளிதரன் ஐயா அவர்களும், ஜெர்மனியில் இருந்து சமூக சேவையாளர் திருமதி.லிங்கேஸ்வரி சிவதாஸ், சுவிஸ் புங்கையூர் வர்த்தகப் பெருமக்களில் திரு.இ.இரவீந்திரன், திரு.இ.ஸ்ரீதாஸ், மற்றும் சுவிஸ் தூண் நகரசபை உறுப்பினரான திருமதி தர்சிகா ஜெயாதரன் ஆகியோரும் சிறப்பு & கௌரவ விருந்தினர்களாக கலந்து உரையாற்றி சிறப்பித்து இருந்தனர்.

** மங்கள விளக்கேற்றல்…

விழாவின் ஆரம்ப நிகழ்வாக மண்டப வாசலில் “வரவேற்பு நிறைகுட விளக்கேற்றலை” ஒன்றியத்தின் தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் தம்பதிகளும், ஒன்றியத்தின் பொருளாளர் திரு.அருணாசலம் கைலாசநாதன் (குழந்தை) தம்பதிகளும், ஏற்றி விருந்தினர்களை வரவேற்று விழாவை ஆரம்பித்து வைத்தனர். இதனைத் தொடர்ந்து விருந்தினர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டு, “மேடையில் மங்கள விளக்கேற்றல்” நிகழ்வை சுவிஸ் ஒன்றியத்தின் உறுப்பினர்களான புங்குடுதீவின் பன்னிரெண்டு வட்டாரப் பிரதிநிதிகளினால் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமைதி வணக்கம், மற்றும் தமிழ் தாய் வாழ்த்து நிகழ்த்தப்பட்டது.

“சமூகப் புரட்சியாளர்” மு.த கௌரவிப்பு…

தொடர்ந்து, “சமூகப் புரட்சியாளர்” அமரர் மு.தளையசிங்கத்தின் திருவுருவப் படத்துக்கு திரு.பாலகணேஷ் அவர்கள் மலர்மாலை அணிவிக்க, கலந்து கொண்ட விருந்தினர்களினாலும், பொதுமக்களினாலும் விளக்கேற்றியும், மலர்தூவியும் கௌரவிப்பு நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து திரு.பாலகணேஷ் அவர்களினால், அமரர் மு.தளையசிங்கத்தின் “சாதியக் கொடுமைக்கு எதிராக” நடத்தப்பட்ட சாத்வீகப் போராட்டம் குறித்து விபரிக்கப்பட்டது.

**வரவேற்புரை, ஆசியுரை….

இதனைத் தொடர்ந்து, ஒன்றியத்தின் செயலாளர் திருமதி.செல்வி சுதாகரன் அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. தொடர்ந்து வரவேற்பு நடனம் நடைபெற்றது. தொடர்ந்து ஆசியுரை வழங்கிய சுவிஸ் விஷ்ணு துர்க்கையம்மன் ஆலய பிரதம குரு வணக்கத்துக்குரிய திரு.சரவணபவானந்தக் குருக்கள் அவர்கள், “ஊர் ஒன்றியத்தை உருவாக்கி, தமது மண் மறவாது சேவை செய்வதில் சுவிஸில் உள்ள புங்குடுதீவாரைத் தான் குறிப்பிட்டு சொல்லலாம், இதேவேளை இன்றையதினம் புங்குடுதீவின் விழாவை சிறப்பாக செய்யும் அதேவேளை தனிப்பட்ட நான்கைந்து நிகழ்வுகளையும் இன்றையதினம் ஏற்பாடு செய்து நடத்துவது கவலைக்குரிய விடயம், இதுக்கு காரணம் விழாக்களை ஏற்பாடு செய்தவர்களில் ஒருவருக்கு ஒருவர் விடயம் தெரியாமல் போனது தான், எதிர்காலத்தில் இதனைத் தவிர்க்கும் பொருட்டு இணையங்கள், சமூகத்தளங்கள் ஊடாக அறிவித்து செயலாற்ற வேண்டுமெனவும்” குறிப்பிட்டார்.

** விசேட பிரதிநிதியாக திரு.அறிவுமதி…

இதேவேளை தமிழ்நாட்டில் இருந்து தனிப்பட்ட விஜயமாக சுவிஸுக்கு வருகை தந்திருந்த பிரபல எழுத்தாளர் திரு.அறிவுமதி அவர்களும், விழாவில் விசேட பிரதிநிதியாக கலந்து சிறப்புரை ஆற்றி இருந்தார்.

