ஜேம்ஸ் பாண்ட் படத்தில் நடிக்கிறார் ஷில்பா ஷெட்டி
பாலிவுட் நடிகையும், பிரிட்டனில் “டிவி’ மூலம் பரபரப்பை ஏற்படுத்தியவருமான ஷில்பா ஷெட்டி, ஜேம்ஸ் பாண்ட் படத்தில் நடிக்கிறார். பிரிட்டனில் “பிக் பிரதர்’ என்ற “டிவி’ நிகழ்ச்சி மூலம், அங்கு பிரபலமாகி விட்டதை அடுத்து, ஷில்பாவுக்கு வாய்ப்புகள் குவிகின்றன. வழக்கமாக, ஹாலிவுட் நடிகைகள் நடிக்கும் ஜேம்ஸ் பாண்ட் படத்தில், முதன் முறையாக ஷில்பா இடம்பெறுகிறார். ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில், 23வது படத்தை, பிரிட்டனைச் சேர்ந்த “இயான் ப்ரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் எடுக்கிறது. ஜேம்ஸ் பாண்ட் நடிகர் டேனியல் கிரேக்குடன் ஷில்பா நடிக்க உள்ளார். ஜேம்ஸ் பாண்ட் படங்களை தயாரிக்கும் நிறுவனம், ஷில்பாவை நடிக்க வைக்க, அவர் செல்வாக்கு பெற்றதால் மட்டுமல்ல, ஆசியாவில், குறிப்பாக இந்தியாவில் ஜேம்ஸ் பாண்ட் படங்கள் அதிக வசூலை அள்ளுகின்றன. அதனால், பாலிவுட் நடிகையை நடிக்க வைத்தால், இன்னும் வசூல் கொட்டும் என்பதும் காரணம். ஜேம்ஸ் பாண்ட் படத்தில், ஆசியாவை சேர்ந்த ஒரு நடிகை மட்டும் நடித்துள்ளார். அவர், மலேசிய நடிகை மிச்சேல் யோக். அவரை அடுத்து, ஷில்பாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஜேம்ஸ் பாண்ட் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஐஸ்வர்யா ராய்க்கு ஆசை ஏற்பட்டது. அதற்கான முயற்சியையும் செயதார் ஆனால், வாய்ப்பு கிடைக்கவில்லை.
Filed Under: செய்திகள்
Comments
No Comments
Leave a reply