தமிழகத்தின் இரண்டாம்கட்ட நகரங்களிலும்கூட நமிதாவின் சல்ஸா ஜல்ஸா!
கோடம்பாக்கத்தில் மட்டுமல்ல… தமிழகத்தின் இரண்டாம்கட்ட நகரங்களிலும்கூட நமிதாவின் கவர்ச்சிக் கொடிதான் பட்டொளி வீசிப் பறக்கிறது. நடிப்பு மட்டுமல்லாமல், ஜவுளிக்கடைத் திறப்பு, பொழுதுபோக்கு மையம் திறப்பு, மஸாஜ் எண்ணெய் விளம்பரம், ஸ்பா சென்டர்கள் திறப்பு… என கிடைக்கிற கேப்களிலெல்லாம் கேஷ் பார்த்து வருகிறார் இந்த சூரத் பாம். இரு தினங்களுக்கு முன் பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் லோ ஆங்கிள் டாப்ஸ் போட்டு பத்திரிகையாளர்களையே கதிகலங்க வைத்த நமீ, இப்போது புதுசாக ஒரு கிளு கிளு ஆட்டத்தைக் கற்கத் துவங்கியுள்ளார். அதற்குப் பெயர் சல்ஸா. உடற்பயிற்சிக்கு பயிற்சியுமாச்சு, ஜாலியாக பொழுதைக் கழித்தது மாதிரியுமாச்சு… என்ற எண்ணத்தில் இந்த நடனத்தைக் கற்று வருகிறாராம் நமிதா. கிறங்க வைக்கிற சூழலில், இதமான பானமருந்திவிட்டு ஒரு நாளைக்கு நான்கு மணிநேரமென்றாலும் சளைக்காமல் ஜாலியாக இந்த நடனத்தை ஆடிக் கொண்டே இருக்கிறாராம் நமீதா. அதிலும் குறிப்பிட்ட ஒரு ஓட்டலுக்குப் போய்விட்டால் நேரம் போவதே தெரியாமல் சல்ஸாவில் மூழ்கிப் போகிறாராம். அவர் ஓட்டலில் இருக்கிறார் என்றால் குறைந்தது 50 பேராவது அந்த அரங்கை ஆக்கிரமித்துக் கொள்கிறார்களாம். ஓ… ரொம்ப சஃபகேஷனா இருக்கு… வேற ஓட்டல் மாத்ணும்… என தனது மானேஜரிடம் இப்போது செல்லமாக சிணுங்கத் தொடங்கிவிட்டாராம் நமீ…
Filed Under: செய்திகள்






Comments (2)
rathinam
August 30th, 2009 at 12:58
nameth k–di super
raja
March 12th, 2010 at 20:19
hai kutty
Leave a reply