*** விருந்தினர்கள் கௌரவிப்பு…

விழாவில் பிரதம, சிறப்பு, கௌரவ விருந்தினர்களாகக் கலந்து கொண்டோருடன் ஒன்றியத் தலைவர், விசேட பிரதிநிதிகள் யாவரும் பொன்னாடை போர்த்து, மாலை அணிவித்து, நினைவுக் கேடயங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

** பிரதம விருந்தினர் உரை…

பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட “எம்.எஸ்.எஸ்”பவுண்டேஷன் நிறுவனரும், சமூக சேவையாளரும், விரிவுரையாளருமாகிய திரு.மாகோ சி.கனகலிங்கம் அவர்கள் “சுவிஸ் ஒன்றியத்தின் செயல்பாடுகளை பாராட்டியதுடன், தம்மால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளையும் விபரித்து எதிர்காலத்தில் எல்லோரும் இணைந்து செயல்பட வேண்டும்” என்பதையும் வலியுறுத்தினார்.

** சிறப்பு விருந்தினர் உரை…

அதேபோல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட முன்னாள் அதிபரும், சமாதான நீதிவானும், பிரபல சமூக சேவையாளருமாகிய திரு.எஸ்.கே.சண்முகலிங்கம் அவர்கள் “சுவிஸ் ஒன்றியம் புங்குடுதீவில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்தும், புங்குடுதீவின் தற்போதைய நிலைமை, மாணவர்களின் தொகை விபரம் ஆகியன குறித்து தெளிவாக விளக்கி” உரையாற்றினார்.

*** தலைவர் உரை….

விழாவுக்கு தலைமையேற்று நடத்திய “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்கள் தனதுரையில், “எவ்வளவோ விமர்சனங்கள், இடர்களுக்கு மத்தியிலேயே தமது செயல்பாடுகளை மேற்கொள்வதை” விபரித்ததுடன், “புங்குடுதீவு ஒன்றியத்தின் எந்தவொரு செயல்பாட்டிலும் அரசியல் இருக்காது, இருக்கவும் கூடாது” என்பதுடன் வடமாகாண முன்னாள் ஆளுநரின் சந்திப்பையும் காரண காரியத்துடன் விளங்கப்படுத்தியதுடன்,

“மனிதநேயப்பணி என்பது என்னவென்று தெரியாமல், நாம் பொதுசேவைக்கு வந்தவர்கள் இல்லை” என்பதைக் குறிப்பிட்டு, நான் உட்பட எதிர்காலத்தில் “ஒன்றியத்தின் பணிகளை செய்ய முன்வருவோர்” அரசியல் கலப்பு, தனிநபர் கலப்புக்கள் இன்றி, ஊருக்காக மட்டுமே பொதுவான நலன் சார்ந்து, சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாகவும்,

இப்போது போன்றே முறையான கணக்குவழக்குகளை காலம் தாழ்த்தாது வெளியீடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்வதோடு, ஒன்றியத்தின் அங்கத்துவ நிதியையும், பொது நிதியையும் எமது “ஊர்நோக்கிய செயல்பாடுகளுக்கு மட்டுமே” பயன்படுத்த வேண்டும் என்றும்.. விழாக்கள், மலர் வெளியீடுகளை பிரத்தியேகமாக நிதி சேகரித்து செய்ய வேண்டும் என்றும் இந்த சந்தர்ப்பத்தில் கேட்டுக் கொள்வதாகவும்” குறிப்பிட்டார்.

** விழா மலர் வெளியீடு…

இதனைத் தொடர்ந்து “வேரும் விழுதும் 2019” விழா மலர் வெளியீடானது. ஒன்றியத்தின் உபதலைவர் திரு.லிங்கம் சஞ்சய் அவர்களின் தலைமையில் விருந்தினர்களின் கௌரவிப்புடன் நடைபெற்றது. மேற்படி விழாமலரின் செலவின் பெரும்பகுதியை உபதலைவர் திரு.சஞ்சய் அவர்களும், மலரின் இறக்குமதிக்கான முழுச்செலவையும் “ஏரோ லைன்ஸ்” நிறுவனர் திரு.ஸ்ரீ இராசமாணிக்கம் அவர்களும் பொறுப்பேற்று இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

