Medical Trends!! (மருத்துவம்)

Read Time:11 Minute, 29 Second

தடுப்பூசி போடுவதில் தயக்கம் ஏன்?!

உலக சுகாதார நிறுவனம் 2019-ல் உலக மக்களின் உடல்நலத்திற்கு பெரும் சவாலாக இருக்கும் 10 காரணிகளை அறிவித்துள்ளது. அதில் தடுப்பூசி போடுவதில் உள்ள தயக்கமும் இடம் பிடித்துள்ளது. அலட்சியம், தடுப்பூசிகளை போடுவதில் உள்ள அசௌகரியம், அரசு மருத்துவத் திட்டங்கள் மீதுள்ள அவநம்பிக்கை, தடுப்பூசிகளால் பயனில்லை என்று நினைத்தல், பக்கவிளைவுகள் ஏற்படலாம் என்று நினைத்தல் போன்ற பல தவறான கருத்துகளை மக்கள் நம்புவதுதான் தடுப்பூசி தயக்கத்திற்கு காரணம் என்று இதற்கான காரணங்களையும் பட்டியலிட்டுள்ளது.

தடுப்பூசி தயக்கத்தால் அந்நோய் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கண்டறிந்துள்ளது. எனவே தடுப்பூசி போடும் மருத்துவ சேவகர்களை ஊக்குவிப்பது, அவர்களுக்கு நவீன அறிவியல் ஆய்வு தகவல்களை தருவது போன்றவற்றின் மூலமே முன்னேற்றத்தைப் பெற முடியும் என்றும் அறிவுறுத்தியுள்ளது உலக சுகாதார நிறுவனம்.

அறிவாற்றல் தரும் நட்ஸ்

நட்ஸ்களை அதிகம் உண்ணும் கர்ப்பிணிகளுக்கு நல்ல அறிவாளியான குழந்தைகள் பிறக்கிறார்கள். நினைவுத்திறன், கவனம் மற்றும் ஐ.க்யூவிலும் அக்குழந்தைகள் சிறந்து விளங்குகிறார்கள் என்று நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். European Journal of Epidemiology-ல் வெளியிடப்பட்டுள்ள ஸ்பானிஷ் ஆய்வறிக்கை இதை உறுதிப்படுத்தி உள்ளது.

நட்ஸில் நிறைந்திருக்கும் ஒமேகா 3, ஒமேகா 6 போன்ற ஃபோலிக் அமிலங்கள் மூளையின் முன்பகுதியில் உள்ள நரம்பு மண்டல திசுக்களை தூண்டிவிடுவதே இதற்கு காரணம் என்கிறார்கள். நட்ஸ் சாப்பிடுவதால் முதியோர்களுக்கு வரக்கூடிய அல்சைமர், டிமென்ஷியா போன்ற ஞாபக மறதி நோய்களிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பது போனஸ் தகவல்.

மனிதனுக்குள் நுண்ணுயிரிகள்

மனித உடலில் பல ட்ரில்லியன் கணக்கான நுண்ணுயிரிகள் வாழ்கின்றன. இதில் குடற்பகுதியில் மட்டும் 1,952 புதிய நுண்ணுயிரிகளை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

இவற்றை விஞ்ஞானிகள் வகைப்படுத்த ஆரம்பித்துவிட்டாலும், வகைப்படுத்தப்படாத நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை இன்னும் பல்லாயிரம் இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள். இத்தகைய ஆய்வுகள் உடல் ஆரோக்கியத்திற்கான காரணிகளையும், நோய்களுக்கான காரணிகளையும் விரைவாக, துல்லியமாகக் கண்டறியவும், உரிய சிகிச்சைகளை உருவாக்கவும் உதவும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இசைக்கருவிகள் செய்யும் மாயம்

இசைக்கருவிகளை இயக்க பயிற்சி எடுத்துக் கொள்வது, மூளைச் செயல்பாடு மற்றும் கட்டமைப்பை அதிகரிக்கிறது. இசைக்கருவிகளைப் பயன்படுத்தும்போது மூளையின் ஹிப்போகாம்பஸ் பகுதியில் இருக்கும் சில மோட்டார் மற்றும் செவிப்புல திறன்கள் மேம்படுகின்றன. மேலும் கற்றல் மற்றும் நினைவகத்திற்கான முக்கியமான செயல்முறையான நரம்புத்திசுக்களில் நியூரான்கள் உருவாக்கத்திற்கும் உதவிபுரிகிறது என்கிறார்கள் அறிஞர்கள்.

