பிரபாகரன் என்ன ஆனார்???
விடுதலைப் புலிகளின் தலைமை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக பல்வேறு ஊகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு வலயப் பிரதேசத்துக்குள் உள்ள ஒரு கட்டடத்துக்குள் முக்கிய தலைவர்கள் பலரும் இருந்து அதனை வெடிக்கவைத்துத் தற்கொலை செய்துகொண்டதாக ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல்கள் பரவிவருகின்றன. புலிகளின் கதை முடிந்து விட்டது என்ற செய்தியை ஜனாதிபதியின் சகோதரரும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச ஜோர்தானிலிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு தொலைபேசி வாயிலாக அறியத் தந்ததாகவும், இதன் பின்னரே அவர் தனது பயணத்தை இடையில் முடித்துக்கொண்டு உடனடியாக நாடு திரும்பியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி மகிந்தவுக்கு தெரிவித்த தகவல்கள் தொடர்பான மேலதிக விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை. களநிலைமைகள் தொடர்பான தகவல்கள் அரசாங்கத்துக்கு இப்போது முழுமையாகத் தெரியும் எனவும், எனினும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாட்டு மக்களுக்கு அதனை உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்காக இன்னமும் இரகசியம் பேணப்பட்டு வருவதாகவும் தெரியவருகிறது.
Filed Under: செய்திகள்
Comments (6)
bala
May 18th, 2009 at 8:57
escape
mahadeva kajenthiran
May 18th, 2009 at 20:07
no way
mahadeva kajenthiran
May 18th, 2009 at 21:48
thalaivarin nilalai kuda thoda mudiyathu.
நக்கீரன்
May 19th, 2009 at 3:52
ஹிஹி ..சிரிப்பதை தவிர வேறு வழி தெரியவில்லை…
தமிழரை எளிதில் ஏமாற்றலாம் போல கிடக்கு….
நம்புங்கள்….இன்னமும் தமிழ் ஈழம் கிடைக்கும் எண்டு…….
ஆனால் அரசனை நம்பி புருஷனை கை விட்டு விட வேண்டாம்…
Aabira
May 19th, 2009 at 8:35
Haha.. He is already dead man! note it.
விதுரன்
May 19th, 2009 at 11:12
தலைவரையே சாகடிச்சாச்சு… இனி நிழலை என்னத்துக்கு…
நிழலை நீங்களே வைச்சிருங்கோ!
Leave a reply