*** பொது சேவையில் ஈடுபடுவோர் கௌரவிப்பு…

இதனைத் தொடர்ந்து, “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால்” ஒவ்வொருவரின் சமய, சமூக, பொதுப் பணிகளில் ஈடுபாட்டுடன் செயல்படும் அதேவேளை ஒன்றியத்துடன் இணைந்து செயல்படும் நபர்களில், நான்கைந்து பேர்களை வருடாவருடம் கௌரவிக்க வேண்டுமெனும் நோக்கில் கடந்த வருடம் திரு.சிவகுமார் (பீல்), திரு.தனபாலசுப்ரமணியம் (தனம் அண்ணர்-சூரிச்), திரு.வடிவேலு (தூண்), திரு.தங்கராஜா (மதி -பீல்), திரு.சிவகுமார் (தூண்) ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

அதேபோல் இவ்வருடம் திரு.இராசமாணிக்கம் இரவீந்திரன் (சாய் ட்ரடேர்ஸ்), திரு.இளையதம்பி ஸ்ரீதாஸ் (இம்போர்ட தாஸ்), திரு.சின்னத்துரை இலட்சுமணன், திரு.செல்வரெட்ணம் சுரேஷ் ஆகியோர் அவர்களின் “சமய, சமூக, பொதுப் பணிகளுடன் செயல்படும் அதேவேளை ஒன்றியத்துடன் இணைந்து செயல்படும்” காரணத்தினால் “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால்” கௌரவிக்கப்பட்டனர். யாவரும் பொன்னாடை போர்த்து, மாலை அணிவித்து, நினைவுக் கேடயங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

*** நன்றியுரை…

விழாவுக்கான நடன நிகழ்வுகளை “பாரத ஷேத்ரா, நர்த்தனா நடனாலயம், ட்ரீம் போய்ஸ்” போன்ற பல நடனக் குழுக்களால் சிறப்பாக வழங்கப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து நன்றியுரையை திருமதி.லலிதா இலக்சுமணன் அவர்கள் வழங்கி இருந்தார்.

*** பட்டிமன்றம்…

அத்துடன் “டென்மார்க்” திரு.ஸ்ரீதரன் தலைமையில் திரு.நிமலன், திரு.சண் தவராஜா, திருமதி.சிவதர்சினி இராகவன், திருமதி.கார்த்திகா முரளிதரன், திரு.கேதீஸ்வரன், திரு.நயினை ஸ்ரீ (கங்கை மகன்) ஆகியோரின் சிறப்பான நகைச்சுவை கலந்த பேச்சுடன் “பட்டிமன்றம்” சிறப்பாக நடைபெற்று மக்களைக் கவர்ந்தது.

***நகைச்சுவை நாடக விருந்துகள்…

இதேவேளை திரு.ரமணன், திரு.சாய் ஆகியோரின் பங்களிப்பில் நகைச்சுவைகளும், திரு.சுரேஷின் நெறியாள்கையில், திரு.சுரேஷ், திரு.ரமணன், திரு.செந்தூரன், திரு.சாய், திருமதி சிந்துயா தனேஷ் ஆகியோரின் நடிப்பில் நகைச்சுவை கலந்த சமூக நாடகமான “எண்ண விடுங்கோ” நாடகமும் மக்களைக் கவர்ந்தது.

*** பங்களித்தோர் கௌரவிப்பு….

இதேவேளை விழாவுக்கான நிதிப் பங்களிப்பு அளித்தோரினால், அவர்களின் அமரத்துவமடைந்த பெற்றோர்களின் நினைவாக “நினைவுக் கிண்ணம்” அவர்களாலேயே, நிகழ்வுகளைத் தந்து கௌரவித்தோருக்கு வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். இதுக்கான முழு ஒழுங்குகளையும் ஒன்றியத்தின் ஆலோசனைசபை உறுப்பினர்களில் ஒருவரான திரு.இலட்சுமணன், திருமதி லலிதா இலட்சுமணன், ஒன்றிய செயலாளர் திருமதி செல்வி சுதாகரன் ஆகியோர் ஏற்பாடு செய்து நடத்தினர். அதேபோன்று மண்டப ஒழுங்கு, சமையல் மற்றும் வீடியோ, புகைப்பட படப்பிடிப்பு, சவுண்ட் போன்ற அனைவரும் நினைவுப்பரிசில் வழங்கிக் கௌரவிக்கப்பட்டு, விழா இனிதே நிறைவு பெற்றது

.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிகர் செந்தில் பற்றி பலரும் அறியாத 10 உண்மைகள்.!! (வீடியோ)
Next post உங்கள் கர்ப்பப்பையின் அளவு என்ன? (மருத்துவம்)