2 வாரத்தில் லட்சக் கணக்கில் சில்லறை காணிக்கை – திணறும் கோவில் நிர்வாகம் !! (உலக செய்தி)

Read Time:2 Minute, 6 Second

மகாராஷ்டிரா மாநிலத்தின் அகமது நகர் மாவட்டத்தில் உள்ளது சீரடி. இங்கு அனைத்து தரப்பு மக்களும் வழிப்படும் புகழ்ப்பெற்ற சாய்பாபா கோவில் உள்ளது. இந்த கோவில் மிகவும் புனிதமான, சிறப்பான கோவிலாக விளங்குகிறது.

இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் என நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இக்கோவிலில் சாய்பாபாவை தரிசிக்க வருபவர்கள் காணிக்கை செலுத்துவதும் வழக்கமான ஒன்று தான்.

இக்கோவில் இந்தியாவிலேயே அதிக காணிக்கைகள் வரும் கோவில்களில் ஒன்றாகும். கடந்த 2 வாரங்களில் சில்லறையாக மட்டும் 14 ரூபா இலட்சம் காணிக்கை வந்துள்ளது.

இது குறித்து சீரடி சாய்பாபா கோவில் சிஇஓ தீபக் முகலிகார் கூறுகையில், ‘கோவிலுக்கு வரும் காணிக்கைகளை வாரத்திற்கு 2 முறை எண்ணுகிறோம். ஒவ்வொரு முறையும் 2 கோடி ரூபா அளவில் காணிக்கை செலுத்தப்பட்டிருக்கும்.

இதில் சில்லறையாக மட்டும் 14 இலட்சம் ரூபா வந்துள்ளது. இந்த கோவிலின் கணக்குகள் 8 வெவ்வேறு வங்கிகளில் உள்ளது. ஆனால், சில்லறைகளை ஏற்க வங்கிகள் மறுக்கின்றன.

இந்த சில்லறை காணிக்கைகளை என்ன செய்வது அன்றே தெரியவில்லை. எனவே, நாங்கள் இது குறித்து ரிசர்வ் வங்கியில் முறையீடு செய்ய உள்ளோம். அப்போது தான் இதற்கான நிரந்தர தீர்வு கிடைக்கும்’ என கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இருளில் மூழ்கிய தென்அமெரிக்க நாடுகள்!! (உலக செய்தி)
Next post லவ் பண்றவங்களுக்கு ஃப்ரெண்டா இருக்க வேண்டிய கொடுமை இருக்கே! (மகளிர் பக்கம்)