தோல்நோயை போக்கும் கருஞ்சீரகம் !! (மருத்துவம்)

Read Time:5 Minute, 9 Second

நமக்கு அருகில் எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், சளி, இருமலை போக்க கூடியதும், தோல் நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டதும், மாதவிலக்கு பிரச்னையை தீர்க்கவல்லதுமான கருஞ்சீரகத்தின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம்.

கடைச் சரக்காக கிடைக்கும் கருஞ்சீரகம் அற்புதமான மருந்தாகி பயன் தருகிறது. சிறுநீர் பெருக்கியாக விளங்கி, வீக்கத்தை வற்ற செய்கிறது. மேல்பூச்சாக பயன்படுத்தும்போது தோல் வறட்சியை போக்குகிறது. மாதவிலக்கை தூண்டுகிறது. தாய்பால் பெருக்கியாக விளங்குகிறது. வயிற்றில் சேரும் வாயுவை வெளியேற்றுகிறது. நுரையீரல் நோய்களுக்கு மருந்தாகிறது.

கருஞ்சீரகத்தை பயன்படுத்தி சளி, இருமலை போக்கும் தேனீர் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கருஞ்சீரகம், மிளகுப்பொடி, தேன்.செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றவும். இதனுடன், லேசாக வறுத்து பொடி செய்த கருஞ்சீரகம் அரை ஸ்பூன் சேர்க்கவும். மிளகுப்பொடி சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி தேன் சேர்த்து குடித்துவர சளி, இருமல் குணமாகும். உள் உறுப்புகளை தூண்டும். ஈரலுக்கு பலம் தருகிறது. ஈரல் நோய்களை குணப்படுத்துகிறது. உடலில் பற்றும் ஒட்டுண்ணிகளை போக்கும் மருந்தாகிறது. சுவாச கோளாறுகளை போக்குகிறது.

கருஞ்சீரகத்தை கொண்டு தோலில் ஏற்படும் சொரி, சிரங்கை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கருஞ்சீரகம், தேங்காய் எண்ணெய்.செய்முறை: ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் எடுக்கவும். எண்ணெய் சூடானதும் பொடி செய்து வைத்திருக்கும் கருஞ்சீரகத்தை சேர்க்கவும். இந்த தைலத்தை ஒருநாள் முழுக்க வைத்திருந்து பின்னர் வடிகட்டி மேல் பூச்சாக பயன்படுத்தும்போது சொரி, சிரங்கு குணமாகும். நுண்கிருமிகள், பூஞ்சைகளான்களை அழிக்கும். தோல்நோய்களை போக்கும். தலையில் ஏற்படும் புண்கள், கணுக்கால்களில் அரிப்புடன் கூடிய புண்களை ஆற்றுகிறது.

கருஞ்சீரகத்தை கொண்டு மாதவிலக்கு பிரச்னையை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கருஞ்சீரகம், வெல்லம், நல்லெண்ணெய்.
செய்முறை: கருஞ்சீரக பொடி அரை ஸ்பூன் எடுக்கவும். இதனுடன் அரை ஸ்பூன் வெல்லம், ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்க்கவும். இதை நன்றாக கலந்து காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டுவர தடைபட்ட மாதவிலக்கு சரியாகும். மாதவிலக்கை தூண்டுவதுடன், மாதவிலக்கின்போது ஏற்படும் வயிற்று வலி குணமாகும்.

கருஞ்சீரகத்தை கொண்டு விக்கலை நிறுத்தும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கருஞ்சீரகம், மோர், உப்பு.செய்முறை: சிறிது மோருடன் உப்பு, கால் ஸ்பூன் கருஞ்சீரக பொடி கலந்து குடிக்கும்போது தொடர்ந்து ஏற்படும் விக்கல் சரியாகும். விக்கல் சில நேரங்களில் சிக்கலை ஏற்படுத்தும். தொண்டை வலி, மார்பு வலி, நாவறட்சி உள்ளிட்ட தொல்லைகள் ஏற்படும். கருஞ்சீரகம் இதற்கு நல்ல மருந்தாகிறது. பேன்களை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். தேவையான பொருட்கள்: காட்டு சீரகம், எலுமிச்சை. செய்முறை: காட்டு சீரகத்தில் எலுமிச்சை சாறுவிட்டு அரைத்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊறவைத்து குளித்துவர பேன்கள் வெளியேறும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்க பள்ளிகள் பற்றி தெரிஞ்சிக்கலாம் !! (வீடியோ)
Next post விக்கியின் துரத்தலும் கஜனின் ஓட்டமும் !!(கட்டுரை)