ஜனாதிபதி மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயரைப் பயன்படுத்தி மோசடி -திவயின தெரிவிப்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட 10 சம்பவங்கள் குறித்து முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது. திட்டமிட்ட மோசடியில் ஈடுபட்டு வருவதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதியின் பெயரைப் பயன்படுத்தி குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து விசாரணை நடத்த விஷேட காவல்துறை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது. அரசாங்க தொழில் பெற்றுக் கொடுத்தல் விலைமனுக் கோரலில் சாதகத்தன்மையை ஏற்படுத்தல் இடமாற்றம் பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் மற்றும் வரப்பிரசாதங்களை வழங்குவதாக தெரிவித்து மோசடிகள் இடம்பெற்றுள்ளன. இந்த சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க காவல்துறையிடம் கோரியுள்ளார். இவ்வாறான நபர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றால் காவல்துறையினருக்கு உடனடியாக அறிவிக்குமாறு மக்களிடம் கோரப்பட்டுள்ளது

Comments (1)

kajan mahadeva

March 10th, 2010 at 15:21    


மனித உரிமைகளை காலில் போட்டு மிதித்து இனவெறியாட்டம் போட்ட ராஜபக்சேவின் அடக்குமுறைகளை, அநியாயங்களை, குருதி வெறியை சிதறடித்து அந்த பேரினவாதியின் குடைசாய்க்க எலி, புலிகள் முன் கருவியேந்த வேண்டியதில்லை. நமது தேசிய தலைவரின் ஆன்ம பலமே அந்தக் கொடுங்கோலனை வீழ்த்த போதுமானது. சரத்பொன்சேக கைது செய்யப்பட்டதைக் கண்டித்து லண்டனில் செயல்படும் மனித உரிமை ஆணையம் ராஜபக்சேவின் ஜனநாயக படுகொலையின் கோரமுகம் மீண்டும் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறது.

நமது தேசியத்தலைவரும், தமிழீழமக்களும், இணைந்து குரலெழுப்பி அறிவித்த போது, அறியாமல் வாழ்ந்த உலகச் சமுதாயம், இப்போது குருதி கொடுத்த டிராகுலாவின் கொடூர குணத்தை அறிந்து வருகிறது. இப்போது உலகிற்கு தெரியும், நமது தேசியத் தலைவரின் ஆன்ம பலம்.

Leave a reply

Name *

Mail *

Website