ஆப்பிளை சுத்தமாக்க…

தண்ணீர் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து ஆப்பிள் பழத்தைக் கழுவுவது, அதன் மேற்பரப்பிலுள்ள பூச்சிக்கொல்லிகளின் எச்சங்களை அகற்றுவதற்கு ஒரு சிறந்த வழியாக உள்ளது. அமெரிக்க சுற்றுச்சூழல் பணிக்குழு பூச்சிக்கொல்லி எச்சம் தொடர்பாக மேற்கொண்ட 48 பிரபலமான பொருள்களின் பரிசோதனையில் ஆப்பிள் மீதான பரிசோதனை நான்காவது இடத்தைப் பிடித்துள்ளதாக விவசாயம் மற்றும் உணவு வேதியியல் இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூச்சியின்றி அமையாது உலகு

மனிதர்களின் மொத்த எண்ணிக்கையைவிட 17 மடங்கு அதிகமாக பூச்சி இனங்கள் வாழ்கின்றன. இவற்றில் தற்போது 40 சதவீதம் வேகமாக அழிந்து வருவதாகத் தெரிவித்து இருக்கிறது Biological conservation இதழில் வெளியான ஆய்வு ஒன்று. தீவிர விவசாயம், நகர்ப்புறமாதல், கடுமையான பூச்சி மருந்துகள் என மனித இனம் பூச்சிகளுடன் தொடர்ந்து யுத்தம் நடத்துவதுதான் பூச்சிகளின் அழிவு தொடர்வதற்குக் காரணம். பூச்சிகளின் எண்ணிக்கை குறைய குறைய இயற்கையின் உணவுச் சுழற்சியில் தாறுமாறான நிலை ஏற்பட்டு மனிதர்களையும் அது பாதிக்கும் என்று விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இயற்கை சிகிச்சை

ஒருநாளைக்கு குறைந்தபட்சம் அரைமணி நேரமாவது இயற்கை சூழ்ந்த இடத்தில் நடக்கவோ, உடற்பயிற்சி செய்யவோ அல்லது வெறுமனே உட்கார்ந்து இருந்தால் கூட உங்கள் மன அழுத்தத்தை குறைக்க முடியும் என Frontiers in Psychology இதழில் வெளியான ஒரு ஆய்வறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. அரை மணிநேரம் இயற்கையோடு செலவழித்தால், மன அழுத்தத்திற்கு காரணமான மூளையில் சுரக்கும் கார்ட்டிசோல் அளவு வெகுவாக குறைவதை கண்டறிந்துள்ளனர்.

பாத்ரூம் சிங்கருக்கு நல்ல செய்தி!

குளிக்கும்போது பாட்டு பாடுவது சிலருக்குப் பிடித்த செயலாக இருக்கும். இதுபோல் பாத்ரூமில் பாடுவதால் மன அழுத்தம், ரத்த அழுத்தம் போன்றவை குறைந்து மனநிலை மேம்படுகிறதாம். ‘பாடும்போது அதிக ஆக்ஸிஜனை உள்ளிழுப்பதால், நுரையீரல் விரிந்து கொடுக்கிறது.

ரத்தத்தை ஆக்ஸிஜனேற்றம் செய்வதன் மூலம், கார்டிசோல் அளவு மற்றும் மன அழுத்த ஹார்மோன் அளவு குறைகிறது. ஷவருக்கடியில் பாடும்போது, மகிழ்ச்சிக்குக்காரணமான எண்டார்பின் மற்றும் பிற ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது. பாடல் வரிகள், ஸ்வரம், தாளம் போன்றவற்றை நினைவில் கொண்டுவருவதன் மூலம் நம்முடைய நினைவாற்றலும் அதிகரிக்கிறது.

