குளிர்ச்சி தரும் லிச்சி பழம்!! (மருத்துவம்)

Read Time:8 Minute, 9 Second

கோடை காலத்தில் கிடைக்கும் மாம்பழத்தைப் போலவே இன்னொரு முக்கியமான பழம் லிச்சி. சீனாவைத் தாயகமாகக் கொண்ட லிச்சி, இப்போது எல்லா நாடுகளிலும் பரவலாகக் கிடைக்கிறது. நம் ஊரிலும் சூப்பர் மார்க்கெட் முதல் தள்ளுவண்டி கடைகள் வரை லிச்சி பழத்தை அதிகம் காணமுடிகிறது. சிலர் அது என்ன பழமோ என்று யோசித்தவாறே விலகுகிறார்கள். சிலர் சுவைத்துப் பார்க்கும் ஆவலோடு வாங்குகிறார்கள். விபரமறிந்து தொடர்ச்சியாக வாங்கி பயன்பெறுகிறவர்கள் ஒரு சிலர் மட்டுமே! லிச்சியின் முழுமையான பலனை அறிந்துகொண்டால் நாமும் அந்த ஒரு சிலரில் முக்கியமானவராகிவிடுவோம்.

உடற்சூட்டைக் குறைக்க உதவும் தர்பூசணி, கிர்ணி மற்றும் சாத்துக்குடி முதலான பழங்கள் கோடைக்காலத்தில் ஏராளமாகக் கிடைப்பது போன்று, இந்தக் காலத்தில் லிச்சி பழம் அதிகளவில் கிடைக்கிறது. நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து நிறைய உள்ள இக்கனியில், கலோரியின் அளவு மற்ற பழங்களுடன் ஒப்பிடுகையில் குறைவாகவே உள்ளது. பசியுணர்வைக் கட்டுப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு.கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில், இந்தப் பழத்தில் உள்ள பைட்டோ கெமிக்கல்ஸ்(Phytochemicals) செல்களின் அபரித வளர்ச்சியைத் கட்டுப்படுத்தி, முதுமைப் பருவத்தில் ஏற்படுகிற கண்புரையைத் தடுப்பதாக கண் சிகிச்சை மருத்துவர்கள் சான்று அளிக்கின்றனர்.

லிச்சி மரத்தின் விதை, பூ மற்றும் கனி ஆகியவை நமது உடல் நலனைப் பாதுகாக்கும் வகையில், பலவிதமான மருத்துவக் குணங்களைத் தன்னுள்ளே கொண்டுள்ளது.நமது உடலில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் ஆண்டி-ஆக்சிடெண்ட் இதில் ஏராளமாக உள்ளது. எனவே, அடிக்கடி நோய்வாய்ப்படுபவர்கள் இப்பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வர எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில், இந்தப் பழத்தில் உள்ள பைட்டோ கெமிக்கல்ஸ்(Phytochemicals) செல்களின் அபரித வளர்ச்சியைத் கட்டுப்படுத்தி, முதுமைப் பருவத்தில் ஏற்படுகிற கண்புரையைத் தடுப்பதாக கண் சிகிச்சை மருத்துவர்கள் சான்று அளிக்கின்றனர்.

லிச்சி பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வரும் பெண்களுக்கு, மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. மேலும், இதயம் தொடர்பான பிரச்னைகளையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு.நமது உடலில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் ஆண்டி-ஆக்சிடெண்ட் இதில் ஏராளமாக உள்ளது. எனவே, அடிக்கடி நோய்வாய்ப்படுபவர்கள் இப்பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வர எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.பெர்ரி போன்ற அழகான பிங்க் நிறம் கொண்டது லிச்சி பழம்(Lychee Fruit). வெள்ளை நிறங்களிலும் லிச்சி காணப்படுகிறது. ஆசிய கண்டத்தைச் சேர்ந்த நாடுகளில், முதன்முதலாக இனிப்பு வகைகள் செய்யப் பயன்படுத்தப்பட்ட லிச்சி பழம் முற்காலத்தில் ‘பணக்காரர்களின் பழம்’ என குறிப்பிடப்பட்டதாக வரலாற்றுச் சான்றுகள் தெரிவிக்கின்றன.

