இனியபாரதி சிறுவர்களை படையில் இணைப்பதாக வெளியான குற்றச்சாட்டை மறுக்கிறார் அமைச்சர் முரளிதரன்
தமது நெருங்கிய சகாவான, இனியபாரதி சிறுவர்களை படையில் இணைப்பதாக ஐக்கிய நாடுகள் சபை, தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை, தேசிய இன ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துறை அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் மறுத்துள்ளார். தம்மை ஐ.நா.சபையின் சிறுவர் மற்றும் ஆயுதப் பயன்பாடு தொடர்பான பிரதிநிதி பற்றிக் கம்மேட் அவர்களைச் சந்தித்தபோது, இனியபாரதி அவ்வாறான சிறுவர்களை படைகளில் சேர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்பதை அவருக்கு தெரிவித்ததாக அமைச்சர் முரளீதரன் குறிப்பிட்டுள்ளார். தாம் அரசியல் நீரோட்டத்தில் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளஅமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன், சிறுவர்களை தமக்கு படைகளில் சேர்க்க வேண்டிய அவசியமில்லை எனவும், எதிர்வரும் பொதுத்தேர்தலில் இனியபாரதி, சிறீலங்கா சுதந்திரக் கட்சியின்கீழ் அம்பாறையில் போட்டியிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Filed Under: செய்திகள்
Comments (2)
Shan Thavarajah (SWISS, Bern)
February 7th, 2010 at 23:42
புலிக்கு எதிரானவர்களை பயன் படுத்தித்தான் புலி மீண்டும் உயிர் பெறப்போகின்றது என்று புலி பிரமுகர்கள் சொல்வது உண்மை தான் என்று இப்படம் நிருபித்துள்ளது. அதிர்வு என்ற இணையம் nitharsanam .comன் மறுபிறப்பு என்பது எல்லோரும் அறிந்தது.
LalKanth
February 8th, 2010 at 3:05
யாரடாப்பா இந்த சரக்கு? பார்த்ததுமே———— போச்சு
Leave a reply