சாமியாருடன் நடிகை ரஞ்சிதா படுக்கை அறை காட்சிகள்; நாடு முழுவதும் பரபரப்பு (மேலும் படங்கள்)
தமிழ் நடிகை ரஞ்சிதா, பிரபல சாமியார் நித்தியானந்தாவுடன் உல்லாசமாக இருந்த வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில் தமிழ் திரையுலகம் என்ன செய்யப்போகிறது? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. திருவண்ணாமலையை சேர்ந்த நித்தியானந்தாவின் இயற்பெயர் ராஜசேகரன். இவருக்கு தமிழகத்திலும், கர்நாடகாவிலும் ஆசிரமங்கள் உள்ளன. பெங்களூருவில் மைசூர் சாலையில் உள்ள பிடுதி பகுதியில் 200 ஏக்கர் பரப்பளவில் நித்தியானந்த தியான பீடம் என்ற ஆசிரமம் உள்ளது. இதுதான் நித்தியானந்தாவின் தலைமையகம். 32 வயதே நிரம்பிய நித்தியானந்தா, கதவை திற காற்று வரும் என்ற தலைப்பில் போதனைகளை கூறி வந்தார். லட்சக்கணக்கான பக்தர்களை கொண்டிருக்கும் அவர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. அதில் நித்தியானந்தா, அந்த நடிகையிடம் சில்மிஷங்களில் ஈடுபடுவது போலவும், உல்லாசமாக படுக்கையை பகிர்ந்து கொள்வது போலவும், தண்ணீர் கொடுப்பது போன்றும், மாத்திரை கொடுப்பது போன்றும் காட்சிகள் பதிவாகியுள்ளன. ஆனால் அந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை. நித்தியானந்தாவின் முகத்திரையை கிழித்திருக்கும் இந்த வீடியோவில் அவருடன் உல்லாசமாக இருக்கும் நடிகை ரஞ்சிதா, பாரதிராஜாவின் படத்தில் அறிமுகமானவனர்; பாரதிராஜாவின் சின்னத்திரை தொடரிலும் நடித்தவர்.
என்ன செய்யப்போகிறது தமிழ் திரையுலகம்? : நடிகை புவனேஸ்வரி விபசார வழக்கில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, பத்திரிகைகளில் வெளியான செய்தியை கண்டித்து நடந்த தென்னிந்திய நடிகர் சங்க கூட்டத்தில் பேசிய நடிகர், நடிகைகள் பலரும் ஆபாசமாக பேசி பத்திரிகையாளர்களை விமர்சித்தனர். இந்தக் கூட்டத்தில், சரத்குமார், ராதா ரவி, விஜயகுமார், சத்யராஜ், அருண் விஜய், மனோபாலா மற்றும் சில நடிகைககள், பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை தாக்கிப் பேசிய தகாத வார்த்தைகளை அச்சில் கூட ஏற்ற முடியாது. “இதுபோன்ற செய்திகளால் பாதிக்கப்பட்ட நடிகைகளின் வழக்கு செலவுக்காக, ஒரு தனி சட்ட அமைப்பை ஏற்படுத்த வேண்டும். அதற்கான முழு செலவையும் நானே ஏற்றுக் கொள்கிறேன்’ என்று நடிகர் சூர்யா கூறினார். “பத்திரிகையாளர்களை வெட்டியிருப்பேன்’ என்று விஜயகுமார் கொந்தளித்தார். “நாற்காலிக்கு கீழே கேமராவை வைத்து, நாகரிகமற்ற முறையில் படம் பிடிப்பவர்கள் பத்திரிகையாளர்கள், ஈனப்பிறவிகள் என்றும், சூர்யா குமுறினார். நடிகர் – நடிகைகளின் இந்த பேச்சு பத்திரிகையாளர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கூட்டத்தி்ல பேசிய நடிகர் சூர்யா, நடிகைகளை பாதுகாக்க சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக எவ்வளவு பணம் தேவைப்பட்டாலும் நான் கொடுக்கிறேன், என்று கூறினார்.
