வெனிசுலா அதிபருக்கு எதிர்ப்பு
வெனிசுலா அதிபர் சாவேசுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தியுள்ளனர். வெனிசுலா அதிபர் சாவேஸ் சமீபத்தில் 26 சட்டங்களை பிறப்பித்துள்ளார். அந்நாட்டு நாடாளுமன்றத்தின் அனுமதி இல்லாமலேயே சட்டத்தை பிறப்பிக்கும் அதிகாரத்தை பயன்படுத்திக்கொண்டு அவர் இந்த சட்டங்களை பிறப்பித்துள்ளார். இவை ஜனநாயகத்துக்கு விரோதமானவை என்றும், எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் வகையில் பிறப்பித்துள்ளது என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். சாவேஸ் கடந்த டிசம்பர் மாதம் சீர்திருத்த நடவடிக்கைகளை அறிவித்து அதற்காக பொது வாக்கெடுப்பு கோரினார். ஆனால் வாக்கெடுப்பில் அவரால் வெற்றிபெற முடியவில்லை. அப்போது முன்வைக்கப்பட்ட பல அம்சங்களை அவர் புதிய சட்டங்களின் மூலம் கொண்டு வர முயற்சி செய்வதாக வெனிசுலா எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. நேற்று நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சுதந்திரம் தேவை என்று கோஷங்களை எழுப்பினர்.
Filed Under: செய்திகள்
Comments
No Comments
Leave a reply