By 22 June 2019 0 Comments

நடிகையை கடத்தி சென்று திருமணம் செய்ய நினைத்த கிரிக்கெட் வீரர்!! (சினிமா செய்தி)

காதலர் தினம் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தவர் சோனாலி. அவர் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து போராடி தற்போது மீண்டு வந்துள்ளார்.

அவர் நடித்த English Babu Desi Mem என்ற படத்தை பார்த்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் அக்தர் சோனாலி மீது காதலில் விழுந்துவிட்டாராம்.

அதன்பிறகு அவரது ரூம் முழுக்க இந்த நடிகையின் புகைப்படத்தை தான் ஒட்டி வைத்திருப்பாராம். அவரது பர்ஸிலும் சோனாலியின் புகைப்படத்தை வைத்திருப்பாராம். மேலும் சோனாலியிடம் தன்னுடைய காதலை ப்ரொபோஸ் செய்வேன், அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் அவரை கடத்தி திருமணம் செய்வேன் என அக்தர் ஒருமுறை கூறினாராம்.

இது பற்றி சோனாலியிடம் ஒரு பேட்டியில் கேட்டதற்கு, “அக்தர் என ஒருவர் இருப்பதே எனக்கு தெரியாது. நான் கிரிக்கெட் பேன் இல்லை. அவர் எனக்கு ரசிகராக இருப்பதற்கு நன்றி மட்டுமே என்னால் கூற முடியும்” என பதில் அளித்துள்ளார்.



Post a Comment

Protected by WP Anti Spam