ஜூலையில் 38பேர்கொலை 42பேரைக்காணவில்லை -வடக்கு கிழக்கு மனித உரிமை செயலகம் அறிக்கை

வடக்கு கிழக்கு மனித உரிமைகள் செயலகம் தனது மாதாந்த அறிக்கையில் ஜூலைமாதத்தில் யாழ்ப்பாணத்திலேயே அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாகவும் கொழும்பில் அதிகம் காணாமல் போயுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது கடந்த மாதங்களைவிட ஜூலைமாதத்தில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதாகவும் எனினும் 38பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் அந்த அலுவலகத்தின் புள்ளிவிபரத் தகவல்களின்படி ஜூலை மாதத்தில் 42பேர் காணாமல் போயிருப்பது தெரியவந்;துள்ளது ஜூலை மாதத்தில் 154பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் இதில் பலர் விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் எனவும் வடக்கு கிழக்கு மனிதஉரிமைகள் செயலகம் தெரிவித்துள்ளது.

Comments

No Comments

Leave a reply

Name *

Mail *

Website