“சுவாமி நித்யானந்தாருடன்’ கொஞ்சும் நடிகை ரஞ்சிதா, மெய் மறந்து இருக்கும் வீடியோ காட்சிகள், தற்போது உலகம் முழுவதும் உலா வந்து கொண்டிருக்கின்றன. சினிமா நடிகை ரஞ்சிதாவுடன் சல்லாபிக்கும் காட்சிகள், ஆபாசத்தின் உச்ச கட்டம். இந்த சல்லாபம், ஒரு நாள் மட்டும் நடந்தவை அல்ல; பல நாள் நடந்தவை; இப்போது சந்திக்கு வந்துவிட்டது. நடிகர் சூர்யா, சாமியாருடன் உல்லாசமாக இருக்கும் நடிகைகளுக்கும் சட்டப்பூர்வ பாதுகாப்பு கொடுப்பாரா? எதற்கெடுத்தாலும் கண்டனக் குரல் எழுப்பி, கூட்டம் நடத்தி, கண்டன தீர்மானம் போடும் நடிகர் சங்கம், இந்த சர்ச்சைக்குரிய நடிகை மீதும் கண்டனம் தெரிவித்து நடவடிக்கை எடுக்குமா?
இதுபோன்று செய்திகள், சந்திக்கு வந்து விட்ட பிறகாவது, தமிழ்த் திரையுலம் தன்னைத் தானே சுய பரிசோதனை செய்து கொள்ளட்டும். குற்றத்தை சுட்டிக் காட்டுபவர்கள் மீது பொய் வழக்கு போடுவதற்கு முன், தங்கள் மீது விபசார வழக்குகள் பாயாமல் தடுத்துக் கொண்டால், புண்ணியம். சினிமாக்காரர்கள் சொன்னதுபோல, “அடுத்து வரும் தலைமுறையும் அவர்களது குடும்பத்தினரும் தங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள்’ என்பதை ரஞ்சிதா போன்ற நடிகைகளும் அவர்களுக்காக வக்காலத்து வாங்கிய தென்னிந்திய நடிகர் சங்கமும், இவர்களுக்காக சென்னையில் 90 ஏக்கர் வழங்கிய தமிழக அரசும் சிந்திக்கட்டும்.
பெங்களூரு: பெங்களூருலிருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் பிடுதி என்னும் ஊரில் 70 ஏக்கர் நிலப்பரப்பில் நித்யானந்தர் ஆசிரமம் அமைந்துள்ளது. நேற்று காலை 9 மணியளவில் ஜெய் கர்நாடகா அமைப்பினர் 100 பேரும், பிரவீன் குமார் ஷெட்டியின் ரக்ஷன வேதிகே அமைப்பினர் 15 பேரும் ஆசிரமத்திற்கு வந்தனர். அவர்களை ஆசிரமத்திற்குள் நுழைய போலீசார் அனுமதிக்க வில்லை. ஆசிரமத்தின் பின் பக்கம் வழியாக உள்ளே நுழைந்தனர். வாசல் பகுதியில் இருந்த நித்யானந்தரின் பேனர்கள், படங்களை கிழித்தெறிந்தனர். அப்பகுதியில் இருந்த கண்ணாடி கூண்டிலான போலீஸ் அவுட் போஸ்ட்டை அடித்து நொறுக்கினர். அந்த இடத்தில் போலீசார் அதிகமாக இருந்ததால், அதற்கு மேல் யாரும் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. இரண்டு மணி நேரம் அங்கிருந்து போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது, நித்யானந்தர் படத்திற்கு செருப்பு மாலைகளை அணிவித்தும், செருப்பால் அடித்தும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். ஆசிரம காம்பவுண்ட் சுவர் அருகிலுள்ள ஆசிரம குடிசைகள் திடீரென தீப்பிடித்தது. தீயணைப்பு வாகனங்கள் வருவதற்குள் நான்கு குடிசைகளும், அப்பகுதியிலுள்ள மரங்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின. தீப்பிடித்து எரிந்த குடிசை வீடுகளில் எரிந்த நிலையில் படுக்கைகள் காணப்பட்டன. ஒவ்வொரு குடிசையிலும் இதுபோன்ற படுக்கைகள் எரிந்து சாம்பலாகியிருந்தது. தீப்பிடித்த பகுதிகளில் பாம்புகள் கருகிக் கிடந்தது தெரியவந்தது.
