வயிற்றுவலிக்கு வழங்கிய மாத்திரைக்குள் சிறிய கம்பி!! (உலக செய்தி)

Read Time:2 Minute, 27 Second

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்ட மாத்திரைக்குள் சின்னஞ்சிறிய கம்பி இருந்ததால், நோயாளிகள் அதிர்ச்சியுற்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ஏறான் துறை கிராமத்தை சேர்ந்த பாண்டி மற்றும் சக்தி ஆகியோர் வயிற்றுவலிக்காக சிகிச்சை பெற ஏர்வாடி அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அப்போது அவர்களுக்கு சிப்ரோப்லோக்சசின் மாத்திரை கொடுக்கப்பட்டது. அந்த மாத்திரையானது இமாச்சலபிரதேசத்தில் உள்ள பயோ ஜெனடிக் டிரக்ஸ் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டதாகும்.

மாத்திரையை இரண்டாக உடைத்து பாதியாக உட்கொள்ளுமாறு செவிலியர்கள் கூறியுள்ளனர். இதை அடுத்து, சக்தி என்பவர் தனக்கு கொடுக்கப்பட்ட மாத்திரையை பாதியாக உடைக்க முற்பட்ட போது, மாத்திரை வளைந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சக்தி, அதை உடைத்த போது உள்ளே பின் போன்ற கம்பி இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பாண்டி என்பவருக்கும் கொடுக்கப்பட்ட சிப்ரோப்லோக்சசின் மாத்திரையை உடைத்த போது, அதற்குள்ளும் கம்பி இருந்தது. இதுகுறித்து மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்டபோது, தெரியாமல் கம்பி விழுந்திருக்கக் கூடும் என்று அலட்சியமாக பதில் சொன்னதாகவும், வேறு மாத்திரை வாங்கிக் கொள்ளுமாறு கூறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மாத்திரையை இரண்டாக உடைத்ததால் தாங்கள் தப்பித்ததாகவும், உடைக்காமல் விழுங்கி இருந்தால் சிக்கல் ஏற்பட்டு இருக்கும் என்று சக்தியும், பாண்டியும் தெரிவித்தனர். எனவே மாத்திரையை நான்காக உடைத்து பின்னரே விழுங்கியதாகவும் அவர்கள் கூறினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கர்ப்பக்கால சர்க்கரை நோய்! கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்!! (மருத்துவம்)
Next post அமைதி விரும்பிகளும் ஆவேச மனிதர்களும்! (மகளிர் பக்கம்)