வேகமாக உருகும் இமயத்தின் பனி!

சர்வதேச சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5-ம் தேதி கொண்டாடப்படும் வேளையில், இந்தியர்களுக்கு கவலை தரும் செய்தி வெளியாகி இருக்கிறது. உலகில் உள்ள மொத்த பனிப்பாறைகளில் மூன்றில் ஒரு பங்கு இமாலய பகுதியில்தான் உள்ளன.

பூமி வெப்பமயமாதல் துருவப் பகுதிகளை மட்டுமல்ல, இமயமலைத் தொடரையும் உருக்கி வருகிறது. தற்போது உள்ளபடியே வளிமண்டல வெப்பம் தொடர்ந்தால், அடுத்த 80 ஆண்டுகளில் இமயமலையை போர்த்தியிருக்கும் பனி படலத்தில் 36 சதவீதம் உருகி, பள்ளத்தாக்கு களை நோக்கி நீராய் ஓடிவிடும் என வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

அதிக தனிமையும் ஆபத்து

தனியாக வாழும் மக்களின் எண்ணிக்கை பெருகி வருவதற்குப் பல்வேறு காரணிகள் இருக்கின்றன. அதிகரிக்கும் முதியோர் மக்கள் தொகை, திருமணம் செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி, அதிகரிக்கும் விவாகரத்துக்கள் மற்றும் மலட்டுத்தன்மை போன்றவை காரணங்களாக சொல்லப்படுகின்றன.

இதனால் தனியாக வாழ்கிறவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்திருக்கிறது. இந்த அதீத தனிமை காரணமாக கவலை, மனநிலை மாறுபாடு, பொருட்களால் காயப்படுத்திக் கொள்வது போன்ற மனநலக்கோளாறுகளால் தனிமைவாசிகள் பாதிக்கப்படுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. PLOS ONE இதழில் வெளியிடப்பட்ட இந்த கட்டுரை அதிக தனிமை அதிக ஆபத்து என்பதை அழுத்தமாகக் கூறியுள்ளது.

இந்தியர்களிடம் அதிகரிக்கும் இதயநோய்

இந்தியர்களின் தவறான உணவுப்பழக்கம் காரணமாக 50 சதவிகிதம் பேருக்கு இதய நோய் ஏற்பட்டிருக்கிறது என்று அதிர்ச்சி தருகிறது சமீபத்தில் லான்சட் பத்திரிகையில் வெளியான ஓர் ஆய்வறிக்கை. உப்பு, சர்க்கரை, கொழுப்பு நிறைந்த உணவுகளை இந்தியர்கள் அதிகம் உணவில் சேர்க்கிறார்கள். இது மிகவும் தவறு. இத்துடன் காற்று மாசுபாடும் இந்தியர்களின் இதயநோயைத் தூண்டுவதற்கான கூடுதல் காரணியாக இருக்கிறது என்கிறது அந்த ஆய்வு.

நேரம் முக்கியம்!

நரம்பியல் அறுவை சிகிச்சை மேற்கொள்வதில் அது வெற்றியடையும் காரணிகள் பற்றி ஓர் ஆய்வு செய்திருக்கிறார்கள். அதில் சுவாரஸ்யமான தகவல் ஒன்று தெரிய வந்துள்ளது. இரவு 9 மணி முதல் காலை 7 மணிக்குள் நரம்பியல் அறுவை சிகிச்சைகள் நடக்கும்போது ஏற்படும் சிக்கலால் ஆபத்து ஏற்படும் வாய்ப்பு 50 சதவிகிதம் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கிறது Neurosurgery.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 12 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நடிக்க வரும் ஷில்பா!! (சினிமா செய்தி)
Next post பெண்களை தொழிலதிபராக்கும் ஃபிரான்சைஸி! (மகளிர் பக்கம்)