நாம் சாப்பிடுகிற உணவுப்பண்டங்களைச் செரிமானம் அடைய செய்யும் ஆற்றல் இதற்கு உண்டு. ஆகவே, இக்கனியை உணவில் தொடர்ந்து சேர்த்து வந்தால், வெயில் காலத்தில் ஏற்படுகிற வயிறு தொடர்பான அனைத்துவிதமான பிரச்னைகளில் இருந்தும் மெல்லமெல்ல குணம் அடையலாம்.
லிச்சி பழம் நமது உடலில் இருக்கின்ற ரத்தத்தின் அளவை அதிகரிக்க செய்கிறது. மேலும், இக்கனியில் உள்ள வைட்டமின்-சி உடலின் இரும்புச்சத்தை உட்கொள்ளும் ஆற்றலை கூட்டுகிறது. எனவே, ரத்தசோகை உண்டாகும் வாய்ப்பு குறைகிறது. வைட்டமின்-சி,வைட்டமின்-B6, நியாசின், ஃபோலேட், தாமிரம், பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னிசீயம் என நம்முடைய உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக காணப்படுகின்றன.

உலகின் ஒவ்வொரு நாடுகளிலும், லிச்சி கனி ஒவ்வொருவிதமாகப் பயன்படுத்தப்படுகிறது. மலேசிய நாட்டில் இதனை, நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்துவதற்குப் உபயோகப்படுத்தும் வழக்கம் காணப்படுகிறது. இந்தோனேஷிய நாட்டு மக்கள் வேறு முறையை கையாளுகின்றனர். இவர்கள் இப்பழத்தின் விதைகளைக் குடல் தொடர்பான பாதிப்புகளைச் சரி செய்ய பயன்படுத்துகின்றனர்.உடல் பருமன் ஆவதைத் தடுத்து, நம்முடைய எலும்பு மண்டலத்தைப் பலம் அடைய செய்வதில் இந்தக் கனியின் பங்களிப்பு குறிப்பிடத் தகுந்தது. சீனாவில், தேள், பூரான் போன்ற விஷப்பூச்சி கடிகளிலிருந்து குணம் அடைய, லிச்சி பழத்தின் இலைகளைச் சாறாக அரைத்துப் பூசி
வருகின்றனர்.

லிச்சிப் பழத்தில் உள்ள நியாசின் என்ற வேதிப்பொருள், ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க மிகவும் உதவி செய்கிறது.புகைப்பிடித்தல் மற்றும் பாக்கு போடும் பழக்கத்தால் ஏற்படுகிற தொண்டை பாதிப்புக்கள் அனைத்தையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது லிச்சி பழம்.நமது உடலைக் கட்டுக்கோப்பாக வைக்கப் பயன்படும் புரதச்சத்து இந்த பழத்தில் 1.1 கிராம் அளவிற்குக் காணப்படுகின்றது. இது தவிர, மக்னீசியம் 10 மில்லி கிராமும், பொட்டாசியம் 159 மில்லி கிராமும், தாமிரம் 0.30 மில்லி கிராமும் உள்ளன.லிச்சி பழத்தில் மலச்சிக்கலைச் சரிசெய்து, தசைநார்கள் சீராக இயங்க வைக்க உதவும் நார்ச்சத்து 0.5 கிராமும், நமது எலும்பு மண்டலத்தைப் பலப்படுத்தும் கால்சியம் 10 மில்லி கிராமும் வைட்டமின்-சி 31 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 35 மில்லி கிராமும், உடல் வெளுத்துப்போவதைச் சரி செய்யும் இரும்புச்சத்து 0.7 மில்லி கிராமும் உள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்களிடம் ஆண்கள் சொல்ல தயங்குகிற விஷயங்கள்! (அவ்வப்போது கிளாமர்)
Next post உலகத்திலேயே அதிக அழகான ஆண் – இந்திய நடிகர் !! (சினிமா செய்தி)