சேலம்: சேலத்தில், நித்யானந்தாவுக்கு எதிராக சட்டக்கல்லூரி மாணவர்கள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநகர அமைப்பாளர் பிரவீண் குமார் தலைமையில் பெரியபுத்தூர் பகுதியில் உள்ள நித்யானந்தா தியான மடத்துக்கு 15க்கும் மேற்பட்டவர்கள் நேற்று சென்றனர். தியான மடத்தின் போர்டை, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் உடைத்து நொறுக்கினர். மடத்துக்குள் புக முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள நித்யானந்தர் ஆசிரமத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் அங்கு மக்கள் திரளாக வரத்துவங்கினர். அதனால், அங்கு அசம்பாவிதம் ஏற்படும் என்ற பீதியில் 10க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். போலீசார் அங்கிருந்த கூட்டத்தினரை கலைந்து செல்லுமாறு கூறி கலைத்தனர். அப்போது, இந்து மக்கள் கட்சியை சேர்ந்த மாவட்ட தலைவர் சிவபாபு அங்கு வந்து ஆசிரமத்தை மூடிவிட்டு, “ஆசிரமத்துக்குள் இருப்பவர்கள் அனைவரும் வெளியே செல்லுங்கள்’ என கூறி கூச்சலிட்டார். போலீசார் அவரை மடக்கி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். பின், அவரை பொது சொத்துக்கு சேதம் விளைவித்ததாகக் கூறி கைது செய்தனர்.
நித்யானந்த மடம் சார்பில் திடீர் விளக்கம்: மிகுந்த பரபரப்புக்கு இடையில் ஆஸ்ரமத்தில் இருந்த நித்ய சத்யானந்த சுவாமிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். தியான பீடத்தின் முகவரியோ, யாருடைய கையெழுத்தும் இல்லாமலே இந்த அறிக்கை இடம் பெற்றிருந்தது. மார்ச் 2ம் தேதி இரவில் வெளியான தொலைக்காட்சி ஒளிபரப்பில் இடம் பெற்ற தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது. இந்த காட்சிகள் அனைத்திலும் கிராபிக்ஸ் செய்யப்பட்டு, திட்டமிட்டு சதி செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கவுள்ளோம். விரைவில் இது குறித்து முடிவு செய்யப்படும். இந்த நேரத்தில் நாங்கள் பக்தர்களுக்கும், அபிமானிகளுக்கும் எங்களின் நிலைமையை தெளிவாக கூறுகிறோம். இதனால், மிகவும் மனமுடைந்த நிலையில் உள்ளோம். எங்களுக்கு ஆதரவாக இருக்கும் அனைத்து பக்தர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். பொது வாழ்க்கையில் ஏழு ஆண்டுகளாக நித்யானந்த சுவாமிகள், பல சேவைகளை செய்துள்ளார். பல்வேறு நாடுகளிலிருந்து 20 லட்சம் பக்தர்கள், நித்யானந்த சுவாமிகளின் ஆதரவாளர்களாக உள்ளனர். வாழ்க்கையின் தத்துவம் குறித்து பல்வேறு நாடுகளில் சுவாமிகள் விளக்கியுள்ளார். இந்த நேரத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமிகள் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். இதற்கு மேலும் இதை விளக்குவதற்கு வார்த்தைகளில்லை என்று தியான பீடத்தின் பணிகள் குறித்து நீண்ட விளக்கமளித்துள்ளனர்.













Filed Under: செய்திகள்
Comments (3)
manikkam
March 5th, 2010 at 11:49
super
nalanvirumbi..
March 8th, 2010 at 13:56
oru saamiyaar senjathu maha tappu..atu matattin peyaraal seita maha ayokkiyattanam… atu vetta velichamaagittu.. aanaal patirigaiyalargalukku aen nadidar, nadikaikalin antarangalai vetta velicha maakanum..? atu avargalin sutantirangalum, urimaigalum. avargal tappa seitaal avargalae paatippadaivaargal or tiruntuvaargal.ulagam mulukka paarkum patirikaikalil poattu avargalai talai kuniya vaikkanum.. utaranama oru patirikaiyaalarin manaivi or kanavan aeto tappu senja atai poaduvaargalaa..? atayavathu sintikka vaendum.. nadippu oru tolil, avargalin ulaippu.. aen inta pattirikaiyaalargal talaiyidanum? ithu varuttatukkuriya visayam..
seetha
March 10th, 2010 at 19:27
ellorum manitharkal than samitarum manithar than yarum thirumanamakamal irunthal silasamayam mattam eetpadum benkal bakathil irunthal marum yarum
orunalum penudam irunthal thabbu seiyamal irukka maddarkal kavi uduppu poddal ponu bakkathil nikkum pothu manam maralam nankal elumpalum thasaiyalum seitha udambai koddu nature allam irukkum athai kurrai solli saddam marukka mudiyathi venum enral evatudan pesi mudivu adukkalam
vayathu vantha 2 per sernthal kuttam illai muder . kalavueduththal
kattpu alypu than thappu
Leave a reply